Sunday, April 13, 2008

அகதியாகி போன அன்னை... இடி வாங்கிய இருதயநாதர்....

நன்றி - தமிழீழ தேசிய தொலைகாட்சி...

பௌத்த சிங்கள இனவாத அரசின் இழிவான, பேடிதனமான போறேடுப்பினால் மடு மாதா ஆலயம் தாக்கப்பட்டு இன்றைக்கு அன்னையே அகதியாய் நிற்கிறாள். மாதாவோடு சேர்ந்து மடு பிரதேசத்திலிருந்து 12,000-க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மடுவுக்கு வடக்காக ஏ-32 வீதியில் மன்னார்- பூநகரி நெடுஞ்சாலையை அண்மித்த கிராமங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். தமிழின அழிப்பில், பண்பாடு அழிப்பில், மொழி அழிப்பில் ஈடுபடும் பௌத்தத் அரசின் உண்மையான கோர முகம் மீண்டும் இப்போது நடந்த ஆலய தாக்குதலால் வெளிப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து போர் விதிகளை மீறி ஆலயமீதும், பாடசாலைகள் மீதும் சிங்கள இராணுவம் தாக்குதல் தொடுத்துக்கொண்டே வருகிறது. யாழ் நூலகம் ஆரம்பித்து செஞ்சோலை தொடர்ந்து இன்று மடு மாதா ஆலயம் வரை சொல்லி கொண்டே போகலாம். கண்டதுக்கெல்லாம் குரல் கொடுக்கும் சர்வதேச சமூகம் இதற்க்கு வாய் மூடி அமைதியாய் இருப்பது ஏன்?

சமய ஒற்றுமை, சகோதரத்துவம், சோசலிசம் பேசும் இந்தியா இதற்க்கு வாய் மூடி இருப்பது ஏன்?... சிறுபான்மையினரின் காவல், மதசார்பற்ற அரசு என்று கூவி ஒட்டு வாங்கும் கட்சிகள் எங்கே போனார்கள்?
எங்கே போனது நடுநிலைமை?.
எங்க போனது மத கோட்பாடு?..
எங்க போனது நியாயகுரல்கள்?..
சரி இவர்களை விடுவோம் கிருஸ்துவர்களின் தலைநகரம் வாடிகனில் இருந்து கூட கண்டன குரல் வரவில்லையே ஏன்?. மதவையும் கிறிஸ்துவை வைத்து பொழப்பு நடத்துவோர் கூட எதிர்த்து பேசவில்லையே ஏன்?

ஓட்டுக்கும், பொழப்புக்கும் மட்டும்தான் மதமா?.

0 comments: