Thursday, April 17, 2008

இலங்கையால் இந்தியாவிற்கு ஆபத்து...

இலங்கைக்கும் சீனாவிற்கும் ஆன நெருங்கிய உறவு தொடர்பு இலங்கை இந்திய உறவுகளில் தாக்கம் செலுத்தியுள்ளதை ஸ்ரீலங்கா அரசாங்கம் மறைமுகமாக ஏற்றுக் கொண்டுள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஸ்ரீலங்கா ஜனாதிபதியின் அண்மைய சீன விஜயம் குறித்து அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் விளக்கமளித்திருந்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது செய்தியாளர்களால் எழுப்பப்பட்ட சாதாரண கேள்விகளுக்கு மிக பொறுமையாக அமைச்சர் பீரிஸ் பதில் அளித்திருந்தார். சில செய்திளார்கள் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நெருக்கமான உறவு இந்தியாவை சீற்றமடைய வைத்துள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய போது அதற்கு பதிலளிக்க மறுத்த அமைச்சர் உடனடியாக செய்தியாளர் சந்திப்பில் இருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கை இந்திய உறவில் விரிசல் நிலை ஏற்பட்டுள்ளமை தெளிவகா தென்படுவதாகவும் எனினும் அது குறித்து கருத்து வெளியிட்டு நிலைமைகளை மோசமாக்க விரும்பாமடலே அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் .இருந்து வெளியேறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கை சீன உறவுகள் குறித்தும் மகிந்த ராஜபக்சவின் சீன விஜயம் குறித்தும் இந்திய தரப்பிற்கு விளக்கமளிப்பதற்கு மகிந்த ராஜபக்சவின் சிறப்பு பிரதிநிதி ஒருவர் விரைவில் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டவுள்ளதாக தெரியவந்துள்ளது.
நன்றி - யாழ்.காம்
இந்தியாவிற்க்கு என்றைக்குமே சீனா ஒரு அச்சுறுத்தல் தான். அந்நாட்டுடன் உறவில் உள்ள எந்த நாடும் நமக்கு எதிரி நாடே. இலங்கை இப்பொது அந்நாட்டுடன் மிக நெருங்கி வருகிறது. சீனா உதவதற்கு ஒரே காரணம் இந்தியாவை அச்சுறுத்த வேண்டும் என்ற நோக்கம் தான் ஒழிய வேறொன்றும் இருக்க முடியாது. இதே போல் தான் பாகிஸ்தானோடும் நெருக்கம் காட்டி வருகிறது. இந்தியாவிற்கு பேரழிவை ஏற்படுத்தும் நோக்கத்துடனே இலங்கை நடந்து வருகிறது, பாதுகாப்பற்ற சூழலையும் உருவாக்கி வருகிறார்கள்

இந்தியா இப்போதாவது இலங்கையின் சுயநலபோக்கை புரிந்து கொண்டு அந்நாட்டுடன் இருக்கும் பாரிய உறவை நிறுத்தி அதை கண்காணிக்க வேண்டும். தமிழர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு அழுத்தம் கொடுக்க வேண்டும். ஈழத்தமிழர்கள் இந்தியாவை தந்தை நாடென்று போற்றி மதித்து வருகிறார்கள். அதை புரிந்து கொண்டு தமிழீழ மலர இந்தியா வழிவகுத்தால் என்றுமே அவர்கள் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அரணாக விளங்குவார்கள் என்பதில் ஐயமில்லை...

1 comments:

தமிழன் said...

மிகவும் சரியான கருத்து, நம் அரசாங்கத்துக்கு சூடு சொரணை கிடையாது என்று உங்களுக்கு தெரியாத, எப்பொழது திபெத் விவகாரத்தில் அந்தர் பல்டி அடித்ததோ அன்றே முடிவு செய்து விட்டேன் இன்னும் கொஞ்சம் நாளில் இவர்களே கூப்பிட்டு அருணாச்சல பிரதேச பகுதியை கொடுத்து விடுவார்கள்