Saturday, March 22, 2008

கருநாடகத்தில் தமிழர் கிராமங்களுக்கு பேருந்துகள் நிறுத்தப்பட்டன!! - கன்னடரைக் குடியமர்த்தத் திட்டம்?

கர்நாடக காவிரி கரையோரத்தில் அமைந்துள்ள தமிழர் கிராமங்களுக்கு சென்ற பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் தமிழர்களை வெளியேற்றிவிட்டு கன்னடர்களை குடியமர்த்த கன்னட அமைப்பினர் திட்டமிட்டு வருகீன்றனர்.
கர்நாடக மாநில எல்லையில் காவிரி கரையோரத்தில் உள்ள ஜம்புருட்டு, அப்புக்காம்பட்டி, மாறு கொட்டாய் உள்ளிட்ட கிராமங்களில் தமிழர்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள தமிழ்ப் பள்ளிகள் திடீரென்று மூடப்பட்டன. இதனால் தமிழர்களின் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்காமல் போனது. பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி மற்றும் பல்வேறு தமிழ் அமைப்பினர் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக தமிழர் கிராமங்களில் மூடப்பட்ட பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.இந்நிலையில் ஓராண்டு முடிவதற்குள் பல காரணங்களைக் கூறி கர்நாடகக் கல்வித்துறை பள்ளிகளை மூடியது. இதனால் இப்பகுதி குழந்தைகள் 10 கி.மீ. தொலைவில் உள்ள கோபிநத்தத்துக்கு பஸ்சில் சென்று படித்து வந்தனர்.இப்போது தமிழர் கிராமங்களுக்கு சென்ற பேருந்துகளையும் கர்நாடக அரசு நிறுத்தி விட்டது. இதனால் குழந்தைகளின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் குழந்தைகள் தற்போது ஆடு, மாடுகளை மேய்த்து வருகின்றனர்.
.
காவல்துறையினரும் தமிழர்கள் மீது ஏதாவது புகார் கூறி பணம் பறிக்க முயற்சிக்கின்றனர். போலீசார் கேட்கும் தொகையை கொடுக்காவிட்டால், தீவிரவாதிகளுடன் தொடர்புள்ளதாக கூறி வழக்கு போடுவதாகவும் மிரட்டுகின்றனர்.இப்படியெல்லாம் தொல்லை கொடுத்தால் தாங்களாகவே கிராமத்தை காலி செய்துவிட்டுப் போய்விடுவார்கள். பின்னர் கன்னடர்களை இந்த கிராமங்களில் குடியமர்த்தலாம் என ஒகேனக்கல்லை சொந்தம் எனக் கூறும் கன்னட அமைப்பினர் திட்ட மிட்டுள்ளனர்.
***நன்றி - தென்செய்தி.காம்***

எனக்கு ஒரு சந்தேகம்... கர்நாடக இந்தியாவில் தானே இருக்கிறது?...

0 comments: