நேபாளத்தில் மன்னராட்சிக்கு முடிவுகட்டி முழுமையான ஜனநாயகத்திற்கு வித்திடும் புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கவுள்ள தேச சட்டப் பேரவையை தேர்வு செய்யும் தேர்தலில் மாவோயிஸ்ட் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது.
நேபாள தேச சட்டப் பேரவைக்கு மொத்தமுள்ள 240 இடங்களில் இதுவரை முடிவுகள் அறிவிக்கப்பட்ட 181 தொகுதிகளில் மாவோயிஸ்ட் கட்சி 101 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மாவோயிஸ்ட் கட்சியின் தலைவர் பிரசண்டா தலைநகர் காட்மாண்டு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். முன்னாள் பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலாவின் நேபாள காங்கிரஸ் கட்சி 31 இடங்களிலும், நேபாள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 15 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.மாவோயிஸ்ட் கட்சி அருதிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேபாளத்தில் 240 ஆண்டுகளாக நீடித்த மன்னராட்சிக்கு முடிவுகட்டும் இத்தேர்தலில் மன்னராட்சிக்கு ஆதரவான கட்சிகள் படுதோல்வியைச் சந்தித்துள்ளன. முடிவுகள் அனைத்தும் வெளிவருவதற்கு 10 நாட்கள் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.
நன்றி - தமிழ்.வெப்துனியா.காம்
உலகளவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய செய்திகளில் இந்த செய்தியும் ஒன்று என்பதில் ஐயமில்லை. இது வரை ஆயுத போராளி குழுக்களாய், பயங்கரவாதிகளாய் ஊடகங்களாலும், வல்லாதிக்க சக்திகளாலும் சித்தரிக்கப்பட்ட மாவோயிஸ்ட்கள் இன்றைக்கு மக்கள் சக்தியில் உருவான எழுச்சியின் துணையோடு ஆட்சியை அமைக்க போகிறார்கள். மக்கள் நலனில் நாட்டமில்லாத எந்த ஆட்சியும், அரசாங்கமும், அரசபைகளும் வெகுநாள் நீடிக்க முடியாது என்பதற்கும், மக்கள் நன்மைகாய் இயங்கும் ஆயுத போராளிகள் எல்லாம் பயங்கரவாதிகள் அல்ல என்பதற்கும் மற்றுமொரு சாட்சி.
இந்த வெற்றியால் உலகநாடுகள் மத்தியில் மாவோயிஸ்ட் மேலிருந்த பார்வை கொஞ்சம் கொஞ்சமாய் மாற போகிறது. அமெரிக்காவிற்கான நேபாள தேர்தல் பார்வையாளர் முன்னால் அதிபர் ஜிம்மி கார்டர் விடுத்துள்ள அறிக்கையில் "அமெரிக்கா தன்னுடைய போக்கை மாற்றி மாவோயிஸ்ட் களுடன் உறவுகளை மேற்கொள்ளும் என்றும், இதுவரை உறவு வைக்காதது தவறு" என்றும் குறிப்பிட்டுள்ளார். தவறான வெளிநாட்டு கொள்கையால் நேபாள ஆதிக்க சக்திகளுக்கு துணைபோன இந்தியா போன்ற நாடுகளுக்கு இது பெருத்த அடி...இபோதாவது இந்தியா தன் அண்டை நாடுகளுடான தவறான வெளியுறவு கொள்கைகள் தவறு என்பதை அறியவேண்டும்.
"இலட்சியத்தால் ஒன்றுபட்ட எழுச்சிகொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிடமுடியாது..." என்ற தமிழ் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் கூற்று மீதும் நிரூபிக்கப்பட்டுள்ளது, இதே மக்கள் எழுச்சி தான் தமிழீழ போராட்டத்தை முப்பது ஆண்டுகளாய் அதே தீரத்துடனும், வீரத்துடனும், ௧௮000 போராளிகளை களபலி குடுத்தும் இன்று வரை எந்த நாட்டின் உதவியும் இல்லாமல் மக்களின் உதவிடன் மட்டும் நடந்து வருகிறது. இந்த எழுச்சி நிச்சியம் ஒரு நாள் தமிழீழத்தை உருவாகியே தீரும்.
அகவே இப்பொதைய நிகழ்வை கருத்தில் கொண்டு இந்தியா மற்றும் ஏனைய சர்வதேச சமூகம் இலங்கையுடனான வெளியுறவு கொள்கையை திருத்திக்கொண்டு, மக்கள் ஆதரவு யார்க்கு, மக்களுக்கான தலைமை யார் என்பதை புரிந்து அவர்களை நோக்கி ஆதரவுகரம் நீட்ட வேண்டும். விடுதலை புலிகளை அங்கரித்து அவர்களுடன் உறவுகளை வகுத்துகொல்லவேண்டும் இல்லையேல் இப்போது விழுந்தது போல் மற்றும் ஒரு அடி விழும் என்பது உறுதி.
0 comments:
Post a Comment