Wednesday, March 05, 2008

இன்னும் தமிழன் இந்தியனா?



‌‌சி‌றில‌ங்க‌க் க‌ட‌ற்படை‌த் து‌ப்பா‌க்‌கி‌ச் சூ‌ட்டி‌ல் த‌மிழக ‌மீனவ‌ர் ப‌லி! -

ராமே‌ஸ்வர‌ம் அருகே கட‌லி‌ல் ‌மீ‌‌ன் ‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த த‌மிழக ‌மீனவ‌ர்க‌ளி‌ன் ‌மீது ‌சி‌றில‌ங்க‌க் கட‌ற்படை‌யின‌ர் அத்து மீறி வந்து நட‌த்‌திய ‌து‌ப்பா‌க்‌கி‌ச் சூ‌ட்டி‌ல் ‌மீனவ‌ர் ஒருவ‌ர் கொல்லப்பட்டா‌ர். இதனால் ராமே‌ஸ்வர‌ம், ம‌ண்டப‌ம் பகு‌தி‌க‌ளி‌ல் பத‌ற்ற‌ம் ‌நிலவு‌கிறது. நேற்றைய வருத்த செய்தி இது.

2006ஆம் ஆண்டு ஜூலை மாதம் இஸ்ரேல் பகுதியில் அத்து மீறி நுழைந்து இரண்டு வீரர்களை கொல்கிறது லெபனான் ஹெஜபோள்ள அமைப்பு. அடுத்த கணமே லெபனான் நாட்டுடன் போர் தொடங்குகிறது இஸ்ரேல். தன் நாட்டு பிரஜை கொல்லப்பட்ட உடன் அந்த நாட்டு உடன் போர் தொடுக்கிறது ஒரு நாடு.

அனால் இங்கே தமிழ் மீனவன் காலம் காலமாக அண்டை நாட்டு ராணுவத்தால் அத்து மீறி சுட்டு கொள்ள படுகிறான் நம் நாடு வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. நம் வெளி உறவு கொள்கைக்கான மத்திய அமைச்சர் கடந்த வாரம் கீழ் கண்டவாறு அறிக்கை விட்டு கெஞ்சி கொண்டிருக்கிறார்... அறிக்கையின் சாரம் இது தான் ..."சிறிலங்கா கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் மீதான சிறிலங்கா கடற்படையின் நடவடிக்கைகள் வருத்தம் தருகின்றது. எமது மீனவர்கள் கடல் எல்லைகளை மதிக்க வேண்டியது முக்கியமானது என்பதுடன், சிறிலங்கா கடற்படையினரும் தமது நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றார் அவர்."

கடந்த வாரம் இப்படி அறிக்கை விட்ட பின்பும் நேற்று சுட்டிருக்கிறார்கள் இலங்கை கடற்படையினர், இதையாவது கண்டிக்க வேண்டாமா??...
சரி கண்டிக்கிறது ஒரு புறம் இருக்கட்டும். அந்த அறிக்கையில் நம் மீனவர்களை எல்லைகளை மதிக்க வேண்டியது முக்கியம் வேற சொல்றார். படிப்பறிவில்லாத, மீன்புடி தொழில் மட்டுமே தெரிந்த, ஏழை மீனவனுக்கு எப்படி கடலுக்குள்ள எல்லை தெரியும். எப்படி அவர்கள் கண்டு புடிச்சு எல்லை தாண்டாமல் சரியா திரும்பி வருவார்கள். வெறும் கடல் நடுவில் எப்படி எல்லை கோடுகளை கண்டுபுடிப்பது. சரி இவரை கடலுக்குள் அனுப்புவோம் பெரிய படிப்பு படிச்சவரு, இத்தனை வருசமா இந்திய அமைச்சரா இருக்கவரு, இவரு போய் எல்லைய சரியாக கண்டுபுடிசிருவாரா?. என்ன பேச்சு இது...

இங்கே குடிமகனின் உயிர் போய் கொண்டிருக்கிறது அதற்கு காரணமான அந்த நாட்டு ராணுவ தளபதிக்கு சிவப்பு கம்பள வரவேற்ப்பு கொடுத்து கொண்டிருக்கிறது நம் அரசு. என்ன கொடுமை இது...

பாகிஸ்தான் இராணுவம் வந்து காஷ்மீரில் சுட்டால் எப்படி எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்று நாம் கருதுகிறோமோ அதே அளவு பயங்கரவாதம் நேற்றைய இந்த நிகழ்வு. இதையும் நம் அரசு கண்டிக்கணுமா வேண்டாமா?.
தமிழகம் இந்தியாவில் தானே இருக்கிறது?.. தமிழன் இந்தியன் தானே?... தமிழனின் உயிரும், காஷ்மீரியனின் உயிரும் சமம் தானே..??இதற்கெல்லாம் பதில் ஆம் என்றால் அந்த நாட்டின் மீதி போர் தொடுக்க வேணாம், ஏன் கண்டிக்க கூடவில்லை இந்தியா??...

எங்கெல்லாம் தன் குடிகளின் உயிர்களை அந்நாட்டு அரசு அலட்ச்சிய படுத்துகிறதோ அங்கெல்லாம் தனி நாடு போராட்டம் வெடிக்கிறது என்கிறது வரலாறு. இந்தியா மட்டும் விதி விளக்கா என்ன?..

0 comments: