Wednesday, April 16, 2008

தொடரும் ஒடுக்குமுறைகள்...

மலேசியாவின் பிரபல "மக்கள் ஓசை" நாளேட்டின் பிரசுர பெர்மிட்டைப் புதுப்பிக்க உள்துறை அமைச்சு மறுத்து விட்டது. மாற்றரசாங்க கட்சிகளின் செய்திகள் அந்நாளிதழில் பரவலாக வெளியிடப்பட்டது இதற்கு காரணம் எனக் கருதப்படுகிறது.

இது தொடர்பாக மக்கள் ஓசை பொது நிர்வாகி எஸ்.எம்.பெரியசாமியைத் தொடர்பு கொண்டபோது அச்செய்தியை உறுதிப்படுத்தினார். பெர்மிட்டைப் புதுப்பிக்க செய்துகொள்ளப்பட்ட விண்ணப்பம் ஏற்கப்படவில்லை என அமைச்சு கடிதம் அனுப்பியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. பெர்மிட் முடிவடைவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே, ஜுலை மாதத்திலேயே, புதுப்பிப்பதற்கு விண்ணப்பம் செய்து விட்டதாக பெரியசாமி கூறினார். அக்டோபர் 15 திலிருந்து பெர்மிட் இல்லாமலேயே அது வெளியிடப்பட்டு வந்தது. அந்த நாளிதழில் மாற்றுக்கட்சிகளின் செய்திகள் குறிப்பாக கெஅடிலான் தலைவர் அன்வார் இப்ராகிம் பற்றிய செய்திகள் நிறைய வருவதுண்டு.
மக்கள் சக்தி இயக்கம் பற்றிய செய்திகளுக்கும் அதில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. “உள்துறை அமைச்சின் முடிவுக்கு எதிராக முறையீடு செய்யப்போகிறோம்”, என பெரியசாமி கூறினார்.

நன்றி - மலேசியாஇன்று.காம்


இனவாத,பயங்கரவாத அரசுகளின் கோரதாண்டவங்கள் பத்திரிக்கை சுதந்திரத்தின் குரல் வலையை மிதித்து கொண்டே தான் ஆரம்பிக்கப்படுகின்றன. ஒரு இனத்தை அழிக்கவும், ஒடுக்கவும் அவர்களின் ஊடகங்களை தான் முதலில் ஒடுக்குகிறார்கள். 1970களில் இலங்கை அரசாங்கமும் முதலில் ஒடுக்கியது தமிழ் ஊடகங்களை தான். தமிழகத்தில் இருந்து வரும் சினிமா,பத்திரிக்கை என அனைத்து ஊடங்கங்களும் தடை செய்யப்பட்டு, தமிழகத்துடன் இருந்த இணைப்பை துண்டித்தனர்.

ஒரு நாட்டின் வளமான ஜனநாயகத்தை, நல்ல அரசாங்கத்தை, பொருளாதார வளர்ச்சியை அந்நாட்டின் பத்திரிக்கை சுதந்திரத்தின் அளவை வைத்தே கூறிவிடலாம். உலகில் நான்கில் மூன்று பங்கு மக்கள் வாழும் நாடுகளில் பத்திரிக்கை சுதந்திரம் மட்டுப்படுத்தபட்டே இருக்கிறதாக ஆய்வு சொல்கிறது. இருவகையாக சுதந்திரம் பறிக்கப்படுகிறது ஒன்று அரங்சங்க அனுமதி என்ற பெயரிலும் மற்றொன்று தவறான தகவலுக்கு தண்டனை என்ற முறையிலும் தான்.

