Sunday, March 16, 2008

கொ.ப.செ....

"சிலர் அசைக்கும், தேவைக்கும், வாழ்வுக்கும், வசதிக்கும் ஊரார் கால் புடிபார்,
மனம் இல்லை அதில் ஈனம் இல்லை அவர் எப்போதும் வால் புடிப்பார்...
புரட்சிதலைவர் பாடுன இந்த பாட்டு கேட்ட உடனே எனக்கு
தமிழ்நாட்டுல இன்றைய தேதில பாவப்பட்ட ரெண்டு பேரு நியாபகத்துக்கு வர்றாங்க....

ஒருத்தர் முன்னாள் திமுக பேச்சாளர் நம்ம வைகோ ....

திமுகவில் இருந்த ஆரம்பித்த அவர் அரசியல் வாழ்கை ஸ்டாலினுக்கு எதிரான வளர்ச்சியால் துரத்தி அடிக்கப்பட்டு, தனி கட்சி கண்டு, பல கூட்டணி பார்த்து, தேர்தல் தோல்விகள் கண்டு, தன்னை விரட்டி அடித்த திமுக விடமே மீண்டும் கூட்டு வைத்து இறுதியாக இப்பொது அரசியலில் அனாதையாக்கபட்ட அண்ணா திமுக வுடன் கூட்டணி கட்சி என்ற பெயரில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கூட்டத்துக்கெல்லாம் தலைமை ஏற்று நடத்தும் நிலைமைக்கு தாழ்ந்து ஜெயகுமார், பன்னீர்செல்வம் போன்றோரின் பதவிக்கு வெட்டு வச்சுக்கிட்டு இருக்கார், வெற்றி பெற முடியாது என்ற தெரிந்தும் அம்மையார் ஒரு ராஜ்யசபா சீட்டை அன்னாருக்கு வழங்குகிறார் அன்னாரும் மறுக்க முடியாமல் வாங்கிக்கொண்டு வருகிறார், கலைஞர் சீட்டு எண்ணிக்கை குறைவாக குடுத்தார் என்பதற்காக கூட்டணி விலகிய 'தன்மான' வைகோவிற்கு இதைவிட அசிங்கம் இருக்க முடியாது இருந்தும் கூட்டணியில் வேறு வழி இல்லாமல் ஒட்டி கொண்டு இருக்கிறார்... ..

இன்னொருவர் முன்னாள் முரசொலி பத்திரிக்கையாளர் நம்ம ஞானி...

முரசொலியில் ஆரம்பித்து, இந்தியா டுடேவில் கண்டதை எழுதி, அனந்த விகடன்ல 'ஒ'னு பக்கங்களை கிழித்து, இப்போ அனந்த விகிடனில் இருந்து விரட்டப்பட்டு, குமுதம் வந்து மீசைல மண் ஒட்டாத குறையா "வீடு மாறது சகஜம்னு" ஒரு புது இலக்கணம் சொல்லிவிட்டு, சக பத்திரிக்கையாளரா கலைஞரோட வேலை பார்த்தபோது எல்லாம் தெரியாத குறையை இப்போது சொல்லிக்கொண்டு இருக்கிறார்... திமுகவிற்கு எதிராக எழுதுவது தான் அன்னாரின் இப்போதைய வேலை.

கடந்த வாரம் ஒ பக்கங்களில் திமுக தலைவரின் வாரிசுகளுக்குள் நடக்கும் சண்டை பற்றி எழுதி அவரின் அதீத கற்பனை வளத்தையும் ஆசையையும் வெளியிட்டுள்ளார். சிண்டுமுடியுற வேலையையும் செய்துள்ளார். ஏற்கனவே கலைஞரின் வயதை பற்றி எழுதியபோது எழுத்தாளர் பன்னீர் செல்வம் தலைமையில் நடந்த கண்டன கூட்டம் கூட கனிமொழியை திமுக தலைவராய் முன் நிறுத்துவதற்கான கூட்டம் என்று மடத்தனமாய் உலறி கொட்டி உள்ள்ளார்...

அத விட பெரிய காமெடி அண்ணா திமுக வில் ஒ.பன்னீர் செல்வன்களின் ஜனநாயக தேர்வுகளை பற்றி பெருமையாய் பேசி இருப்பதுதான். ஒரு கோடி உறுப்பினர்கள் இருக்கும் இருக்கும் கட்சி யில் எப்படி, எதற்காக,எந்த சூழ்நிலையில் ஒ.பன்னீர் செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் ஜெயலலிதாவின் ஜனநாயக பற்று பற்றி உலகே அறிந்திருக்கும் போது பாவம் ஞானிக்கு எப்படி தெரியாமல் போயிற்று என்று தெரியவில்லை. என்ன பாசம் கண்ணை மறைத்திருக்கும்??


மொத்தத்தில் அண்ணா திமுகவில் இருக்கும் ஒரு கொள்கை பரப்பு செயலாளர் பதவிக்கு இரெண்டு பேர் போட்டியில் உள்ளனர்...

யாருக்கு வெற்றி?.. பொறுத்திருந்து பார்போம்...

1 comments:

ஈழக்கதிர் தி said...

மிகவும் நன்றாக உள்ளது........
வாழ்த்துக்கள்......

(நம்மை மீறி காற்று சுவாசமாய் மாறும் அதிசியத்தை வியந்து வாழும் சாதாரண சாமானியன்)