Thursday, March 20, 2008

போற்றபடவேண்டிய 'கௌர்'...

இந்தியன் என்ற ஒரே காரணதுக்குக்காக பாகிஸ்தானில் குற்றவாளியாய் அடைபட்டு, தூக்குமேடை ஏற காத்திருக்கும் சரப்ஜித் சிங்கின் மனைவி சுக்ப்ரீத் கௌர் தன் கணவனின் விடுதலைக்காக எந்த தீவிரவாதியையும் விடுதலை செய்யவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.


சபர்ஜித் விடுதலைக்காக நாடாளுமன்ற தாக்குதலுக்கு தலைமை வகித்த அப்சல் குருவை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பற்றி டைம்ஸ் ஒப் இந்தியா செய்தியாளர்களிடம் பேசுகையில் "என் நாடு என் கணவரின் விடுதலைக்காக கீழ் இறங்கி போய் யாரையும் விடுவிக்க தேவை இல்லை" என்றும் "என் கணவர் போல் இந்தியா சிறைகளில் வாழும் அப்பாவிகளை வேண்டுமென்றால் விடுதலை செய்யலாம் அனால் எந்த தீவிரவதியையும் விடுதலை செய்ய வேண்டாம்" என கூறினார்...


தன் கணவர் விடுதலையை விட நாட்டு நலனுக்காய் பேசிய அந்த வீர மங்கை இருகரம் கூப்பி வணங்க படவேண்டியவர். வீரம் சொரிந்த, தேசப்பற்று மிக்க பஞ்சாப் மண்ணில் பிறந்தவர்கள் நாங்கள் என நிருபித்திருக்கிறார் கௌர். இந்த ஒரு வார்த்தைகவேனும் சபர்ஜிதை விடுவிக்க இந்தியா எல்லா நடவடிக்கை எடுக்க வேண்டும்..

0 comments: