ஒகேனக்கல் பிரச்னை 'அடைமழை விட்டாலும் செடிமழை விடாத' கதையாக இன்னும் தொடர்கிறது!
மே 10-ம் தேதி கர்நாடகத்தில் சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், பெங்களூருவைத் தலைமைய கமாகக் கொண்டு கர்நாடகா மற்றும் தமிழகத்தில் இயங்கி வரும் 'தனித்தமிழர் சேனை' அமைப்பு அங்குள்ள அரசியல்வாதிகளின் சுயரூபத்தைத் தோலுரித்துக் காட்டத் தயாராகிவருகிறது!
அந்த அமைப்பின் நிறுவனர் நகைமுகன் அதுபற்றி நம்மிடம் விரிவாகப் பேசினார். ''ஆரம்பத்திலிருந்து கவனித்துப் பார்த்தாலே தெரியும். காவிரிப் பிரச்னை எழும்போதெல்லாம், ஒன்று... கர்நாடகத்தில் தேர்தல் வரும் நேரமாக இருக்கும். அல்லது, அங்கு ஆளுங்கட்சிக்கு வேறு ஏதாவது பெரிய பிரச்னை புகையத் தொடங்கியிருக்கும். இம்மாதிரி சந்தர்ப்பங்களிலிருந்து கர்நாடக மக்களையும்
எதிர்க்கட்சிகளையும் திசைதிருப்பவே காவிரிப் பிரச்னை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மற்றபடி, கர்நாடகத்தில் எஸ்.எம்.கிருஷ்ணா, தேவகவுடா, எடியூரப்பா, வாட்டாள் நாகராஜ், இன்னுமுள்ள துண்டு துக்கடா அரசியல்வாதிகள் யாருக்குமே கர்நாடக மக்கள் மீது உண்மையான அக்கறை இல்லை.
காவிரிப் பிரச்னைக்கு இணையாக கர்நாடகத்தில் பல நிரந்தரப் பிரச்னைகள் காலங்காலமாக இருந்துவருவது தமிழக அரசியல்வாதிகள் பலருக்குத் தெரியாது. தமிழகத்தில் 80 சதவிகிதத்தினர் தமிழர்கள்; கேரளாவில் 70 சதவிகிதத்தினர் மலையாளிகள்; ஆந்திராவில் 66 சதவிகிதத்தினர் தெலுங்கர்கள்; ஆனால், கர்நாடகத்தில் 40 சதவிகிதம் மட்டுமே கன்னடர்கள் இருக்கின்றனர். மீதமுள்ள 60 சதவிகிதத்தினர் கன்னடர் அல்லாதோர். அதில், பெரும்பான்மையாக 28 சதவிகிதம் தமிழர்கள். கூர்க் பகுதியில் (குடகு மலைப்பகுதி) கொடவா மொழி பேசும் மக்கள், மங்களூர், உடுப்பியில் துளு மொழி பேசும் மக்கள், பெல்காம் பகுதியில் மராட்டி மொழி பேசும் மக்கள் மற்றும் கர்நாடகாவின் பல பகுதிகளிலும் தெலுங்கு, மலையாளம் பேசும் மக்கள் உள்ளனர்.
இவர்களுக்கும் மாநில அரசுக்கும் பல்வேறு பிரச்னைகள் எப்போதும் புகைந்தவண்ணம் இருக்கிறது. பெல்காம் (மகாராஷ்டிர எல்லைப் பகுதி) பகுதியில் கர்நாடகாவுக்கும் மகாராஷ்டிராவுக்கும் எல்லைப் பிரச்னை இருக்கிறது. இந்தப் பிரச்னையில் சிவசேனாவும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ§ம் கர்நாடகத்தை பகிரங்கமாகவே கண்டித்துவருகின்றன. மகாராஷ்டி ரத்தில் 'மகாராஷ்டிரா ஏகிகரன் சமிதி' (Maharastra Ekikaran Samiti) என்ற அமைப்பு கர்நாடகத்திலுள்ள சில பகுதிகளைக் கேட்டுப் போராடிவருகிறது. இதற்காக சில ஆண்டுகளுக்கு முன் 'மகாஜன் கமிட்டி' அமைக்கப்பட்டு, அந்த கமிட்டியும் சில பகுதிகளை இரு மாநிலங்களும் பரஸ்பரம் மாற்றிக் கொடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிக்கை சமர்ப்பித்தும், கர்நாடக அரசின் அலட்சியத்தால் இதுவரை இப்பிரச்னை தீர்க்கப்படவில்லை
மங்களூர், உடுப்பி உள்ளிட்ட பகுதிகளில் பெரும் பான்மையாக வசிக்கும் துளு மொழி பேசும் மக்கள், பல ஆண்டுகளாக தங்களுக்கென தனிநாடு கேட்டுப் போராடி வருகின்றனர். அவர்கள் போராடுவதற்கும் நியாயமான காரணம் இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு என்று திராவிட மொழிகள் ஐந்து. மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது துளு பேசுபவர்களுக்கு மட்டும் தனி மாநிலம் தரப்படவில்லை. இதனால், அவர்கள் 'துளுநாடு சேனா' என்ற அமைப்பை நிறுவிப் போராடிவருகின்றனர். கொடவா மொழி பேசும் மக்கள் குடகு நாடு கேட்டுப் போராட்டம் நடத்துகிறார்கள்'' என்று சொல்லிக்கொண்டே வந்த நகைமுகன், தமிழர் பிரச்னைக்கு வந்தார்- ''கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்த கொள்ளேகால் அநியாயமாக முன்பு மைசூருடன் இணைக்கப்பட்டு விட்டது. இப்படி இன்னும் பல பகுதிகளைச் சொல்லலாம். இதை எல்லாம் நாம் திருப்பிக் கேட்டால் கர்நாடகம் தாங்குமா?
இப்படித் தங்கள் மாநிலத்துக்குள்ளும், பிற மாநிலங் களிடமும் இருக்கும் பிரச்னைகளைத் தேர்தல் நேரத்தில் மறக்கடித்து திசைதிருப்ப ஒவ்வொரு முறையும் காவிரிப் பிரச்னை எழுப்பப்படுகிறது. கர்நாடகாவில் கன்னடர்களுக்கு அடுத்து மெஜாரிட்டியாக இருக்கும் தமிழனை அடித்து நொறுக்கி, அவனை பயம் கொள்ளச் செய்துவிட்டால் தனி மாநிலம் கேட்கும் மற்ற மொழி பேசும் மக்கள் பயந்துகொண்டு தாங்களாகவே அடங்கி விடுவார்கள் என்று நினைக்கிறது கர்நாடகம். இந்த நிலையில், தமிழகத்திலுள்ள அரசியல்வாதிகள் அலட்சியமாக உள்ளனர்.
இதனால் நாங்கள் களத்தில் இறங்கியுள்ளோம். ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டத்தை நிறுத்தவோ, ஒத்திப்போடவோ எந்த அரசியல்வாதிக்கும் உரிமை யில்லை என்பதை சட்ட விதிமுறைகளின் ஆதாரங்க ளுடன் விளக்கி, தேசிய மனித உரிமை ஆணையம், தமிழ் நாடு மனித உரிமை ஆணையம் மற்றும் கர்நாடகா மனித உரிமை ஆணையம் ஆகியவற்றிடம் மனுத் தாக்கல் செய்துள்ளோம். இதில் நியாயம் கிடைக்கும்வரை ஓயமாட்டோம்'' என்று அனல் தெறிக்க முடித்தார் நகைமுகன்!
தொண்டை வரள சத்தம் போடுகிறோம்.தவிச்ச வாய்க்குத் தண்ணீர் கிடைத்தால் சரி!

தண்ணீர்ப் பிரச்னை மட்டுமின்றி, கர்நாடக தேர்தல்களின்போது வாக்குச் சீட்டுக்களில் தமிழ் இடம் பெற வேண்டும் என்றும் 'தனித்தமிழர் சேனை' போராடி வருகிறது. இதுகுறித்து நகைமுகன் நம்மிடம், ''தமிழகத்தில் உடுமலைப்பேட்டை பகுதியில் தெலுங்கிலும், கிருஷ்ண கிரி, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் கன்னடத்திலும், நாகர்கோவில் பகுதியில் மலையாளத்திலும் ஓட்டுச் சீட்டு அச்சடிக்கப்படுகிறது. கர்நாடகத்தில் கன்னடர்களுக்கு அடுத்தபடியாக அதிகம் வசிக்கும் தமிழர்கள் இருக்கும்போது, அங்கு தமிழிலும் ஓட்டுச் சீட்டு அச்சடிக்கப்படுவதுதான் நியாயம். இதுகுறித்து கர்நாடகா மற்றும் தேசிய தேர்தல் கமிஷனிடம் மனு அளித்துள்ளோம். தேவைப்பட்டால் நீதிமன்றத்தை அணுகவும் தயாராக இருக்கிறோம்'' என்றார்.
நன்றி - ஜூனியர் விகடன்.
இவ்ளோ பிரச்னையை வைத்துக்கொண்டே கர்நாடகம் இந்த ஆட்டம் போடுதே. அதெல்லாம் இல்லேன்னா இந்நேரம் தமிழனை குழி தோண்டி பொதைத்திருப்பார்கள்.நகைமுகன் போன்ற தமிழ் உணர்வாளர்கள் இருக்க போய் தான் கர்நாடக தமிழன் இந்த அளவுக்காவது பாதுகாப்போடு இருக்கான். தொடரட்டும் அவர் பணி.... வாழ்க அவர் தொண்டு...
1 comments:
திரு. நகைமுகன் அவர்களின் பெயரை நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் பதிவின் மூலம் படிக்கிறேன். வாழ்க அவர் தொண்டு.
Post a Comment