1501 ஆண்டு போப் ஆறாம் அலெக்சாண்டர் என்பவர் தான் பத்திரிக்கைகளுக்கு கட்டுப்பாடு என்ற முறையை முதல் முறையாக கொண்டுவந்தார் என்கிறது வரலாறு. பத்திரிக்கை வெளியிடுபவர் எல்லோரும் சர்ச்சில் அனுமதி வாங்க வேண்டும் என்ற ஆணையை பிறப்பித்தார். அனுமதி பெறாதவர்களுக்கு தண்டனையும் வழங்கப்பட்டது. மத நம்பிக்கைக்கு எதிரான பிரச்சாரத்தை அடக்கவே அவ்வாறு செய்தார். இங்கிலாந்தில் தான் முதல்முதலாக பத்திரிக்கை சுதந்திரத்திற்கான போராட்டம் ஆரம்பித்தது. ஆனால் முதன் முதலில் பத்திரிக்கை சுதந்திரத்தை சட்டமாகியது அமெரிக்கா தான். "first amendment" என்ற பெயரில் உருவான அந்த சட்டம் தான் உலகளாவிய அளவின் பத்திரிக்கை சுதந்திரத்துக்கு அடிபோட்டது. "fourth எஸ்டேட்" நான்காம் தூண் என்று பத்திரிக்கை துறையை குறுப்பிட காரணம் அந்த சட்டம் தான்.

உலகில் அதிக பத்திரிக்கை சுதந்திரம் கொண்ட நாடுகள் பின்லாந்து, ஐஸ்லந்து, நெதர்லாந்து, நோர்வே, டென்மார்க், இர்லாந்து, ஸ்லோவொக்கியா, சுவிற்சர்லாந்து,நியூஜிலாந்து ஆகிய நாடுகள். குறைவான சுதந்திரம் கொண்ட நாடுகள் வட கொரியா, பர்மா, சீனா, வியேட்னாம்,நேபாளம், சௌதி அரேபியா, ஈரான் இறுதியாக இலங்கை. இதில் சீனா மற்றும் நேபாளத்தில் தவறான வார்த்தைகள், படங்களை பிரசுரிப்பதை அரசாங்கம் நினைத்தால் ௧ வருடம் வரை பத்திரிகையாளர்களுக்கு சிறை தண்டனை உண்டு.அதே போல் மேற்சொன்ன நாடுகளை சேர்த்து சில நாடுகளில் சர்ச்சைக்குரிய இடங்களுக்கு வெளிநாட்டு பத்திரிக்கையாளர்களை அந்நாட்டு அரசாங்க அனுமதிப்பதில்லை.


இடங்கள் :-

௧. செசென்யா, ரஷ்ய

௨. திருகோணமலை, இலங்கை

௩.மியான்மர், பர்மா

௪.பாபா, இந்தோனேசியா

௫.பெஷ்வர், பாகிஸ்தான்

௬.திபெத், சீனா

உலகில் பல்வேறு அமைப்புகள் பத்திரிக்கை சுதந்திரத்திற்காக போராடி வருகின்றன. "ஆர்டிகல் 19" என்ற மனித உரிமைக்கான அமைப்பு உலகளாவிய போராட்டத்தை இதற்காக நடத்தி வருகிறது. பத்திரிக்கை சுதந்திரத்திற்கான குழுமம் அண்ட் ஒரு அமைப்பும் 1981ஆம் ஆண்டில் இருந்து போராடி வருகிறது. இவர்களின் போராட்டத்தால் நேற்று கூட பாக்த்தாதில் அமெரிக்கா படையினரால் சிறைபிடிக்க பட்ட ஹுசைன் என்ற பத்திரிக்கையாளர் ௨ வருடங்கள் கழித்து மீட்கப்பட்டுளார். இப்படி பல்வேறு அமைப்புகள் உலகம் முழுவதும் இருக்கின்றன.
மொத்தத்தில் எங்கெல்லாம் ஊடங்களின் சுதந்திரம் நசுக்கப்டுகிறதோ அங்கெல்லாம் ஜனநாயத்தின் மூச்சு மெதுவாக நின்று கொண்டிருப்பதை தான் அர்த்தம்.

0 comments: