Monday, March 17, 2008

வாழ்க அமெரிக்கா....

கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கே பின்வருமாறு கூறி இருக்கிறார்...
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போரிடுவதற்கு சிறிலங்கா அரசாங்கத்திற்கு வழங்கிவந்த அனைத்து உதவிகளையும் அமெரிக்க அரசாங்கம் இன்று முற்று முழுதாக நிறுத்தியுள்ளது.
மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம், துணை இராணுவக்குழுவான பிள்ளையானுடன் முறைகேடான தொடர்புகளைப் பேணி வருகின்றது. பிள்ளையான் குழுவினர் சிறார்களைப் படையில் சேர்த்து வருகின்றனர் என்று அமெரிக்கா கூறியிருக்கின்றது. அது மட்டுமன்றி மனித உரிமை மீறல்களிலும் சிறிலங்கா ஈடுபட்டு வருகின்றது.
இந்தப் பின்னணியிலேயே சிறிலங்காவிற்கான அனைத்து இராணுவ உதவிகளையும் அமெரிக்கா நிறுத்தியிருக்கின்றது. இதனால் அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்கான வாய்ப்புக்கள் அனைத்தும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளன.
உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்காக பிள்ளையான் குழுவினருடன் ஒப்பந்தம் செய்துள்ள அரசாங்கம், பாதுகாப்பு அமைச்சின் ஊடாக பிள்ளையான் குழுவினருக்கு தேவையான நிதியுதவிகளையும் வழங்கி வருகின்றது. கிழக்கில் அரசாங்கம் இரண்டாவது வரதராஜப் பெருமாளை உருவாக்கவே முனைகின்றது என்றார் அவர்.
நன்றி-புதினம்.காம்

பல விசயங்களில் அமெரிக்காவின் அணுகுமுறை தவறானதவே இருக்கும், சில விடயங்கள் வெறுக்கதக்க சுயநலம் கொண்டதவே இருக்கும்... சமீபகாலமாக அதன் சுயநல முடிவுகள் பலருக்கு நன்மை பயப்பதாக உள்ளது மகிழ்ச்சியான செய்தி.. கொசவோவாய் அங்கிகரித்து, வருகிற தேர்தலில் சிறுபான்மையினரை அதிபராக்க முனைவது, தலாய்லாமா வையும் திபெத் பிரச்சனைக்கு அதரவு தருவது போன்றவற்றை சொல்லலாம்...

அது போன்று இபொழுது தமிழர்களை கொள்ள துடிக்கும் இலங்கை அரசுக்கு ராணுவ உதவியை நிறுத்தி இருக்கிறது அமெரிக்கா... வாழ்க அமெரிக்கா...

அமெரிக்காவிற்கு புரிந்தது ஏன் இந்தியாவிற்கு புரியவில்லை?.. இல்லை புரிந்து கொண்டே தமிழர்கள் மீதான அனைத்து அத்துமீறல்களுக்கும் அதரவு அளிக்கிறதா?.. எத்தனை நாள் தான் நாராயணங்களும், கிருஷ்ணன் மேனன்களும் எடுக்கும் தவறான வஞ்சக முடிவை அரசு அனுமதிப்பது...?

இந்தியா அரசே! ஆயுத உதவியை உடனே நிறுத்து... ராணுவ பயிற்சி அழிக்காதே... தமிழர்களை ஒடுக்கும் வஞ்சக இலங்கை அரசுக்கு துணை போகாதே...

1 comments:

தமிழன் said...

நண்பா தங்கள் அனுமதி இல்லாமல் தங்களுடைய வலைபூ முகவரியை என்னுடைய வலைப்பூவில் "அவசியம் பார்க்கவேண்டிய தளம்" பகுதியில் இணைத்து உள்ளேன், தவறு என்றால் குறிப்பிடவும் எடுத்துவிடுகிறேன்.