Friday, March 07, 2008

பகல் கனவு...

"இன்றைக்கு குஜராத் பசுமையாக இருக்கிறதென்றால் அதற்கு மோடியின் புத்திசாலித்தனமான, நேர்மையான அணுகுமுறைதான் காரணம். ரஜினி மனது வைத்தால் தமிழகமும் கூட அப்படியொரு (குஜராத் போல) மாநிலமாக மாற வாய்ப்பு இருக்கிறது"

பா.ஜ.க வின் ராஜகுரு சோ ரஜினி சுயசரிதை வெளியீட்டு விழாவில் மேற்கண்டவாறு பேசி இருக்கார், ரஜினிக்கேல்லாம் சுயசரிதையா என்ற கேள்விக்கெல்லாம் போக வேண்டாம். அது விவாதிக்க வேண்டாத விஷயம். (தேச பிதா காந்தியின் சத்தியசோதனையவே மலிவு விலையில் வைத்து விற்றாலும் வாங்க ஆள் இல்லாமல் இருக்குது, சத்தியசோதானையே சோதனைல இருக்குது இதுல எவன் சுயசரிதை எழுதுனா என்ன விக்கவா போது?. அப்படியே வித்தாலும் இதை காசு குடுத்து வாங்குபவன் மஞ்சள் பத்திரிக்கையை வாங்குபவனுக்கு சமம் தான்) அகவே அதை விட்டு விடலாம்.

ஆனால் மோடியையும் ரஜினியையும் ஒப்பிட்டு பேசும் சோவின் உள் அர்த்தம் என்ன?.

இந்த வருடத்தில் 10 மாநிலங்களில் தேர்தல் வருகிறது. இதில் பா.ஜ.க அடிபட்ட கர்நாடகாவும், பா.ஜ.க ஆளும் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சடிஷ்கரும் அடக்கம். அடுத்து வருகிற லோக்சபா தேர்தல்க்கு இந்த மாநிலங்களில் தேர்தலின் வெற்றி மிகவும் கைகுடுக்கும். ஆக மாநிலங்களில் பாரதியஜனதவின் வெற்றி கட்டாயம் ஆகிறது. இன்னொன்று கர்நாடகாவில் பா.ஜ.கவின் வெற்றி தென் மாநிலங்களில் அது கால் ஊன்ற வழிவகுக்கும். காங்கிரஸின் மக்களை கவர்ந்த பட்ஜெட் வந்த நிலையில் அதை எதிர்கொண்டு மக்களை அதி மீறி கவர, வெற்றியை ருசிக்க பா.ஜ.கவிற்கு அவசரமாக ஒரு நட்செத்திரம் தேவைபடுகிறது. அதுவும் தென் மாநிலத்திற்கு மிகவும் பிடித்தமான நட்செத்திரம்.

கடந்த உத்தரபிரதேச தேர்தல் தோல்வியில் பா.ஜ.கவும் இந்துதுவாவாதிகளும் தெரிந்துகொண்டது பா.ஜ.க பிராமணர் களை மட்டும் நம்பியே இருக்க முடியாது என்பதை தான். குஜராத்தில் பிராமணர் அல்லாத மோடி ஆட்சியை புதிது பா.ஜ.கவை அரியணை ஏற்றுகிறார் ஆனால் பிரமணர்களை நம்பி உத்தர்பிரதசத்தில் களம் இறங்கிய பா.ஜ.க தோற்கிறது. பகுஜன் சமாஜ், பா.ஜ.கவை விட அதிகமாய் அவர்களை கவர்ந்துவிட்டது. முடிவில் பிரமணர்களை மட்டும் நம்பி பிரோஜனம் இல்லை என இந்துத்துவாவாதிகள் தெரிந்துகொண்டனர்.

இந்த நிலைமையில் இந்துத்துவாவை தூக்கி புடித்து பா.ஜ.க வை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமரவைக்க பிராமணர் அல்லாத, நட்செத்திர அந்தஸ்துடன் கூடிய இந்துத்துவாவாதிகளின் துருப்பு சீட்டு மோடி, அந்த துருப்பு சீட்டு தென் மாநிலங்களில் எடுபடாது என்று அறிந்துகொண்டு அதற்கு மாற்றாக ஒரு சீட்டை இந்துத்துவாவாதிகள் தேடிகொண்டிருகிறார்கள். இந்த நேரத்தில் தான் சோ இப்படி வார்த்தைகளை உதிர்த்திருக்கிறார்.

பெரியார் என்ற மாபெரும் சக்தியும், அவர் எடுத்து வைத்த வாதங்களும், கூறி சென்ற கொள்கைகளும் எக்காலத்துக்கும் மீண்டும் பிராமண ஆதிக்கதியோ, இந்துத்துவாவையோ தமிழ் மண்ணில் கால் வைக்க விடாது. இந்தியாவே பாபர் மசூதி இடிப்பால் அல்லோலபட்ட போது தமிழகம் அமைதியை இருந்ததற்கு காரணம் பெரியாரின் கொள்கைவீச்சு தான். பிராமணர் இல்லாத ஒருவர் மூலமாகத்தான் தான் தாங்கள் தமிழகத்தில் காலோச்ச முடியும் என்பதை நன்கு அறிந்த சோ இந்துத்துவாவாதிகளுக்கு போட்டு கொடுத்திருக்கும் ரூட் தான் ரஜினி.

சினிமா என்ற மாயவலைக்குள் தமிழகமும், ஏன் தென் மாநிலங்கள் அனைத்துமே சிக்குண்டு இருப்பதால் இந்துத்துவாவை அதன் மூலமாக நிலைநாட்ட பா.ஜ.க ரஜினியை பயன்படுத்தலாம் என்ற கனவை, ஆசையை தான் சோ இங்கே வெளியிட்டு இருக்கிறார்.

பெரியார் என்ற மிக பெரும் ஆளுமையின் படிமானங்கள் இருக்கும் வரை அவர் போட்டு வைத்த திராவிட இயக்க பாதை இருக்கும் வரை 'சோ'க்களின் இந்த கனவுகள், எல்லாம் பலிக்காத பகல் கனவுகளே...

1 comments:

Anonymous said...

See Here or Here