சென்ற வார குமுதத்தில் பேச பொருளை பேச துணியும் ஞானி 'ரஹ்மானிடம் கற்போம்' என்ற தலைப்பில் ஒ பக்கத்தில் ரஹ்மானை பாராட்டி எழுதுகிறேன் பேர்வழி என்று பேசக்கூடாத பொருளை பேசி தொலைத்து இருக்கிறார்... ரஹ்மானிடம் கற்பதற்கு நிறைய விஷயம் இருக்கிறது மாற்று கருத்து இல்லை... அவரை புகழ்வதிலும் மாற்று கருத்து இல்லை.. இன்னும் கூட புகழலாம்... முழுத்தகுதியானவர் அவர்..
நம் பிரச்சனை அதுவல்ல... ரஹ்மானை புகழும் சாக்கில் இளையராஜாவை தேவையில்லாமல் இழுத்து கேவலப்படுத்தி இருக்கிறார்...ஒருவரை புகழும் போது மற்றவரை ஒப்பிட்டு இகழக்கூடாது என்ற இங்கிதம் தெரியாமல் எழுதி இருக்கிறார் அஞ்ஞானி... தெரியாமல் எழுதிருக்கிறார் என்று சொல்ல முடியாது எல்லா உலக வியாகியானங்களும் தெரிந்தவருக்கு இது தெரியாதா???.. அக தெரிந்தே எழுதி இருக்கிறார்...
அரசியல்வாதிகள் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கிறார்கள் என்று அவர்களை குற்றவாளி கூண்டில் நிறுத்தும் உத்தமர் ஞானியார் இன்று அதே குற்றவாளி கூண்டில் நிற்கிறார்..
சரி எழுதியவர் இளையராஜாவின் இசையை விமர்சனம் செய்திருக்கலாம்... அவரின் பாடல்களை விமர்சித்து இருக்கலாம்... அதை விடுத்து அவரின் சொந்த வாழ்கையின் சில செயல்களையும், அவரின் ஆன்மீக வாழ்க்கையையும் விமர்சித்திருக்கிறார் இந்த கருத்துரிமை நாயகன் ஞானி... அவரது ஆன்மிகம் நடிப்பாம்... அதை வைத்து பணம் சம்பாதிக்கிறாராம் இளையராஜா... என்ன கண்டுபுடிப்பு பாருங்கள்...
என் பாட்டு என் பாட்டு நெஞ்சில் இருக்கும் பூங்காத்து, ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜ என்று வரும் இளையராஜா இசையமைத்த பாடல்கள் அவரின் புகழை பரப்புப்ப அவர் செய்த வேலை என்கிறார் தன்னை தானே ஞானி என்று பட்டம் சூடி கொண்ட 'ஷங்கரன்...' மன்னிக்க'....சங்கரன்'...
கர்வம் இல்லாதவராம் ரஹ்மான்... மகிழ்ச்சி... அதை சுட்டிக்காட்டும் ஞானி கூடவே இளையராஜாவின் தலைகனத்தையும் சுட்டிக்காட்டுகிறார்... இதை விட அசிங்கமான பாராட்டு ரஹ்மானுக்கு யாரும் குடுத்திருக்க முடியாது...
ரஹ்மான் தான் அவருடன் வேலை பார்த்த இசை கலைஞரை முன்னிலை படுத்தியவராம் இளையராஜா அப்படி செய்வதில்லையாம்... தமிழ் திரை படங்களில் இசையை முன்னிலை படுத்தியதே இளையராஜா என்பதை தெரிந்ததே மறந்துவிடுகிறார்.. மறைத்துவிடுகிறார்...
ரஹ்மான் எப்படி வெறுப்பை விடுத்து அன்பை தேர்ந்தெடுத்தாரோ அதே போல் இளைஞர்களும் அன்பை தேர்தெடுக்க அறிவுரை கூறி இருக்கிறார். அந்த அறிவுரையை முதலில் அவர் தான் பின்பற்ற வேண்டும்... இளையராஜா என்ற கலைஞன் மேல் இருக்கும் தனிப்பட்ட வெறுப்பை அவர் முதலில் விடுக்க வேண்டும்...
இந்த நாளுக்காக பல நாள் காத்து இருந்திருக்கிறார் போல ஞானி, அவர் எழுத்துகளில் தெரியும் வஞ்சகம் அதை நன்றாக காட்டுகிறது...
இதற்க்கு காரணம் ஞானியின் மனதில் என்றும் இருக்கும் ஆதிக்க சாதி மனோபாவம் என்று நான் கூறினால் ஞானியின் ஞானகுஞ்சுகள் என்னோடு சண்டைக்கு வருவார்கள் அகவே நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்... நண்பர்களே...
ஒன்று மட்டும் நண்பர்களே, இளைஞர்களே... நாம் ரஹ்மானிடம் அன்பு செலுத்துவதை கற்கிறோமோ இல்லையோ ஞானியின் இந்த தனிமனித வெறுப்பை, ஆதிக்க புத்தி மனோபாவத்தை, ஒருவரை பாராட்டும் பொது இன்னொருவரை தரம் தாழ்ந்து விமர்சிப்பதை நாம் கற்க கூடாது...அது தான் சாரம்..
Saturday, February 28, 2009
ஞானியிடம் கற்ககூடாதது...
வலைப்பதிவுகளுக்கு வாய்ப்பூட்டு? -- ரவிக்குமார் சட்டமன்ற உறுப்பினர்
தொழில்நுட்ப முன்னேற்றம் சுதந்திரத்தின் எல்லைகளை விரிவடையச் செய்வதை நாமெல்லாம் அறிவோம். இணைய வசதி வந்தபிறகு தனிமனித சுதந்திரத்தின் எல்லை, தேச எல்லைகளையெல்லாம் கடந்து விரிந்துவிட்டது. இணைய வசதி ஏராளமான தகவல்களை விரல்சொடுக்கும் நேரத்தில் நமக்கு கொண்டுவந்து சேர்ப்பது மட்டுமல்ல, நம்முடைய எண்ணங்களை அதே வேகத்தில் உலகெங்கும் கொண்டு சென்று சேர்ப்பதற்கும் உதவியாக இருக்கிறது.
ஊடக நிறுவனங்கள் ஏராளமாக பெருகிவந்தாலும், தனி மனிதர்கள் தங்களுடைய எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கு அவற்றில் போதுமான வாய்ப்பு கிடைப்பதில்லை. நாளேடுகளை எடுத்துக்கொண்டால் வாசகர் கடிதம் என்ற வாய்ப்பின் மூலம் மட்டும்தான் ஒரு தனிமனிதர் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்த முடியும். தொலைக்காட்சி ஊடகங்களை எடுத்துக்கொண்டால், அவற்றின் விரும்பிய பாட்டைக் கேட்ப தற்கு டயல் செய்து பேசலாமேயழிய தங்களுடைய கருத் துக்களை தனிநபர் ஒருவர் வெளிப்படுத்த முடியாது. இந்த நிலையில்தான் இளம் தலைமுறைக்கு வரப்பிரசாதமாக வந்திருக்கிறது இணையம்.
இணைய வசதியைப் பயன்படுத்தி ஏராளமான வர்கள் தமக்கான தனிப் பட்ட வலைப்பதிவுகளை இன்று உருவாக்கியிருக்கி றார்கள். இதுவரையி லான ஊடகங்களில் வெளிப்படுத்த முடியாத கருத்துக்கள், எழுத முடியாத விஷயங்கள், விவாதிக்க முடியாத பிரச் னைகள் ஆகியவற்றை முன்வைப்பதற்கும், மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதற்கும் இந்த வலைப்பதிவுகள் வசதி ஏற்படுத்தித் தந்திருக்கின்றன. அந்த வகையில் நம்முடைய அரசியலமைப்புச் சட்டம் வகுத்துத் தந்துள்ள தனிமனித உரிமைகளின் விளக்கத்தை இந்த வசதி விரிவுபடுத்தியிருக்கிறது, வலுப்படுத்தியிருக்கிறது. இந்த வலைப்பதிவுகள் இன்று அரசியல் பிரச்னை களிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
அண்மையில் மங்களூரில் ஒரு 'பப்'பில் புகுந்து ஸ்ரீராம் சேனா தொண்டர்களால் பெண்கள் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அந்த அமைப்பின் தலைவருக்கு 'பிங்க்' நிற ஜட்டிகளை அனுப்பி வைக்கவேண்டும் என்ற போராட்டம் வலைப்பதிவின் மூலம்தான் நடத்தப்பட்டது. அது பெரிய அரசியல் சர்ச்சையை உண்டுபண்ணியது. இப்படி பல அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் இன்று வலைப்பதிவுகளில் அலசப்படுகின்றன. ஈழத்தமிழர்கள்மீது ஏவப்பட்டுள்ள இனப்படுகொலையை எதிர்த்தும், அங்கு நடத்துகொண்டிருக்கும் போரை நிறுத்த வலியுறுத்தியும்கூட ஏராளமான வலைப்பதிவுகள் இப்போது உருவாக்கப்பட்டுள்ளன. இத்தகைய பிரச்னைகளை உலக அளவில் எடுத்துச் செல்வதற்கு இன்று மற்ற ஊடகங்களைவிட இணையமே மிகவும் உதவியாக இருக்கிறது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு இத்தகைய வலைப்பதிவுகளுக்கு வாய்ப்பூட்டு போட்டுவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கேரளாவைச் சேர்ந்த அஜித் என்ற பத்தொன்பது வயது இளைஞர் ஆர்குட் இணையதளத்தில் சிவசேனாவுக்கு எதிரான குழு ஒன்றை ஏற்படுத்தினார். அந்த குழுவில் தன்னுடைய கருத்துக்களை வெளியிட்டு ஒரு பதிவை அவர் துவக்கியிருக்கின்றார். 2008-ம் ஆண்டு துவக்கப்பட்ட அந்த விவாதப் பதிவில் ஏராளமானவர்கள் பங்கேற்று தங்களுடைய கருத்துகளை தெரிவித்திருக்கிறார்கள். இதைப் பார்த்து கோபமடைந்த சிவசேனா கட்சியின் இளைஞர் பிரிவைச் சேர்ந்தவர்கள் அஜித் மீது மகாராஷ்டிரா மாநிலம் தானே காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார்கள். அதனடிப்படையில், அஜித் மீது செக்ஷன் 506, 295-ஏ ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் உணர்வுகளை புண்படுத்திவிட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உடனே, அஜித் கேரள உயர் நீதிமன்றத் தில் முன்ஜாமீன் பெற்றுவிட்டார். அதோடு நில்லாமல், இந்த வழக்கை ரத்து செய்யுமாறு ஆணையிடக்கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பால கிருஷ்ணன் மற்றும் சதாசிவம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இதுகுறித்து உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறது. அஜித் மீதான வழக்கை ரத்துசெய்ய முடியாது என்று குறிப்பிட்டுள்ள நீதிமன்றம், அஜித் கம்ப்யூட்டர் சயன்ஸ் படிக்கும் மாணவர். இணைய வசதிகளை மக்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்று நன்றாக அவருக்கு தெரிந்திருக்கும். ஆகவே, இப்படியான வலைப்பதிவுகளில் வெளிப்படுத்தப்படும் கருத்துகளைப் பற்றி எவரேனும் புகார் செய்தால், அத்தகைய புகார்களை அவர் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். எனவே, முறையாக நீதிமன்றத்துக்குச் சென்று தன்னு டைய பதிலை அஜித் தெரிவிக்கட்டும் என்று கூறிவிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு இப்போது மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியிருக்கிறது. இணைய தளம் என்பது ஒரு பொது அமைப்புதான் என்றாலும், அதை நாடிச்சென்று பயன்படுத்து கிறவர்கள் மட்டுமே அதில் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்துகளை அறிந்துகொள்ள முடியும். வலைப்பதிவுகளை எடுத்துக்கொண்டால், அதுவும்கூட எல்லோரும் பார்க்கக்கூடியனவாக இருக்கவில்லை. சில வலைப்பதிவுகளுக்குச் சென்று பார்க்கவேண்டுமென்றால், முதலில் பதிவு செய்ய வேண்டும் என்ற நிபந்தனை இருக்கிறது. வலைப்பதிவுகளில் ஒருவர் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்துவது மட்டுமன்றி, பல்வேறு நபர்களும் அதில் கலந்துகொண்டு விவாதங் களை நடத்துகிற வாய்ப்பு இருப்பதால் அந்த வலைப்பதிவின் உள்ளடக்கமானது ஒரு நபருக்கு சொந்தமாக இருப்பதில்லை. ஒரு விவாதத்தில் பங்கேற்கிற எல்லோருடைய கருத்துகளுக்கும் அந்த வலைப்பதிவை நடத்துகிறவர் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறுவது சரியாக இருக்குமா? இந்தக் கேள்வியைத்தான் இன்று இணைய ரசிகர்கள் எழுப்புகின்றனர்.
பத்திரிகைகளில்கூட பலர் தங்களுடைய கருத்துகளை தெரிவிப்ப தற்கு ஆசிரியருக்குக் கடிதங்கள் பகுதியிலே வாய்ப்பளிக்கப்படுகிறது. அவற்றை அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் தேர்ந்தெடுத்து போடுகிறார். ஆனாலும், அந்தக் கருத்துகளை பத்திரிகையினுடைய தலையங்கத்துக்கு இணையாக கருத முடியாது. அதைப்போலத்தான் ஒரு வலைப்பதிவை நடத்துகிறவரின் கருத்தையும், அதில் பங்கேற்கிறவர்களின் கருத்துகளையும் வேறுபடுத்திப் பார்க்கவேண்டியுள்ளது. இத்தகைய வலைப்பதிவுகளில், 'இதில் பங்கேற்கிறவர்களுடைய கருத்துக் கள் அவர்களுடைய சொந்தக் கருத்து கள்தானே தவிர, வலைப்பதிவை நடத்து கிறவரின் கருத்து அல்ல' என்று அதிலே அறிவிக்கப்பட்டிருக்கும். இதையும் மீறி அந்தக் கருத்துகளுக்கெல்லாம் விவா தத்தை துவக்கியவர்தான் பொறுப்பு என்று சொல்வது எந்தவிதத்தில் நியாயம்? அதேசமயம், வலைப்பதிவு தவிர்த்து பெரிய நிறுவனங்கள் நடத்தி வரும் இணைய தளங்களில் வெளியாகும் செய்திகளை 'நெறியாளுனர்' ஒருவர் தீவிரமாகக் கண்காணித்து ஆபாச கருத்துக்களோ, வன்முறை மற்றும் வேறு துவேஷ உணர்வுகளைக் கொண்ட கருத்தோ இடம்பெறும்போது உடனடியாக நீக்குவதும் நடக்கத்தான் செய்கிறது.
பொதுமக்களின் உணர்வுகள் புண்படுத் தப்பட்டுவிட்டதாக சொல்லித்தான் சிவசேனா கட்சியினர் இந்தப் புகாரை அளித்திருக்கிறார்கள். இதை அப்படியே நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளுமேயானால், இதே வாதத்தை முன்வைத்து எவர் மீது வேண்டுமானாலும், எவரும் வழக்கு தொடுத்துவிட வாய்ப்பு ஏற்பட்டுவிடும். சமூகத்தின் பிற்போக்கான கருத்துகளை சாடும்போதும்கூட இதேரீதியான குற்றச்சாட்டை ஒருவர் கூறிவிட முடியும். மக்கள் பின்பற்றிவரும் பல சடங்குகளை, திருவிழாக்களை இன்று நீதிமன்றமேகூட தலையிட்டு தடுக்க நேரிடுகிறது. உதாரணமாக, மனிதர்களின் தலையிலே தேங்காய்களை உடைத்து வழிபடுகிற வழக்கம், குழந்தைகளை பூமிக்குள் புதைத்து திரும்ப எடுக்கிற வழக்கம், தமிழகத்தின் வீரவிளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டு போன்ற வற்றை நீதிமன்றமே தலையிட்டு முறைப்படுத்தியுள்ளது. பொதுமக்கள் உணர்வு புண்படும் என்கிற வாதம் இங்கேயும்கூட எழுப்பப்படலாம். இந்த நாட்டில் உடன்கட்டை ஏறும் வழக்கம் தடைசெய்யப்பட்டபோதுகூட இதேவித வாதத்தைத்தான் அன்று எழுப்பினார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
பெண்களுடைய சுதந்திரம் தொடர்பான பல கருத்துக்களும் சமூகத்தில் புரையோடிப்போயுள்ள கருத்துகளுக்கு எதிராகவே இருக்குமென்பது யாவரும் அறிந்ததுதான். எனவே, அப்படியான பெண் உரிமை கருத்துக்களை சொல்பவர்களெல்லாம் இதேவிதமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடும். அதுமட்டுமின்றி, பகுத்தறிவு சார்ந்த கருத்துக்களை முன்வைப்பவர்கள்மீதும் இப்படியான குற்றச் சாட்டுகளை எளிதாக சுமத்திவிட முடியும். எனவே, இந்தரீதியில் கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்துவது சமூகத்தை மிகவும் பிற்போக்கான நிலையில் வைத் திருப்பதற்குத்தான் உதவும்.
வலைப்பதிவுகள் தொடர்பான உச்ச நீதி மன்றத்தின் இந்த தீர்ப்பை மாற்றியமைக்கும்படி வலியுறுத்தவேண்டியது தனிமனித சுதந்திரத்தின்பால் அக்கறைகொண்டுள்ள அனைவருடைய கடமையாகும். வலைப்பதிவுகளில் வெளிப்படுத்தப்படும் கருத்துக்கள் முறைப்படுத்தப்பட வேண்டும் என்பது ஏற்கக்கூடிய ஒன்றுதான். ஆனால், அப்படியான முயற்சி தனிமனித கருத்து சுதந்திரத்திற்கு எதிரானதாக முடிந்துவிடக் கூடாது. பயங்கரவாதமும், அடிப்படை வாதமும் நம்முடைய நாட்டை அச்சுறுத்திக்கொண்டிருக்கிற இந்தச் சூழலில் கருத்து சுதந்திரத்தை ஒடுக்குவது அத்தகைய சக்திகளுக்குத்தான் ஊக்கமளிப்பதாக இருக்-கும். கருத்து சுதந்திரத்தைக் காப்பாற்ற களமிறங்க வேண்டியது அரசியல் கட்சிகளின் உடனடி கடமை யாகும். பொதுத்தேர்தல் நெருங்கிவிட்ட இன்றைய சூழலில் அரசியல் கட்சிகள் இதைப்பற்றி என்னநிலை எடுக்கப்போகின்றன என்பதை இந்தியாவின் இளைய சமுதாயம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது!
மூலம் - ஜுனியர் விகடன் (Issue Date: 04-03-09)
அடுத்து நம்ம (பதிவர்கள்) போராட்டம் தான் தமிழ்நாட்டில் இருக்கும் என நம்புகிறேன்...நீங்க என்ன சொல்றீங்க... ??????
Saturday, February 21, 2009
வெள்ளை மாளிகை முன் நடந்த தமிழர்களின் பேரணி - கண்ணொளி
கடும் குளிரையும் பொருட்படுத்தாது வெள்ளை மாளிகை முன்னே சிங்கமென கூடிய தமிழ் கூட்டம் காண்...
சுதந்திர தமிழீழமே தீர்வு என விண்முட்ட முழங்கிய முழக்கம் கேள்...
எம் உறவுகளின் உயிர்காக்க போர் நிறுத்தம் உடனடியாக வேண்டும் என்று கதறிய கோரிக்கை பார்...
சரித்திர நாயகன் ஒபாமா எம் சரித்திரத்தையும் நிலைநாட்ட உதவுங்கள் என்று வேண்டிய வார்த்தைகள் கேள்...
"தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்...."
Saturday, February 07, 2009
ஈழ மக்கள் துயர்துடைக்க கோரி உயிர்நீத்த சீர்காழி ரவிச்சந்திரன் வீடியோ...
தொப்புள் கொடி உறவுகளை காக்க கோரிஇன்று (7-02-09) தஞ்சை மாவட்டம் சீர்காழியில் தீக்குளித்து உயிர்தியாகம் செய்த ரவிச்சந்திரனின் மரணம் குறித்த வீடியோ பதிவுகள்
உணர்வுள்ள தமிழனின் உயிர் தியாகத்தை காணுங்கள்...
சாகும் தருவாயிலும் தன்னை காப்பாததே.. ஈழத்தமிழனை காப்பாத்து என்று கூறும் உணர்வாளனை காணுங்கள்...
இன்னும் எத்தனை தமிழ் உயிர்கள் வேண்டும் மத்திய,மாநில அரசுகளுக்கு...?