Wednesday, April 16, 2008

ஆடு நினையுதேனு ஓநாய் அழுகுது....

கோவை: பங்கு சந்தை வணிகத்தில் பிற மதத்தினர் முதலீடு செய்வதை அரசு கண்காணிக்க வேண்டும் என இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் கூறினார்.


கோவையை அடுத்த துடியலூரில் ராமகோபாலனுக்கு இந்து முன்னணி சார்பில் சதாபிஷேக விழா நடத்தப்பட்டது.அதில் கோவை வடக்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் ராம கோபாலனுக்கு ரூ.81,000க்கான பண முடிப்பு வழங்கப்பட்டது.அதைப் பெற்றுக் கொண்ட ராமகோபாலன் பேசியதாவது:தமிழ்நாட்டில் அனைத்து இந்துக்களின் வீடுகளில் ராமாயணம், மகாபாராதம்,பகவத் கீதை போன்ற சமய நூல் வாங்கி வைப்பதோடு மட்டுமல்லாமல் அதை கண்டிப்பாக படிக்க வேண்டும்.


மதமாற்ற தடுப்புச் சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.மதமாற்றத்தை பொதுமக்கள் விழிப்புணர்வுடன் எதிர் கொள்ள வேண்டும். பசுவதை தடை செய்ய வேண்டும். பசுக்களை போற்றி வளர்க்க வேண்டும்.


இந்துக்களுக்கு கிடைக்க கூடிய இடஒதுக்கீட்டை பிற மதத்தை சேர்ந்தவர்கள் பயன்பெறும் வகையில் இடஒதுக்கீடு அமைந்துள்ளதை மாற்ற வேண்டும்.


பிற மதத்தினர் பங்கு சந்தை வணிகத்தில் முதலீடு செய்வதை அரசு கண்காணிக்க வேண்டும்.என்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுகிறார்கள். இதற்கு நான் கவலைப்படுவது இல்லை. நான் சேவை செய்யும் போது உயிர்விட ஆசைப்படுகிறேன் என்றார்.


நன்றி -தட்ஸ்தமிழ்.காம்


நம் நாட்டில் சென்சஸ் கணக்கு படி வறுமை கோட்டிற்கும் கீழ் அதாவது வீடு வாசல் இல்லாமல் இருப்பவர்கள் 27 சதவிகத மக்கள், அதே போல் 39 சதவிகத மக்கள் இன்னும் கல்வி அறிவற்றவர்களாக இருக்கிறார்கள். கணக்குப்படியே 39 என்றால் உண்மையில் கட்டாயம் அதற்கு மேல் இருக்கும். நிலைமை இப்படி இருக்க எல்லோரு வீட்லயும் ராமாயணமும், மகாபாரதமும் வச்சு படிக்கணுமாம்.


வீடுக்கும், படிப்புக்கும் வழி சொல்லுங்க சாமிகளா அப்புறம் இதெல்லாம் பாக்கலாம்..


இட ஒதிக்கீட்டை பற்றியெல்லாம் பேச ராமகோபாலனுக்கு போன்றோருக்கு என்ன அருகதை இருக்கிறது என்று தெரியவில்லை? இதுல மற்ற மதத்தினர் பயன் பெற கூடாதாம். என்ன நயவஞ்சகம்... ஒதிக்கீடே வேணாம்னு சொன்னவர்களுக்கு இப்பொது என்ன திடீர் பாசம், அக்கறை?. "ஆடு நினையுதேனு ஓநாய் அழுகுது.... "

அய்யா சாமி உங்கள் பாசத்தை எல்லா இந்துக்களை சரிசமாய் நடத்துவதில் காமியுங்கள் அப்புறம் அக்கறை படலாம் இட ஒதிகீட்டை பற்றி.

சேவை செய்யும்போதே உயிர் போய்விட வேண்டுமாம் (பணமுடிப்பு வாங்குனதுல உணர்ச்சி வசப்பட்டு பேசிட்டார் போல). பாவம் அவர் நினைக்கிற மாறி சாவு அவருக்கு அமையாது ஏன்னா இவர் என்னைக்கு சேவை செஞ்சிருக்கார் இனிமே செய்ய?. இவரினால் மக்களுக்கு ஒரு பிரயோஜனம் இருக்கா? ஒரு தமிழனுக்காவது இருக்கா? மெச்சுற மாறி உதவின்னு எதாவது செய்திருக்காரா? சுனாமி வந்துச்சு, இயற்கை அழிவுகள் பல வந்துச்சு இவரும் இவர் கட்சியும் ஒரு இடத்துல எதாவது உதவி செய்திருகிரார்களா? ஒண்ணும் கிடையாது.. இதுல சேவை செய்யும் போது உயிர் போகணுமாம்..

அய்யா சாமி உங்க திருவாயா மூடிகிட்டு இருந்து மத்தவன் உயிரை எடுக்காம இருங்க மொதல அப்புறமா நீங்க சேவை செய்யும் போது உயிரை விடுங்க, சேமியா செய்யும்போது உயிரை விடுங்க...

0 comments: