Tuesday, April 29, 2008

என்னை கவர்ந்த பாடல்கள்...











Get this widget Track details eSnips Social DNA



Get this widget Track details eSnips Social DNA






நான் ரசிக்கும் என் இளையராஜாவின் இனிய அரிய கானங்கள்...

Sunday, April 27, 2008

அவன் ________ குடிடா........


அனைவருக்கும் சமத்துவமாக கல்வி வழங்குவதே தேசியத் தலைவரின் பெருவிருப்பு: பா. நடேசன்


அனைவருக்கும் சமத்துவமாக கல்வியை வழங்க வேண்டும் என்பதில் தமிழீழத் தேசியத் தலைவர் பெருவிருப்பு கொண்டுள்ளார் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.



கிளிநொச்சியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தர தேர்வில் சித்தி எய்திய மாணவர் மதிப்பளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:தமிழ் மாணவர்களின் கல்வியை சிங்கள அரசு அழிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றது. ஆனால் எமது போராட்டம் போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நெருக்கடியான சூழலிலும் தமிழீழத் தேசியத் தலைவரின் உயரிய திட்டங்களுடன் மாணவர்களின் கல்வியை வளப்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. நகர, கிராம மாணவர்கள் என்ற வேறுபாடின்றி எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்பது எமது தேசியத் தலைவரின் பெரு விருப்பமாகும்.


தலைவரின் எண்ணங்களுக்கு அமைவாக மாணவர்களின் கல்வியை உயர்த்துவதற்கு நாமும் செயற்பட்டு வருகின்றோம். ஆனால் சிறிலங்கா அரசானது தமிழ் மாணவர்களின் கல்வியை சிதைத்து விடுதலைப் போராட்டத்திலிருந்து இளைய தலைமுறையை விலக்கி வைப்பதற்கு முயற்சி செய்து வருகின்றது. அதற்காக பல தடைகளையும் ஏற்படுத்தி வருகின்றது. சிங்கள அரசின் தடைகளை தகர்த்து எறிந்து மாணவர்கள் கல்விப் பாதையில் முன்னேறிச் செல்ல வேண்டும். போர்ச் சூழலை நாம் காரணங்களாக கூறிக்கொண்டிருக்க முடியாது. நம்பிக்கையுடன் கல்வியில் மாணவர்கள் அக்கறை செலுத்தி முன்னேற வேண்டும் அதற்காக எமது விடுதலை அமைப்பு, மாணவர் அமைப்பின் ஊடாக சாந்தி, தேவன், மாறன் போன்ற பல இல்லங்கள் ஊடாக கல்விக்கு பெரும் பங்காற்றி வருகின்றது என்றார் பா.நடேசன்.


இந்தியாவில் பல ஏற்ற தாழ்வுகளையும், சமூக முன்னேற்ற தடைகளையும் போக்கும் என நம்பப்படும் ஆனால் பல வருடங்களாக நடைமுறை படுத்தப்படாமல் இருக்கும் சமச்சீர் கல்வி முறையை இந்தியாவிற்கு முன்னோடியாக தமிழின தலைவர் பிரபாகரன் தமிழீழத்தில் நடைமுறை படுத்த போகிறார்...

தன் மக்கள் மீதும், தன் இனத்தின் மீதும், தன் மொழியின் மீதும், தன் மண் மீதும் பற்றுள்ள ஒரு மகத்தான தலைவரை, வழிகாட்டியை பெற்றிருக்கும் தமிழீழம் புண்ணியம் பண்ணிய பூமி...

எங்க ஊர்ல நல்லா படிக்காதவனையோ இல்ல நல்லா வேலை பார்க்காதவனையோ நல்லா பன்னுபவனோடு ஒப்பிட்டு "அவன் ________ குடிடா, அப்போவது அவன் போல அறிவு வருதான்னு பாக்கலாம்" சொல்லி திட்டுவார்கள்... அது தான் என் நியாபகத்துக்கு வருது இப்போ...

Wednesday, April 23, 2008

கர்நாடக போதைக்கு ஊறுகாய் தமிழகம்!

ஒகேனக்கல் பிரச்னை 'அடைமழை விட்டாலும் செடிமழை விடாத' கதையாக இன்னும் தொடர்கிறது!


மே 10-ம் தேதி கர்நாடகத்தில் சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், பெங்களூருவைத் தலைமைய கமாகக் கொண்டு கர்நாடகா மற்றும் தமிழகத்தில் இயங்கி வரும் 'தனித்தமிழர் சேனை' அமைப்பு அங்குள்ள அரசியல்வாதிகளின் சுயரூபத்தைத் தோலுரித்துக் காட்டத் தயாராகிவருகிறது!


அந்த அமைப்பின் நிறுவனர் நகைமுகன் அதுபற்றி நம்மிடம் விரிவாகப் பேசினார். ''ஆரம்பத்திலிருந்து கவனித்துப் பார்த்தாலே தெரியும். காவிரிப் பிரச்னை எழும்போதெல்லாம், ஒன்று... கர்நாடகத்தில் தேர்தல் வரும் நேரமாக இருக்கும். அல்லது, அங்கு ஆளுங்கட்சிக்கு வேறு ஏதாவது பெரிய பிரச்னை புகையத் தொடங்கியிருக்கும். இம்மாதிரி சந்தர்ப்பங்களிலிருந்து கர்நாடக மக்களையும்


எதிர்க்கட்சிகளையும் திசைதிருப்பவே காவிரிப் பிரச்னை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மற்றபடி, கர்நாடகத்தில் எஸ்.எம்.கிருஷ்ணா, தேவகவுடா, எடியூரப்பா, வாட்டாள் நாகராஜ், இன்னுமுள்ள துண்டு துக்கடா அரசியல்வாதிகள் யாருக்குமே கர்நாடக மக்கள் மீது உண்மையான அக்கறை இல்லை.


காவிரிப் பிரச்னைக்கு இணையாக கர்நாடகத்தில் பல நிரந்தரப் பிரச்னைகள் காலங்காலமாக இருந்துவருவது தமிழக அரசியல்வாதிகள் பலருக்குத் தெரியாது. தமிழகத்தில் 80 சதவிகிதத்தினர் தமிழர்கள்; கேரளாவில் 70 சதவிகிதத்தினர் மலையாளிகள்; ஆந்திராவில் 66 சதவிகிதத்தினர் தெலுங்கர்கள்; ஆனால், கர்நாடகத்தில் 40 சதவிகிதம் மட்டுமே கன்னடர்கள் இருக்கின்றனர். மீதமுள்ள 60 சதவிகிதத்தினர் கன்னடர் அல்லாதோர். அதில், பெரும்பான்மையாக 28 சதவிகிதம் தமிழர்கள். கூர்க் பகுதியில் (குடகு மலைப்பகுதி) கொடவா மொழி பேசும் மக்கள், மங்களூர், உடுப்பியில் துளு மொழி பேசும் மக்கள், பெல்காம் பகுதியில் மராட்டி மொழி பேசும் மக்கள் மற்றும் கர்நாடகாவின் பல பகுதிகளிலும் தெலுங்கு, மலையாளம் பேசும் மக்கள் உள்ளனர்.


இவர்களுக்கும் மாநில அரசுக்கும் பல்வேறு பிரச்னைகள் எப்போதும் புகைந்தவண்ணம் இருக்கிறது. பெல்காம் (மகாராஷ்டிர எல்லைப் பகுதி) பகுதியில் கர்நாடகாவுக்கும் மகாராஷ்டிராவுக்கும் எல்லைப் பிரச்னை இருக்கிறது. இந்தப் பிரச்னையில் சிவசேனாவும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ§ம் கர்நாடகத்தை பகிரங்கமாகவே கண்டித்துவருகின்றன. மகாராஷ்டி ரத்தில் 'மகாராஷ்டிரா ஏகிகரன் சமிதி' (Maharastra Ekikaran Samiti) என்ற அமைப்பு கர்நாடகத்திலுள்ள சில பகுதிகளைக் கேட்டுப் போராடிவருகிறது. இதற்காக சில ஆண்டுகளுக்கு முன் 'மகாஜன் கமிட்டி' அமைக்கப்பட்டு, அந்த கமிட்டியும் சில பகுதிகளை இரு மாநிலங்களும் பரஸ்பரம் மாற்றிக் கொடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிக்கை சமர்ப்பித்தும், கர்நாடக அரசின் அலட்சியத்தால் இதுவரை இப்பிரச்னை தீர்க்கப்படவில்லை


மங்களூர், உடுப்பி உள்ளிட்ட பகுதிகளில் பெரும் பான்மையாக வசிக்கும் துளு மொழி பேசும் மக்கள், பல ஆண்டுகளாக தங்களுக்கென தனிநாடு கேட்டுப் போராடி வருகின்றனர். அவர்கள் போராடுவதற்கும் நியாயமான காரணம் இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு என்று திராவிட மொழிகள் ஐந்து. மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது துளு பேசுபவர்களுக்கு மட்டும் தனி மாநிலம் தரப்படவில்லை. இதனால், அவர்கள் 'துளுநாடு சேனா' என்ற அமைப்பை நிறுவிப் போராடிவருகின்றனர். கொடவா மொழி பேசும் மக்கள் குடகு நாடு கேட்டுப் போராட்டம் நடத்துகிறார்கள்'' என்று சொல்லிக்கொண்டே வந்த நகைமுகன், தமிழர் பிரச்னைக்கு வந்தார்- ''கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்த கொள்ளேகால் அநியாயமாக முன்பு மைசூருடன் இணைக்கப்பட்டு விட்டது. இப்படி இன்னும் பல பகுதிகளைச் சொல்லலாம். இதை எல்லாம் நாம் திருப்பிக் கேட்டால் கர்நாடகம் தாங்குமா?


இப்படித் தங்கள் மாநிலத்துக்குள்ளும், பிற மாநிலங் களிடமும் இருக்கும் பிரச்னைகளைத் தேர்தல் நேரத்தில் மறக்கடித்து திசைதிருப்ப ஒவ்வொரு முறையும் காவிரிப் பிரச்னை எழுப்பப்படுகிறது. கர்நாடகாவில் கன்னடர்களுக்கு அடுத்து மெஜாரிட்டியாக இருக்கும் தமிழனை அடித்து நொறுக்கி, அவனை பயம் கொள்ளச் செய்துவிட்டால் தனி மாநிலம் கேட்கும் மற்ற மொழி பேசும் மக்கள் பயந்துகொண்டு தாங்களாகவே அடங்கி விடுவார்கள் என்று நினைக்கிறது கர்நாடகம். இந்த நிலையில், தமிழகத்திலுள்ள அரசியல்வாதிகள் அலட்சியமாக உள்ளனர்.


இதனால் நாங்கள் களத்தில் இறங்கியுள்ளோம். ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டத்தை நிறுத்தவோ, ஒத்திப்போடவோ எந்த அரசியல்வாதிக்கும் உரிமை யில்லை என்பதை சட்ட விதிமுறைகளின் ஆதாரங்க ளுடன் விளக்கி, தேசிய மனித உரிமை ஆணையம், தமிழ் நாடு மனித உரிமை ஆணையம் மற்றும் கர்நாடகா மனித உரிமை ஆணையம் ஆகியவற்றிடம் மனுத் தாக்கல் செய்துள்ளோம். இதில் நியாயம் கிடைக்கும்வரை ஓயமாட்டோம்'' என்று அனல் தெறிக்க முடித்தார் நகைமுகன்!

தொண்டை வரள சத்தம் போடுகிறோம்.தவிச்ச வாய்க்குத் தண்ணீர் கிடைத்தால் சரி!


தண்ணீர்ப் பிரச்னை மட்டுமின்றி, கர்நாடக தேர்தல்களின்போது வாக்குச் சீட்டுக்களில் தமிழ் இடம் பெற வேண்டும் என்றும் 'தனித்தமிழர் சேனை' போராடி வருகிறது. இதுகுறித்து நகைமுகன் நம்மிடம், ''தமிழகத்தில் உடுமலைப்பேட்டை பகுதியில் தெலுங்கிலும், கிருஷ்ண கிரி, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் கன்னடத்திலும், நாகர்கோவில் பகுதியில் மலையாளத்திலும் ஓட்டுச் சீட்டு அச்சடிக்கப்படுகிறது. கர்நாடகத்தில் கன்னடர்களுக்கு அடுத்தபடியாக அதிகம் வசிக்கும் தமிழர்கள் இருக்கும்போது, அங்கு தமிழிலும் ஓட்டுச் சீட்டு அச்சடிக்கப்படுவதுதான் நியாயம். இதுகுறித்து கர்நாடகா மற்றும் தேசிய தேர்தல் கமிஷனிடம் மனு அளித்துள்ளோம். தேவைப்பட்டால் நீதிமன்றத்தை அணுகவும் தயாராக இருக்கிறோம்'' என்றார்.


நன்றி - ஜூனியர் விகடன்.



இவ்ளோ பிரச்னையை வைத்துக்கொண்டே கர்நாடகம் இந்த ஆட்டம் போடுதே. அதெல்லாம் இல்லேன்னா இந்நேரம் தமிழனை குழி தோண்டி பொதைத்திருப்பார்கள்.நகைமுகன் போன்ற தமிழ் உணர்வாளர்கள் இருக்க போய் தான் கர்நாடக தமிழன் இந்த அளவுக்காவது பாதுகாப்போடு இருக்கான். தொடரட்டும் அவர் பணி.... வாழ்க அவர் தொண்டு...

Friday, April 18, 2008

உலகத் தமிழர்களுக்கு ஒரு கடிதம்.......

(கண்கள் நிறையக் கனவுகளோடும், துள்ளி விளையாடிய கால்களில் ஷெல்அடித்த ரணங்களின் வலியோடும் அகதி முகாமில் வாடும் புலம்பெயர்ந்த ஈழக் குழந்தையின் கிழிந்து போன சட்டைப்பைகளில் இருந்த உடைந்த பென்சிலின் ஒட்டுத்துண்டில் இந்தக்கடிதம் எழுதப்படுகிறது)
நலமுடன் இருக்கிறீர்களா? உலகத் தமிழர்களே? குண்டு விழாத வீடுகளில், அமெரிக்காவுடனான அணுகுண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது பற்றி அளவளாவிக் கொண்டிருப்பீர்கள், இடைஞ்சலான நேரத்தில் கடிதம் எழுதுகிறேனா?
எனக்குத் தெரியும், என் வீட்டுக் கூரையில் விழுந்த சிங்களவிமானத்தின் குண்டுகள் என்னைப் போல பல்லாயிரக்கணக்கான தமிழ்க்குழந்தைகளை அநாதை ஆக்கிய போது, நீங்கள் எதாவது நெடுந்தொடரின் நாயகிக்காகக் கண்ணீர் விட்டுக் கரைந்திருப்பீர்கள்......
எண் அம்மாவும் அப்பாவும் அரைகுறையாய் வெந்து வீழ்ந்தபோது, உங்கள் வீட்டு வரவேற்ப்பறைகளில் அரைகுறை ஆடைகளுடன் அக்காமாரெல்லாம் ஆடும் " மஸ்தானா, மஸ்தானாவின்" அரையிறுதிச் சுற்று முடிவுக்கு வந்திருக்கும்.
அண்ணனும், தம்பியும் நன்றாகப் படிக்கிறார்களா? அம்மா, அப்பாவின் மறைவுக்குப் பின்னால், எனக்குத் தலை வாரிவிட்டு, பட்டம்மா வீட்டில் அவித்த இட்டலி கொடுத்துப் பள்ளிக்கு அனுப்பிய அண்ணனும் இப்போது இல்லை, நீண்ட தேடலுக்குப் பின்னர் கிடைத்த அவன் கால்களை மட்டும் மாமாவும், சித்தப்பாவும் வன்னிக் காடுகளில் நல்லடக்கம் செய்தார்கள்.....அப்போதே எழுத வேண்டும் என்று ஆசைதான் எனக்கு, நீங்கள் இலங்கை கிரிக்கெட் அணியின் இந்தியச் சுற்றுப் பயணத்தை, இரவு பகல் ஆட்டமாய்ப் பார்த்திருந்தீர்கள்...அதனால் தான் எழுதவில்லை........
ஒலிம்பிக் தீபத்தின் சுடர்களை உலகம் முழுவதும், என்னைப்போல ஒரு மலை நாட்டு திபெத் சிறுவனும், அவன் இனத்துப்பெரியவரும் சந்து பொந்தெல்லாம் மறித்துத் தடுத்தபோது, எனக்கு உங்கள் நினைவு வந்தது.....
அதுமட்டுமல்ல, இந்திய அரசுகளின் உதவியோடு, இலங்கை ராணுவத்திற்கு நன்றி சொல்லும் திரைப்படச் சுருளின் பிரதிகளும் நெஞ்சில் நிழலாடியது.ஒரு பக்கம், இரங்கற்பா எழுதிக் கொண்டு, மறுபக்கம், நவீன ஆயுதங்களை அனுப்பி வைக்கும் உங்கள் கூட்டணித் தலைவர்கள் எல்லாம் நலமா தமிழர்களே? இன்னொரு முறை ஆயுதங்கள் அனுப்பும் போது மறக்காமல் ஒரு இரங்கற்பா அனுப்புங்கள், சாவின் மடியில் எங்களுக்கு ஒரு தமிழ்க் கவிதையாவது கிடைக்கும் அல்லவா?
இன்னொரு தமிழகத்தின் மறைவான இடத்தில் நீங்கள் இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளிக்கும் போது, குழந்தைகளையும், கர்ப்பிணிப் பெண்களையும் வலியின்றிக் கொல்வது பற்றி ஒரு வகுப்பெடுத்து விடுங்கள். கொஞ்சம் பாவமாவது குறையட்டும்.......
மாஞ்சோலையில் ஒரு மாலை நேரத்தின் மங்கலான வெளிச்சத்தில், தம்பியின் பிஞ்சு உடல் நான்கைந்தாய் சிதறடிக்கப்பட்ட அந்த கோர நாளில் நாங்கள் எல்லாம் கூட்டமாய் அழுது கொண்டிருந்தோம், குழந்தைகள் இருக்கும் பள்ளிக்கூடங்களை தேடிக் கண்டு பிடித்து கொலை வெறியோடு உங்கள் "நேச நாட்டு" விமானங்கள் குண்டு மாரி பொழிந்த போது நீங்கள் இந்திய விடுதலையின் பொன் விழாக் கொண்டாட்டங்களுக்கான குறுஞ்செய்தி வாழ்த்துக்களில் களித்திருந்தீர்கள், உலகத் தொலைக்காட்சிகளின் நீங்கள் பார்த்து மகிழும் முதன் முறைத் திரைப்படங்கள் தடை படுமே என்று தான் அப்போது எழுதவில்லை,
)
எங்கள் இனப் போராளிகளை கொன்று குவித்து, நிர்வாணமாக்கி, இறந்த உடலுக்குக் கொடுக்கின்ற இறுதி மரியாதை இல்லாமல், எம் இறப்பை எள்ளி நகையாடிய உங்கள் " சார்க்" கூட்டாளியின் கொடிய முகம் கண்ட போதே எழுதி இருக்க வேண்டும்.அப்போது நீங்கள் கட்சி மாநாடுகளில் கவனமாய் இருந்தீர்கள், பெண்களின் இடுப்பில் பம்பரம் விட்ட களைப்பில் கட்சி துவக்கிய கேப்டன்களின் பின்னால் அணிவகுத்து நின்றீர்கள், நீங்கள் போட்ட வாழ்க கோஷங்களின் இரைச்சலில் எங்கள் நிஜக் கேப்டன்களின் வீரமரணம் கேள்விக் குறியாய்க் கலைந்து போனது, தமிழர்களே?
அப்பாவின் வயிற்றை அணைத்துக் கொண்டு, செப்பயான் குளத்தில் முங்கி எழுந்த நினைவுகளை மனதில் சுமந்து கொண்டு, வாரம் இரண்டு முறை அடிகுழாயில் அடித்து, அடித்து கொஞ்சமாய் ஒழுகும் தண்ணீர் நின்று போவதற்குள் ஓடி வந்து குளித்து விடுகிறேன் அகதி முகாமில்.முகாமின், தகரத் தடுப்புகளின் இடைவெளியில் தெரியும் பள்ளிக்கூடமும், அதிலிருந்து வரும் மதிய உணவின் வாசமும், அம்மாவின் மடியில் இருந்து, எப்போதும் கிடைக்கும் அன்பையும் எண் பழைய வாழ்வையும் நினைவு படுத்தும். ஆயினும் பாழும் வயிறு, பசி கலந்த வலி கொடுத்து பாய்ந்து ஓடி வரிசையில் நிறுத்தி விடும், அளந்து கொடுக்கப்படும் அவமானச் சோற்றுக்காய்......அப்போதெல்லாம் எழுதத் தோன்றும் எனக்கு, ஆனால் நீங்கள் பீஸாக் கடைகளின், வட்ட மேசைகளில் அமர்ந்து ஆங்கிலம் பேசிக் கொண்டிருந்தீர்கள், எழுதத் தோன்றவில்லை.....எனக்கு....
அமைதியாய் விடியும் பொழுதும்,
அழகாய்க் கூவும் குயிலும்,
தோகை விரிக்கும் மயிலும்,
காதல் பேசும் கண்களும்,
தாத்தா பிடித்த மீன்களில் அம்மா வைத்த குழம்பும்,
தாமரை மலரின் தாள்கள் பறிக்க நாங்கள் குதித்த குளங்களும்,
பக்கத்து வீட்டுப் பாண்டி அண்ணன் வேடு கட்டக் குவித்து வைத்த மணலும்,
அதில் சங்கு பொறுக்கி விளையாடிய என் தம்பியின் கால் தடங்களும்,
கருவேலன் காடுகளில் பொன் வண்டு பிடித்த என் பழைய நினைவுகளும்,
இனிமேல் எனக்குக் கிடைக்கவே கிடைக்காதா உலகத் தமிழர்களே?
)
எல்லோரும் சேர்ந்து மூட ஞானிக்கு எழுதிய நீண்ட கடிதமெல்லாம் வேண்டாம் அண்ணா, என் கேள்விகளில் எதாவது ஒன்றுக்கு, உங்கள் வீட்டில் கிழித்து எறியப்படும் நாட்காட்டித் தாள்களின் பின்புறமாவது பதில் எழுதுங்கள், உலகத் தமிழர்களே........
ஏனெனில் நீங்கள் எழுதப் போகும் பதிலில் தான் ஒரு இருண்டு போன இனத்தின் விடுதலையும், துவண்டு போன அகதிகளின் வாழ்க்கையின் மறுபிறப்பும் இருக்கிறது.

வலி கலந்த நம்பிக்கைகளுடன்,
தம்பி யாழினியனுக்காக (அண்ணன் கை.அறிவழகன்)
15 ஏப்ரல் 2008.
நன்றி- உலக தமிழ் மக்கள் அரங்கம் -அற்குட்

மனதை மிகவும் கனக்க செய்த கடிதம்... தமிழினமே எப்போது உன் மௌனம் களைப்பாய்...?????????

Thursday, April 17, 2008

இலங்கையால் இந்தியாவிற்கு ஆபத்து...

இலங்கைக்கும் சீனாவிற்கும் ஆன நெருங்கிய உறவு தொடர்பு இலங்கை இந்திய உறவுகளில் தாக்கம் செலுத்தியுள்ளதை ஸ்ரீலங்கா அரசாங்கம் மறைமுகமாக ஏற்றுக் கொண்டுள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஸ்ரீலங்கா ஜனாதிபதியின் அண்மைய சீன விஜயம் குறித்து அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் விளக்கமளித்திருந்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது செய்தியாளர்களால் எழுப்பப்பட்ட சாதாரண கேள்விகளுக்கு மிக பொறுமையாக அமைச்சர் பீரிஸ் பதில் அளித்திருந்தார். சில செய்திளார்கள் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நெருக்கமான உறவு இந்தியாவை சீற்றமடைய வைத்துள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய போது அதற்கு பதிலளிக்க மறுத்த அமைச்சர் உடனடியாக செய்தியாளர் சந்திப்பில் இருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கை இந்திய உறவில் விரிசல் நிலை ஏற்பட்டுள்ளமை தெளிவகா தென்படுவதாகவும் எனினும் அது குறித்து கருத்து வெளியிட்டு நிலைமைகளை மோசமாக்க விரும்பாமடலே அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் .இருந்து வெளியேறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கை சீன உறவுகள் குறித்தும் மகிந்த ராஜபக்சவின் சீன விஜயம் குறித்தும் இந்திய தரப்பிற்கு விளக்கமளிப்பதற்கு மகிந்த ராஜபக்சவின் சிறப்பு பிரதிநிதி ஒருவர் விரைவில் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டவுள்ளதாக தெரியவந்துள்ளது.
நன்றி - யாழ்.காம்
இந்தியாவிற்க்கு என்றைக்குமே சீனா ஒரு அச்சுறுத்தல் தான். அந்நாட்டுடன் உறவில் உள்ள எந்த நாடும் நமக்கு எதிரி நாடே. இலங்கை இப்பொது அந்நாட்டுடன் மிக நெருங்கி வருகிறது. சீனா உதவதற்கு ஒரே காரணம் இந்தியாவை அச்சுறுத்த வேண்டும் என்ற நோக்கம் தான் ஒழிய வேறொன்றும் இருக்க முடியாது. இதே போல் தான் பாகிஸ்தானோடும் நெருக்கம் காட்டி வருகிறது. இந்தியாவிற்கு பேரழிவை ஏற்படுத்தும் நோக்கத்துடனே இலங்கை நடந்து வருகிறது, பாதுகாப்பற்ற சூழலையும் உருவாக்கி வருகிறார்கள்

இந்தியா இப்போதாவது இலங்கையின் சுயநலபோக்கை புரிந்து கொண்டு அந்நாட்டுடன் இருக்கும் பாரிய உறவை நிறுத்தி அதை கண்காணிக்க வேண்டும். தமிழர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு அழுத்தம் கொடுக்க வேண்டும். ஈழத்தமிழர்கள் இந்தியாவை தந்தை நாடென்று போற்றி மதித்து வருகிறார்கள். அதை புரிந்து கொண்டு தமிழீழ மலர இந்தியா வழிவகுத்தால் என்றுமே அவர்கள் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அரணாக விளங்குவார்கள் என்பதில் ஐயமில்லை...

Wednesday, April 16, 2008

தொடரும் ஒடுக்குமுறைகள்...

மலேசியாவின் பிரபல "மக்கள் ஓசை" நாளேட்டின் பிரசுர பெர்மிட்டைப் புதுப்பிக்க உள்துறை அமைச்சு மறுத்து விட்டது. மாற்றரசாங்க கட்சிகளின் செய்திகள் அந்நாளிதழில் பரவலாக வெளியிடப்பட்டது இதற்கு காரணம் எனக் கருதப்படுகிறது.

இது தொடர்பாக மக்கள் ஓசை பொது நிர்வாகி எஸ்.எம்.பெரியசாமியைத் தொடர்பு கொண்டபோது அச்செய்தியை உறுதிப்படுத்தினார். பெர்மிட்டைப் புதுப்பிக்க செய்துகொள்ளப்பட்ட விண்ணப்பம் ஏற்கப்படவில்லை என அமைச்சு கடிதம் அனுப்பியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. பெர்மிட் முடிவடைவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே, ஜுலை மாதத்திலேயே, புதுப்பிப்பதற்கு விண்ணப்பம் செய்து விட்டதாக பெரியசாமி கூறினார். அக்டோபர் 15 திலிருந்து பெர்மிட் இல்லாமலேயே அது வெளியிடப்பட்டு வந்தது. அந்த நாளிதழில் மாற்றுக்கட்சிகளின் செய்திகள் குறிப்பாக கெஅடிலான் தலைவர் அன்வார் இப்ராகிம் பற்றிய செய்திகள் நிறைய வருவதுண்டு.
மக்கள் சக்தி இயக்கம் பற்றிய செய்திகளுக்கும் அதில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. “உள்துறை அமைச்சின் முடிவுக்கு எதிராக முறையீடு செய்யப்போகிறோம்”, என பெரியசாமி கூறினார்.

நன்றி - மலேசியாஇன்று.காம்


இனவாத,பயங்கரவாத அரசுகளின் கோரதாண்டவங்கள் பத்திரிக்கை சுதந்திரத்தின் குரல் வலையை மிதித்து கொண்டே தான் ஆரம்பிக்கப்படுகின்றன. ஒரு இனத்தை அழிக்கவும், ஒடுக்கவும் அவர்களின் ஊடகங்களை தான் முதலில் ஒடுக்குகிறார்கள். 1970களில் இலங்கை அரசாங்கமும் முதலில் ஒடுக்கியது தமிழ் ஊடகங்களை தான். தமிழகத்தில் இருந்து வரும் சினிமா,பத்திரிக்கை என அனைத்து ஊடங்கங்களும் தடை செய்யப்பட்டு, தமிழகத்துடன் இருந்த இணைப்பை துண்டித்தனர்.

ஒரு நாட்டின் வளமான ஜனநாயகத்தை, நல்ல அரசாங்கத்தை, பொருளாதார வளர்ச்சியை அந்நாட்டின் பத்திரிக்கை சுதந்திரத்தின் அளவை வைத்தே கூறிவிடலாம். உலகில் நான்கில் மூன்று பங்கு மக்கள் வாழும் நாடுகளில் பத்திரிக்கை சுதந்திரம் மட்டுப்படுத்தபட்டே இருக்கிறதாக ஆய்வு சொல்கிறது. இருவகையாக சுதந்திரம் பறிக்கப்படுகிறது ஒன்று அரங்சங்க அனுமதி என்ற பெயரிலும் மற்றொன்று தவறான தகவலுக்கு தண்டனை என்ற முறையிலும் தான்.

1501 ஆண்டு போப் ஆறாம் அலெக்சாண்டர் என்பவர் தான் பத்திரிக்கைகளுக்கு கட்டுப்பாடு என்ற முறையை முதல் முறையாக கொண்டுவந்தார் என்கிறது வரலாறு. பத்திரிக்கை வெளியிடுபவர் எல்லோரும் சர்ச்சில் அனுமதி வாங்க வேண்டும் என்ற ஆணையை பிறப்பித்தார். அனுமதி பெறாதவர்களுக்கு தண்டனையும் வழங்கப்பட்டது. மத நம்பிக்கைக்கு எதிரான பிரச்சாரத்தை அடக்கவே அவ்வாறு செய்தார். இங்கிலாந்தில் தான் முதல்முதலாக பத்திரிக்கை சுதந்திரத்திற்கான போராட்டம் ஆரம்பித்தது. ஆனால் முதன் முதலில் பத்திரிக்கை சுதந்திரத்தை சட்டமாகியது அமெரிக்கா தான். "first amendment" என்ற பெயரில் உருவான அந்த சட்டம் தான் உலகளாவிய அளவின் பத்திரிக்கை சுதந்திரத்துக்கு அடிபோட்டது. "fourth எஸ்டேட்" நான்காம் தூண் என்று பத்திரிக்கை துறையை குறுப்பிட காரணம் அந்த சட்டம் தான்.

உலகில் அதிக பத்திரிக்கை சுதந்திரம் கொண்ட நாடுகள் பின்லாந்து, ஐஸ்லந்து, நெதர்லாந்து, நோர்வே, டென்மார்க், இர்லாந்து, ஸ்லோவொக்கியா, சுவிற்சர்லாந்து,நியூஜிலாந்து ஆகிய நாடுகள். குறைவான சுதந்திரம் கொண்ட நாடுகள் வட கொரியா, பர்மா, சீனா, வியேட்னாம்,நேபாளம், சௌதி அரேபியா, ஈரான் இறுதியாக இலங்கை. இதில் சீனா மற்றும் நேபாளத்தில் தவறான வார்த்தைகள், படங்களை பிரசுரிப்பதை அரசாங்கம் நினைத்தால் ௧ வருடம் வரை பத்திரிகையாளர்களுக்கு சிறை தண்டனை உண்டு.அதே போல் மேற்சொன்ன நாடுகளை சேர்த்து சில நாடுகளில் சர்ச்சைக்குரிய இடங்களுக்கு வெளிநாட்டு பத்திரிக்கையாளர்களை அந்நாட்டு அரசாங்க அனுமதிப்பதில்லை.


இடங்கள் :-

௧. செசென்யா, ரஷ்ய

௨. திருகோணமலை, இலங்கை

௩.மியான்மர், பர்மா

௪.பாபா, இந்தோனேசியா

௫.பெஷ்வர், பாகிஸ்தான்

௬.திபெத், சீனா

உலகில் பல்வேறு அமைப்புகள் பத்திரிக்கை சுதந்திரத்திற்காக போராடி வருகின்றன. "ஆர்டிகல் 19" என்ற மனித உரிமைக்கான அமைப்பு உலகளாவிய போராட்டத்தை இதற்காக நடத்தி வருகிறது. பத்திரிக்கை சுதந்திரத்திற்கான குழுமம் அண்ட் ஒரு அமைப்பும் 1981ஆம் ஆண்டில் இருந்து போராடி வருகிறது. இவர்களின் போராட்டத்தால் நேற்று கூட பாக்த்தாதில் அமெரிக்கா படையினரால் சிறைபிடிக்க பட்ட ஹுசைன் என்ற பத்திரிக்கையாளர் ௨ வருடங்கள் கழித்து மீட்கப்பட்டுளார். இப்படி பல்வேறு அமைப்புகள் உலகம் முழுவதும் இருக்கின்றன.
மொத்தத்தில் எங்கெல்லாம் ஊடங்களின் சுதந்திரம் நசுக்கப்டுகிறதோ அங்கெல்லாம் ஜனநாயத்தின் மூச்சு மெதுவாக நின்று கொண்டிருப்பதை தான் அர்த்தம்.

ஆடு நினையுதேனு ஓநாய் அழுகுது....

கோவை: பங்கு சந்தை வணிகத்தில் பிற மதத்தினர் முதலீடு செய்வதை அரசு கண்காணிக்க வேண்டும் என இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் கூறினார்.


கோவையை அடுத்த துடியலூரில் ராமகோபாலனுக்கு இந்து முன்னணி சார்பில் சதாபிஷேக விழா நடத்தப்பட்டது.அதில் கோவை வடக்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் ராம கோபாலனுக்கு ரூ.81,000க்கான பண முடிப்பு வழங்கப்பட்டது.அதைப் பெற்றுக் கொண்ட ராமகோபாலன் பேசியதாவது:தமிழ்நாட்டில் அனைத்து இந்துக்களின் வீடுகளில் ராமாயணம், மகாபாராதம்,பகவத் கீதை போன்ற சமய நூல் வாங்கி வைப்பதோடு மட்டுமல்லாமல் அதை கண்டிப்பாக படிக்க வேண்டும்.


மதமாற்ற தடுப்புச் சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.மதமாற்றத்தை பொதுமக்கள் விழிப்புணர்வுடன் எதிர் கொள்ள வேண்டும். பசுவதை தடை செய்ய வேண்டும். பசுக்களை போற்றி வளர்க்க வேண்டும்.


இந்துக்களுக்கு கிடைக்க கூடிய இடஒதுக்கீட்டை பிற மதத்தை சேர்ந்தவர்கள் பயன்பெறும் வகையில் இடஒதுக்கீடு அமைந்துள்ளதை மாற்ற வேண்டும்.


பிற மதத்தினர் பங்கு சந்தை வணிகத்தில் முதலீடு செய்வதை அரசு கண்காணிக்க வேண்டும்.என்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுகிறார்கள். இதற்கு நான் கவலைப்படுவது இல்லை. நான் சேவை செய்யும் போது உயிர்விட ஆசைப்படுகிறேன் என்றார்.


நன்றி -தட்ஸ்தமிழ்.காம்


நம் நாட்டில் சென்சஸ் கணக்கு படி வறுமை கோட்டிற்கும் கீழ் அதாவது வீடு வாசல் இல்லாமல் இருப்பவர்கள் 27 சதவிகத மக்கள், அதே போல் 39 சதவிகத மக்கள் இன்னும் கல்வி அறிவற்றவர்களாக இருக்கிறார்கள். கணக்குப்படியே 39 என்றால் உண்மையில் கட்டாயம் அதற்கு மேல் இருக்கும். நிலைமை இப்படி இருக்க எல்லோரு வீட்லயும் ராமாயணமும், மகாபாரதமும் வச்சு படிக்கணுமாம்.


வீடுக்கும், படிப்புக்கும் வழி சொல்லுங்க சாமிகளா அப்புறம் இதெல்லாம் பாக்கலாம்..


இட ஒதிக்கீட்டை பற்றியெல்லாம் பேச ராமகோபாலனுக்கு போன்றோருக்கு என்ன அருகதை இருக்கிறது என்று தெரியவில்லை? இதுல மற்ற மதத்தினர் பயன் பெற கூடாதாம். என்ன நயவஞ்சகம்... ஒதிக்கீடே வேணாம்னு சொன்னவர்களுக்கு இப்பொது என்ன திடீர் பாசம், அக்கறை?. "ஆடு நினையுதேனு ஓநாய் அழுகுது.... "

அய்யா சாமி உங்கள் பாசத்தை எல்லா இந்துக்களை சரிசமாய் நடத்துவதில் காமியுங்கள் அப்புறம் அக்கறை படலாம் இட ஒதிகீட்டை பற்றி.

சேவை செய்யும்போதே உயிர் போய்விட வேண்டுமாம் (பணமுடிப்பு வாங்குனதுல உணர்ச்சி வசப்பட்டு பேசிட்டார் போல). பாவம் அவர் நினைக்கிற மாறி சாவு அவருக்கு அமையாது ஏன்னா இவர் என்னைக்கு சேவை செஞ்சிருக்கார் இனிமே செய்ய?. இவரினால் மக்களுக்கு ஒரு பிரயோஜனம் இருக்கா? ஒரு தமிழனுக்காவது இருக்கா? மெச்சுற மாறி உதவின்னு எதாவது செய்திருக்காரா? சுனாமி வந்துச்சு, இயற்கை அழிவுகள் பல வந்துச்சு இவரும் இவர் கட்சியும் ஒரு இடத்துல எதாவது உதவி செய்திருகிரார்களா? ஒண்ணும் கிடையாது.. இதுல சேவை செய்யும் போது உயிர் போகணுமாம்..

அய்யா சாமி உங்க திருவாயா மூடிகிட்டு இருந்து மத்தவன் உயிரை எடுக்காம இருங்க மொதல அப்புறமா நீங்க சேவை செய்யும் போது உயிரை விடுங்க, சேமியா செய்யும்போது உயிரை விடுங்க...

சமீபத்தில் ரசித்த பாடல்...

எதொச்சையாக நேற்று இப்பாடலை கேட்கநேர்ந்தது , மிக அருமையான குரல், ஹிந்துஸ்தானி சாயல் இசை, பாடல் முழுக்க இழையோடும் ராகம் எல்லாம் கலந்து என்னை முழுமையாய் ஈர்த்து விட்டது. வார்த்தைகள் தான் முழுமையாய் புரியவில்லை...

ரசிக்க மொழி எதற்கு???????

Tuesday, April 15, 2008

நாம் தமிழர்களாக இருப்பதா? அல்லது இந்தியர்களாக இருப்பதா?..

எப்போதுமே எனக்கு பிடித்த எழுத்துக்கு சொந்தக்காரர் பாமரன். நக்கலான, குசும்பாக, கிண்டல் மொழியில்,கவுண்டமணி நடையில் நறுக்கென்று பட்டு தெறிக்கும் அவரின் எழுத்துக்கள் மிகவும் ரசிக்ககூடியவை. அவரின் சில வார்த்தைகளை மறக்கவே முடியாது. உதாரணத்திற்கு பாய்ஸ் பட விமர்சனத்தில் சுஜாதாவை செவிட்டில் அடித்த "விஞ்ஞான வெண்ணெய்" வார்த்தை.
அவரின் எல்லா கட்டுரைகளும் என்னை கவர்வது மட்டுமல்லாமல் என் மன ஓட்டங்களுக்கு ஏற்றதாகவும், சில நேரம் உணர்ச்சி ஊட்டுவதாகவும் , நான் எழுத நினைத்து போலவும் இருக்கும். ஒரு விசயத்தில் கூட எனக்கு அவர் எழுத்துகளில் மாற்று கருத்து வந்ததில்லை (போகிற போக்கில் "அவர் பேனா எழுதுதானு சோதிக்க எதாவது கிறுக்கி இருந்தாலும்" அதையும் ரசிக்கும் நிலைமையில் இருக்கிறேன்).

மேல இருக்கும் எழுத்துக்களும் அந்த வகையை சார்ந்ததுதான்.

Monday, April 14, 2008

தேசியத்தை விட கர்நாடக மாநில நலனே முக்கியம்- தேசிய கட்சியின்(பா.ஜ.க) தலைவர் எடியுரப்பா பேட்டி...

According to you, what is the central issue at Hogenakkal?
There is a long standing dispute between our state and Tamil Nadu on Hogenakkal. We had agreed to a joint survey to settle the territorial question. Before such a survey could take place, Tamil Nadu announced the drinking water project at Hogenakkal. For any project to take place, don’t you need approvals? Clearance from the environment ministry, the Centre?
Tamil Nadu obtained clearance from the Centre in 1998. Karnataka gave the go-ahead based on TN’s clearance of the Bangalore drinking water supply.
I am not aware of this. I don’t think that this is true.
Are you suggesting that Tamil Nadu went ahead without the Centre’s approval?
I am not aware of any clearance being granted.
There are official papers available... the NDA government was in power in 1998.
As far as I know, these are rumours created to mislead people and malign the BJP — where are the papers to prove this? Why isn’t the Centre producing this as evidence? If Tamil Nadu says it has all the documents, let them show it to us.
Why did you go to Hogenakkal?
I only went there to understand the issue better.The controversy and the violence started with your visit.Did I make any inflammatory statements? I only went there and came back. Why did Karunanidhi react in that manner? It was unnecessary for him to talk the way he did. But I am against any tensions being created between the people of the two states.
So you are not responsibile for the violence in Bangalore?
I blame the UPA government for this mess now. They should call the representatives of both states and sit down for a discussion immediately. Instead they are just letting the controversy grow. Karnataka is under President’s Rule. The prime minister should call the governor and Karunanidhi.
You didn’t anticipate these kinds of reactions?
Do you ever know what lies in the future? Did Karunanidhi expect such a reaction? Of course I didn’t expect this.
Your visit seemed like it was an election gimmick.
Timing is not the issue. I will go anywhere to raise issues concerning the people of the state.
Why didn’t you visit the place earlier?
I didn’t go earlier because it was not an issue earlier. They laid the foundation stone (on February 26) without consultations and that’s how the controversy started.
Are you saying that you didn’t have the elections in mind?
That’s ridiculous. Remember that when I went, the elections hadn’t been announced.The dates weren’t, but everyone knew elections were in May, Election Commission had made clear statements...As far as I am concerned it could have been announced in September or October. To return to the issue, violence erupts every time tensions are created between the two states. In September 2007, Sangh Parivar activists torched a Tamil Nadu state bus and burnt alive two people.
This was after Karunanidhi’s statements, he should be conscious of the problems he creates. I don’t want to talk further about this.
L. Ganeshan, president of the BJP’s Tamil Nadu unit, condemned your visit to Hogenakal.
Everyone will place their state’s interests first.
But the BJP is a national party...
For me, Kannadigas are important. My state will always come first. It is the same with him.

நன்றி- தெகல்கா.காம்

என்ன கொடுமை இது, இரண்டு உயிர்களை எரித்ததை கண்டிக்காமல் கருணாநிதி பேசியதை தவறு என்கிறார்..இவர் இப்படி பேசியதற்கு இரண்டு கன்னடியரை தமிழகத்தில் எரித்தால் சரி என்று சொல்வாரா?..தமிழன் இந்தியனாய் இருக்கும்வரை அவன் உயிர் மயிர் தான் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு கொள்கை வைத்து மாக்களை ஏமாற்ற இரட்டை வேடம் போடும் தேசிய கட்சிகளின் கோர முகத்தையும் கடைசி கேள்வியில் காட்டி இருக்கிறார்...
ஒட்டு பொறுக்கிகளின் ஏமாற்று வேலையின் உச்சகட்டம் தான் இந்திய தேசியம், நாம் எல்லாம் இந்தியர், தேசிய நலன் போன்ற போலி சித்தாந்தங்கள் என்பதையும் தமிழ் தேசிய மலர்ச்சியே தமிழர்களின் விடிவு என்பதையும் தமிழன் இப்போவேனும் உணரவேண்டும்.

வைகோவின் ஒசலோ கர்ஜனை...











தொலைந்த வைகோவின் உண்மை முகம் ஒசலோ மாநாட்டில் மீண்டும் வெளிபட்டத்தில் மகிழ்ச்சி கொள்கிறது தமிழினம்... இந்த இந்த இந்த வைகோ தான் வேண்டும் தமிழனுக்கு...

வைகோவே,

ஈழநாடு பற்றி உணர்ச்சிபூர்வமாய் பேசிவிட்டு மீண்டும் கொடநாடு பற்றி பேச கிளம்பாதீர்கள்...

மறதமிழ் புலிகளின் வீரவணக்க கூட்டம் பேச வேண்டிய நீங்கள் மானம்கெட்ட தடிச்சிகளின் பிறந்தநாள் கூட்டம் பேசலாமா?

கொள்கைக்காய் உயிர் கொடுப்போரை உறவாய் வைத்துக்கொண்டு, கொள்ளை கும்பலுடன் உறவாடலமா?

"சூரிய" வெயிலின் சூடுக்காய் சாக்கடை பொந்துக்குள் ஒளியலமா?

போர்களத்து புலி போயஸ் தோட்டத்து புல்லாய் மாறலாமா?....

பிரபாகரன் படத்தில் இருப்பது என்ன?- தமிழர் சீமான் பேட்டி...

seemaan interview to Tamil natham
seemaan interview ...
Hosted by eSnips

தமிழ் நாதம் இணைய வானொலிக்காக தமிழின உணர்வாளர் அண்ணன் சீமான் அளித்த பேட்டி.

Sunday, April 13, 2008

அகதியாகி போன அன்னை... இடி வாங்கிய இருதயநாதர்....

நன்றி - தமிழீழ தேசிய தொலைகாட்சி...

பௌத்த சிங்கள இனவாத அரசின் இழிவான, பேடிதனமான போறேடுப்பினால் மடு மாதா ஆலயம் தாக்கப்பட்டு இன்றைக்கு அன்னையே அகதியாய் நிற்கிறாள். மாதாவோடு சேர்ந்து மடு பிரதேசத்திலிருந்து 12,000-க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மடுவுக்கு வடக்காக ஏ-32 வீதியில் மன்னார்- பூநகரி நெடுஞ்சாலையை அண்மித்த கிராமங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். தமிழின அழிப்பில், பண்பாடு அழிப்பில், மொழி அழிப்பில் ஈடுபடும் பௌத்தத் அரசின் உண்மையான கோர முகம் மீண்டும் இப்போது நடந்த ஆலய தாக்குதலால் வெளிப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து போர் விதிகளை மீறி ஆலயமீதும், பாடசாலைகள் மீதும் சிங்கள இராணுவம் தாக்குதல் தொடுத்துக்கொண்டே வருகிறது. யாழ் நூலகம் ஆரம்பித்து செஞ்சோலை தொடர்ந்து இன்று மடு மாதா ஆலயம் வரை சொல்லி கொண்டே போகலாம். கண்டதுக்கெல்லாம் குரல் கொடுக்கும் சர்வதேச சமூகம் இதற்க்கு வாய் மூடி அமைதியாய் இருப்பது ஏன்?

சமய ஒற்றுமை, சகோதரத்துவம், சோசலிசம் பேசும் இந்தியா இதற்க்கு வாய் மூடி இருப்பது ஏன்?... சிறுபான்மையினரின் காவல், மதசார்பற்ற அரசு என்று கூவி ஒட்டு வாங்கும் கட்சிகள் எங்கே போனார்கள்?
எங்கே போனது நடுநிலைமை?.
எங்க போனது மத கோட்பாடு?..
எங்க போனது நியாயகுரல்கள்?..
சரி இவர்களை விடுவோம் கிருஸ்துவர்களின் தலைநகரம் வாடிகனில் இருந்து கூட கண்டன குரல் வரவில்லையே ஏன்?. மதவையும் கிறிஸ்துவை வைத்து பொழப்பு நடத்துவோர் கூட எதிர்த்து பேசவில்லையே ஏன்?

ஓட்டுக்கும், பொழப்புக்கும் மட்டும்தான் மதமா?.

தடுக்க முடியாத மக்களின் எழுச்சி...

நேபாளத்தில் மன்னராட்சிக்கு முடிவுகட்டி முழுமையான ஜனநாயகத்திற்கு வித்திடும் புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கவுள்ள தேச சட்டப் பேரவையை தேர்வு செய்யும் தேர்தலில் மாவோயிஸ்ட் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது.

நேபாள தேச சட்டப் பேரவைக்கு மொத்தமுள்ள 240 இடங்களில் இதுவரை முடிவுகள் அறிவிக்கப்பட்ட 181 தொகுதிகளில் மாவோயிஸ்ட் கட்சி 101 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மாவோயிஸ்ட் கட்சியின் தலைவர் பிரசண்டா தலைநகர் காட்மாண்டு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். முன்னாள் பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலாவின் நேபாள காங்கிரஸ் கட்சி 31 இடங்களிலும், நேபாள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 15 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.மாவோயிஸ்ட் கட்சி அருதிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேபாளத்தில் 240 ஆண்டுகளாக நீடித்த மன்னராட்சிக்கு முடிவுகட்டும் இத்தேர்தலில் மன்னராட்சிக்கு ஆதரவான கட்சிகள் படுதோல்வியைச் சந்தித்துள்ளன. முடிவுகள் அனைத்தும் வெளிவருவதற்கு 10 நாட்கள் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.
நன்றி - தமிழ்.வெப்துனியா.காம்

உலகளவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய செய்திகளில் இந்த செய்தியும் ஒன்று என்பதில் ஐயமில்லை. இது வரை ஆயுத போராளி குழுக்களாய், பயங்கரவாதிகளாய் ஊடகங்களாலும், வல்லாதிக்க சக்திகளாலும் சித்தரிக்கப்பட்ட மாவோயிஸ்ட்கள் இன்றைக்கு மக்கள் சக்தியில் உருவான எழுச்சியின் துணையோடு ஆட்சியை அமைக்க போகிறார்கள். மக்கள் நலனில் நாட்டமில்லாத எந்த ஆட்சியும், அரசாங்கமும், அரசபைகளும் வெகுநாள் நீடிக்க முடியாது என்பதற்கும், மக்கள் நன்மைகாய் இயங்கும் ஆயுத போராளிகள் எல்லாம் பயங்கரவாதிகள் அல்ல என்பதற்கும் மற்றுமொரு சாட்சி.

இந்த வெற்றியால் உலகநாடுகள் மத்தியில் மாவோயிஸ்ட் மேலிருந்த பார்வை கொஞ்சம் கொஞ்சமாய் மாற போகிறது. அமெரிக்காவிற்கான நேபாள தேர்தல் பார்வையாளர் முன்னால் அதிபர் ஜிம்மி கார்டர் விடுத்துள்ள அறிக்கையில் "அமெரிக்கா தன்னுடைய போக்கை மாற்றி மாவோயிஸ்ட் களுடன் உறவுகளை மேற்கொள்ளும் என்றும், இதுவரை உறவு வைக்காதது தவறு" என்றும் குறிப்பிட்டுள்ளார். தவறான வெளிநாட்டு கொள்கையால் நேபாள ஆதிக்க சக்திகளுக்கு துணைபோன இந்தியா போன்ற நாடுகளுக்கு இது பெருத்த அடி...இபோதாவது இந்தியா தன் அண்டை நாடுகளுடான தவறான வெளியுறவு கொள்கைகள் தவறு என்பதை அறியவேண்டும்.

"இலட்சியத்தால் ஒன்றுபட்ட எழுச்சிகொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிடமுடியாது..." என்ற தமிழ் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் கூற்று மீதும் நிரூபிக்கப்பட்டுள்ளது, இதே மக்கள் எழுச்சி தான் தமிழீழ போராட்டத்தை முப்பது ஆண்டுகளாய் அதே தீரத்துடனும், வீரத்துடனும், ௧௮000 போராளிகளை களபலி குடுத்தும் இன்று வரை எந்த நாட்டின் உதவியும் இல்லாமல் மக்களின் உதவிடன் மட்டும் நடந்து வருகிறது. இந்த எழுச்சி நிச்சியம் ஒரு நாள் தமிழீழத்தை உருவாகியே தீரும்.
அகவே இப்பொதைய நிகழ்வை கருத்தில் கொண்டு இந்தியா மற்றும் ஏனைய சர்வதேச சமூகம் இலங்கையுடனான வெளியுறவு கொள்கையை திருத்திக்கொண்டு, மக்கள் ஆதரவு யார்க்கு, மக்களுக்கான தலைமை யார் என்பதை புரிந்து அவர்களை நோக்கி ஆதரவுகரம் நீட்ட வேண்டும். விடுதலை புலிகளை அங்கரித்து அவர்களுடன் உறவுகளை வகுத்துகொல்லவேண்டும் இல்லையேல் இப்போது விழுந்தது போல் மற்றும் ஒரு அடி விழும் என்பது உறுதி.

Friday, April 11, 2008

என் மகள்...தீவிரவாதி....






படத்தை பற்றிய விவரங்களுக்கு http://www.snitt.no/ தொடுக்கவும்...


பெண் கரும்புலிகள் பற்றிய ஆவணப்படத்தின் தயாரிப்பாளருக்கு கொலை மிரட்டல்
[வெள்ளிக்கிழமை, 11 ஏப்ரல் 2008, 06:45 பி.ப ஈழம்] [செ.விசுவநாதன்]


தமிழீழ விடுதலைப் புலிகளில் இரண்டு பெண் கரும்புலிகள் பற்றிய ஆவணப்படத்தின் தயாரிப்பாளருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
"அமெரிக்காவில் துர்காமில் நடைபெறும் ஆவணப்படவிழாவில் "மை டோட்டர் த ரெரறிஸ்ட்" என்ற இரு பெண் கரும்புலிகள் ஆவணப்படத்தை வெளியிடுவதனைத் தடுப்பதில் சிறிலங்கா அரசாங்கம் தோல்வியடைந்த நிலையில் ஆவணப்படத்தின் இயக்குநருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நோர்வே நாளிதழ் தெரிவித்துள்ளது.


புகழ்ச்சுடர் மற்றும் தர்சினி ஆகிய இரு பெண் கரும்புலிகளின் நாளாந்த வாழ்க்கையையும் மன உணர்வுகளையும் தர்சிகாவின் தாயார் குறித்தும் சித்தரிக்கக்கூடிய ஒரு ஆவணப் படம் இது. நோர்வே நாட்டின் கருத்து சுதந்திரத்துக்கான அமைப்பின் ஆதரவுடன் இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.


சிறிலங்காவுக்குச் சென்றிருந்த ஆவணப்படத்தின் இயக்குநர் பேத்தே ஆனெஸ்தாத், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி தமிழீழ விடுதலைப் புலிகளின் பகுதிக்குச் சென்றதாக அண்மையில் சிறிலங்கா அரசாங்கம் குற்றம் சாட்டியிருந்தது.


ஆனால் கருத்துச் சுதந்திரத்தை அனுமதிக்காத அரசாங்கத்திடம் கேட்க வேண்டிய தேவையில்லை என்றும் அதே நேரத்தில் நோர்வேத் தூதரகம் எமக்கு அனுமதி அளித்திருந்தது என்றும் இயக்குநர் பேத்தே ஆனெஸ்தாத் பதிலளித்திருந்தார்.

நன்றி - புதினம்.காம்

தமிழ்நாட்டில் பிரபாகரன் பட இயக்குனரை தாக்கியதற்கு கண்டனம் தெரிவித்த உலகமகா ஞானிகளும், நியாயபுலிகளும் இதற்கும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். ஆனால் கண்டிக்க மாட்டார்கள். தமிழ் படைப்பாளிகளின் கருத்து சுதந்திரம் பற்றி கவலைப்படாத ஆனால் தமிழனின் எதிரிகளின் கருத்து சுதந்திரத்திற்காக காட்டு கத்து கத்துவார்கள். ஏனென்றால் தமிழனின் எதிரிகள் தான் அவர்களுக்கு நண்பன், ஹிந்து ராம்களும், நாராயணன்களும், சிவசங்கர் மேனன்களும் போட்டு குடுத்த பாதை அது. அதை விட்டு எப்படி வரமுடியும்?. இவர்களுக்கெல்லாம் நடுநிலைவாதிகள் என்ற வேடம் வேறு... என்னத்தை சொல்ல... தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை...

பெரியார் சொன்னது உண்மைதான்... உண்மையான பார்ப்பானை கூட நம்பலாம் ஆனால் இந்த மாறி முற்போக்கு வேடம் போடும் பார்ப்பானை நம்பவே கூடாது என்று...

இறைவனின் தவறை திருத்துவோம்.

அரவாணிகளுக்கு நல வாரியம் அமைப்பு - கருணாநிதி அறிவிப்பு


சென்னை: அரவாணிகளுக்கென தனி நல வாரியத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. சமூக நலத்துறை அமைச்சர் இதன் தலைவராக இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த ஜனவரி 23ம் தேதி தமிழக சட்டசபையில் இடம் பெற்ற ஆளுநர் உரையில் அரவாணிகளுக்கு நல வாரியம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி தற்போது தமிழ்நாடு அரவாணிகள் நல வாரியம் எனும் புதிய அமைப்பு தொடங்கப்படுகிறது.
நன்றி - தட்ஸ்தமிழ்.காம்

The Rationing of RightsTamil Nadu’s recent addition of a third gender column on ration card applications is one of a series of much needed, progressive reforms that benefit hijras்.

DISCRIMINATED AGAINST and forced to live in secluded communities, India’s hijras have always had to fight for basic entitlements. Two weeks ago, however, a major victory was achieved when Tamil Nadu added a third gender to ration cards. Hijras may now enter a ‘T’ (for transgender) in place of a ‘M’ or ‘F’ on ration cards. The move makes Tamil Nadu the first Indian state to officially recognise its hijra citizens.The new rule is cause for great joy. “The government has now recognised us as a third gender. It gives us much needed dignity in society,” says Noori, an HIV positive hijra, head of the South India Positive Network in Chennai. While an alphabet on a ration card may seem like a benign technicality, for Tamil Nadu’s estimated one lakh hijras (known locally as aravanis) it is a significant achievement. Ration cards, voting forms and passports have been available for aravanis only after a great deal of struggle. Ignorant administrators would leave the gender category blank, merely entering kuduma thalaivar (head of family) or, more often, ‘male’. “It is a positive development which will encourage more aravanis to openly declare themselves as transgenders,” says Jeeva, who heads the Transgenders Rights Association. Jeeva got her card in 2006, where she is referred to as kuduma thalaivar but her associate Shabina Francis is identified as ‘female.’

Historically, Tamil Nadu has had a very visible aravani community and, more recently, very vocal aravani activists. An aravani festival is held in the town of Koovagam annually, with a highly competitive “Miss Koovagam” beauty contest. Recently, it has been home to India’s first transgender television star, Rose.Yet, being hijra affects citizenship. Rose says, “It’s only been three or four years that ‘trans people’ have started asking for identity cards. Even now when we go and ask for IDs they don’t have a proper system to scrutinise our applications. Take my case. I wanted to change from a male name to a female one and retain the gender ‘M’ on my passport. If you want to change your gender on your passport, you need to have a sex reassignment surgery and I haven’t done that. For nine months my application was frozen because they didn’t know what to do.”

“We had initial success when passports with an ‘E’ (for eunuch) began to be issued two or three years ago,” says Arvind Narrain of the Alternative Law Forum, Bangalore. This raises a thorny issue. ‘Eunuch’ is used to describe a castrated man, a category most aravanis do not fit into. More to the point, the word is usually used derogatorily, so the official sanction of the category is a backhanded success.Laxmi Narayan Tripathi of Mumbai NGO Astitva says, “They first wrote male on my passport, then I argued and they put ‘E’ for eunuch, but that’s not right because I am not castrated.” However, after a long battle Laxmi succeeded. “Now they have put ‘TG’ (third gender) on my passport. In TG, everybody fits! Males, females, gays, bi-sexuals, women with alternative sexualities…” says an enthusiastic Laxmi.

RECOGNITION OF a third gender is a human rights issue. “The ration card is proof that you are a citizen,” says Reginald Watts of Bangalore NGO Sangama. “That’s one of the things you are asked for when opening a bank account, passport or driver’s license… anything.” Recent changes in Tamil Nadu are a result of relentless activism by the aravanis but other states lag far behind. “At a national level the movement still has a long way to go,” says Delhi gay rights activist Rahul Singh, “but this is a big step; other states should learn from this.”“Kerala, for example, is so violently oppressive that you don’t see transgenders. They have to run and hide, live disguised as men,” gripes Rose. “We have a visible population in Maharashtra, Delhi and a few other states but the others have a long way to go.” A lot needs to be done before hijras obtain equality. “Transgenders have been part of this culture for centuries. Whenever you pick up a religious book, we are mentioned. But today we are treated as nothing. The government talks of adivasis, tribals, but where are we mentioned?” asks a passionate Laxmi. The repealing of Article 377, often used as an excuse to harass hijras, is an issue which must be addressed, as must the right to education. “The government should follow Article 14 which talks about the right to education regardless of gender. Education gives you the ability to fight discrimination,” says Laxmi.

