Sunday, April 27, 2008

அவன் ________ குடிடா........


அனைவருக்கும் சமத்துவமாக கல்வி வழங்குவதே தேசியத் தலைவரின் பெருவிருப்பு: பா. நடேசன்


அனைவருக்கும் சமத்துவமாக கல்வியை வழங்க வேண்டும் என்பதில் தமிழீழத் தேசியத் தலைவர் பெருவிருப்பு கொண்டுள்ளார் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.



கிளிநொச்சியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தர தேர்வில் சித்தி எய்திய மாணவர் மதிப்பளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:தமிழ் மாணவர்களின் கல்வியை சிங்கள அரசு அழிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றது. ஆனால் எமது போராட்டம் போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நெருக்கடியான சூழலிலும் தமிழீழத் தேசியத் தலைவரின் உயரிய திட்டங்களுடன் மாணவர்களின் கல்வியை வளப்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. நகர, கிராம மாணவர்கள் என்ற வேறுபாடின்றி எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்பது எமது தேசியத் தலைவரின் பெரு விருப்பமாகும்.


தலைவரின் எண்ணங்களுக்கு அமைவாக மாணவர்களின் கல்வியை உயர்த்துவதற்கு நாமும் செயற்பட்டு வருகின்றோம். ஆனால் சிறிலங்கா அரசானது தமிழ் மாணவர்களின் கல்வியை சிதைத்து விடுதலைப் போராட்டத்திலிருந்து இளைய தலைமுறையை விலக்கி வைப்பதற்கு முயற்சி செய்து வருகின்றது. அதற்காக பல தடைகளையும் ஏற்படுத்தி வருகின்றது. சிங்கள அரசின் தடைகளை தகர்த்து எறிந்து மாணவர்கள் கல்விப் பாதையில் முன்னேறிச் செல்ல வேண்டும். போர்ச் சூழலை நாம் காரணங்களாக கூறிக்கொண்டிருக்க முடியாது. நம்பிக்கையுடன் கல்வியில் மாணவர்கள் அக்கறை செலுத்தி முன்னேற வேண்டும் அதற்காக எமது விடுதலை அமைப்பு, மாணவர் அமைப்பின் ஊடாக சாந்தி, தேவன், மாறன் போன்ற பல இல்லங்கள் ஊடாக கல்விக்கு பெரும் பங்காற்றி வருகின்றது என்றார் பா.நடேசன்.


இந்தியாவில் பல ஏற்ற தாழ்வுகளையும், சமூக முன்னேற்ற தடைகளையும் போக்கும் என நம்பப்படும் ஆனால் பல வருடங்களாக நடைமுறை படுத்தப்படாமல் இருக்கும் சமச்சீர் கல்வி முறையை இந்தியாவிற்கு முன்னோடியாக தமிழின தலைவர் பிரபாகரன் தமிழீழத்தில் நடைமுறை படுத்த போகிறார்...

தன் மக்கள் மீதும், தன் இனத்தின் மீதும், தன் மொழியின் மீதும், தன் மண் மீதும் பற்றுள்ள ஒரு மகத்தான தலைவரை, வழிகாட்டியை பெற்றிருக்கும் தமிழீழம் புண்ணியம் பண்ணிய பூமி...

எங்க ஊர்ல நல்லா படிக்காதவனையோ இல்ல நல்லா வேலை பார்க்காதவனையோ நல்லா பன்னுபவனோடு ஒப்பிட்டு "அவன் ________ குடிடா, அப்போவது அவன் போல அறிவு வருதான்னு பாக்கலாம்" சொல்லி திட்டுவார்கள்... அது தான் என் நியாபகத்துக்கு வருது இப்போ...

1 comments:

தமிழன் said...

உண்மையில் தன்மான தமிழனை பெற்றுள்ள தமிழீழம் புண்ணிய பூமியே.தமிழகத்தில் பலருக்கு பயம் எங்கே ஈழம் உதித்தால் தங்கள் முக்கியத்துவம் குறைந்துவிடும் என்று வாழ்க அந்த நல்ல உள்ளங்கள்.