Again, Tamil Nadu, and the dmk government in particular, has been considerably enlightened. In 2006, its Department of SocialWelfare passed a landmark order stating that “admission in schools and colleges should not be denied based on sex identity.” The department had warned of “suitable disciplinary actions” in case of violations. “District collectors have been instructed to conduct special grievance days for aravanis once in three months,” says Asha Bharathi of Thamizhnaadu Aravanigal Association. The Department of Social Welfare recently announced plans to form a welfare board to implement education and health schemes foraravanis — again a first.The rest of India needs to catch up with Tamil Nadu. Even the Constitution only guarantees rights to men and women, leaving out hijras. “After the British were forced out everyone got independence except us. It is necessary that all sexual minority groups come together and fight for their rights,” exhorts Laxmi.With inputs from PC Vinoj குமார்

நன்றி - தெகல்கா.காம்

என் சக மனுசிகளின் வாழ்கையில் விளகேற்ற வழிவகுத்த தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள். அன்பை போதிக்கும் கடவுள் பக்தர்களும், உலக மகா மேதாவிகள், மகாத்மா வழிவந்தவர்கள், என தம்பட்டம் அடிப்போரும் செய்யாத காரியத்தை நம் முதல்வர் செய்திருக்கிறார்.
இறைவன் இழைத்த தவறை திருத்த முயன்றிருக்கிறார் பெரியாரின் சீடன். வாழ்க நீ எம்மான்...

Thursday, April 10, 2008

சமூக நீதியின் மாபெரும் வெற்றி... (தீர்ப்பின் முழு நகல் இணைக்கப்பட்டுள்ளது)

டெல்லி: மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மத்திய அரசின் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பினை அளித்துள்ளது.

ஆனால், இந்த இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயர் பிரிவை (உயர் வருவாய் பிரிவினர்) சேர்க்கக் கூடாது என்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டத்தை கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த கல்வியாண்டில் இந்த சட்டத்தை அமல்படுத்த இடைக்காலத் தடை விதித்தது.

இந்த தடையை நீக்க வேண்டும், வழக்கை அரசியல் சாசன பெஞ்ச் விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்தது.

இடைக்காலத் தடையை நீக்க மறுத்த தலைமை நீதிபதி, அரசியல் சாசன பெஞ்சுக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டார். இந்த பெஞ்ச் தனது விசாரணையை மேற்கொண்டது. இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அதன்படி மத்திய அரசின் சட்டம் சரியானதே என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்சில், கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் அரிஜித் பசாயத், சி.கே.தாக்கூர், ரவீந்திரன் ஆகியோர் மத்திய அரசின் சட்டம் செல்லும் என தீர்ப்பளித்தனர்

ஒரு நீதிபதி எதிர்ப்பு:

நீதிபதி தல்வீர் பண்டாரி மட்டும் செல்லாது என தீர்ப்பளித்தார். அவர் தனது தீர்ப்பில், அடிப்படைக் கல்விக்கு முக்கியத்துவம் தர வேண்டும். இந்திய அரசியல் சட்டத்தின் 21ஏ பிரிவின் கீழ் கல்வி என்பது அடிப்படை உரிமை என்று கூறப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.

ஆனாலும் பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பு சாதகமாக இருந்ததால் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு சட்டத் திருத்தம் செல்லும் என தலைமை நீதிபதி அறிவித்தார்.

தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:
- சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு இட ஒதுக்கீட்டுச் சட்டம் பொருந்தாது. மேலும், அரசு உதவி பெறாத தனியார் கல்வி நிறுவனங்கள் தங்களது விருப்பப்படி நடந்து கொள்ளலாம்.
- முன்னாள், இன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாரிசுகளை கிரீமி லேயர் பிரிவில் சேர்க்க வேண்டும்.
இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பினைத் தொடர்ந்து இந்த கல்வியாண்டு முதல் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஐஐடி உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத ஒதுக்கீடு அமலுக்கு வருகிறது.

27 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான சட்டத் திருத்தம், அரசியல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள 93வது திருத்தம் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி - தட்ஸ்தமிழ்.காம்
அனைவருக்கும் சமமான கல்வி, வேலைவாய்ப்பு, வாழ்நிலை ஏற்படுத்தவே சமூக நீதிக்கான போராட்டம் தொடங்கப்பட்டது. பெரியார் தொடங்கிவைத்த வைத்த போராட்டமும் அதற்கான அரசியல் சட்ட திருத்தமும் இன்று ஒரு மையில்கல்லை எட்டி இருக்கிறது. ஆம் அந்த தொடர் போராட்டம் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு தலைமுறையினரால் எடுத்து செல்லப்பட்டு இன்று மாபெரும் வெற்றியை "உயர்கல்விகளில் பிற்படுத்தபட்டோருக்கான 27% இடஒதிக்கீடு செல்லும்" என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் அடைந்திருக்கிறது.

இந்த அற்புதாமான தருணத்தில் நம் விடிவெள்ளி அய்யா பெரியார் அவர்களை வணங்கி, பல தடைகளை கலைந்து, எதிர்கொண்டு போராடிய அர்ஜுன்சிங், பா.ம.க, திமுக மற்றும் அனைத்து நல்ல உள்ளத்துக்கும் நன்றியினை காணிக்கையாக்குவோம்.

தீர்ப்பின் முழு நகலை படிக்க கீழே சொடுக்கவும்...


வாழ்க சமூக நீதி... வாழ்க மக்கள்...

Wednesday, April 02, 2008

ரஜினிக்கு மீண்டும் ஒரு ஆப்பு...



நெய்வேலி பிரச்சனையின் போது ரஜினி தவறான முடிவு எடுத்ததால் அதுவரை அவருக்கு இருந்த செல்வாக்கில் எப்படி ஒரு அடி விழுந்ததோ... அதே போல இப்பவும் அவரு தப்பான முடிவு எடுத்தா விழுக போகுது... அதுக்கப்புறம் வெளி வந்த "பாபா"விற்கு ஆனா நிலைமை தான் இப்போ "ரோபோ"விற்கும்... அப்பாடி ரெம்ப சந்தோசமா இருக்கு...


இதில் பச்சை தமிழன் சத்தியராஜ் அவர்களுக்கு வரும் கோவம் அனைவருக்கும் கூடிய சீக்கிரம் வரும் அப்படி வரும் போது ஓவரா சீன போட்டுக்கிட்டு திரியும் ரஜினி மாறி ஆளுகளுக்கு பெரிய ஆப்பு என்பது என் கணக்கு..

உயிர் பிச்சை அல்ல.. மறுக்கப்பட்ட நீதி...


தமிழக வரலாறு தெரிந்தவர்கள் ராஜிவ் காந்தி கொலையையும் அதற்கான தார்மீக காரணங்களை அறிந்திருப்பீர்கள். உண்மையான குற்றவாளிகளை இன்னும் சரியாக கண்டு கொள்ள முடியாத இந்திய புலனாய்வு படையின் லட்சனைதையும், குளறுபடிகளையும் அறிந்திருப்பீர்கள். அந்த குளறுபடியின் குட்டையில் சிக்கி தன் வாழ்வை இழந்தவர் தான் அண்ணன் பேரறிவாளன். 16 வருடமாக நீதிகாக அவரும், அவர் தாய் அற்புதம் அம்மாளும் போராடி கொண்டிருக்கிறார்.
தொடரும் தவிப்பு என்ற நாவல் மூலமாக தூக்கு மர நிழலில் நிற்கும் தன் மகனை மீட்கப் போராடும் அந்த அற்புத தாயின் உண்மைத்தவிப்பை பற்றி தென்செய்தி ஆசிரியர் பூங்குழலி உண்மையாய் விவரித்திருந்தார். (புத்தகம் வாங்க இங்கே சொடுக்கவும்). தமிழ் பற்றை, இன பற்றை தன் மகனுக்கு ஊட்டிய ஒரே காரணத்துக்காக அல்லல் படும், தவிக்கும் அந்த தாயின் நிலைமை யாருகே வரக்கூடாத ஒன்று...

அண்ணன் பேரறிவாளனின் வலைப்பூவை சமிபத்தில் என் சகோதரர் வழக்கறிஞர் பிரபு மூலமாக காண நேர்ந்தது. அதில் தன் நிலையை விளக்கி அவர் எழுதிய கடிதம் தான் "உயிர் பிச்சை அல்ல.. மறுக்கப்பட்ட நீதி...". உணர்வுள்ள தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டிய வலைப்பூ, கடிதம்.

தமிழனாய், தமிழ் உணர்வுள்ளவராய் பிறந்த ஒரே காரணத்துக்காக அண்ணன் பேரறிவாளன் அவர்களுக்கு மறுக்கபட்ட நீதி வெகு சீக்கிரம் மீண்டும் கிடைக்க வாழ்த்தி... நாம்மால் ஆனா உதவி செய்வோம்.
வாழ்க அண்ணன் பேரறிவாளன்...