Saturday, March 22, 2008

ஜானி - ஒரு திரைக்கவிதை...



வேலைகள் அற்ற, நேரமே சுமையாய் போன ஒரு மாலை பொழுதை போக்குவதற்காக எதாவது படம் பாக்கலாம் என இணையத்தை துலாவியபோது சிக்கியது 'ஜானி'.. நான் பல தடவை பார்த்தும் சலிக்காத படம்... ஒவ்வொரு முறை காணும் போதும் முதல் தடவை பார்த்த போது எப்படி என்னை ஈர்ததோ, தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதே போல் இன்னும் ஈர்க்கிறது... ஒரு கவிதைக்கான நேர்த்தியுடன் வடிவமைத்திருக்கிறார் மகேந்திரன். உணர்வுகளை வார்த்தையாக்கி தோரணமிட்டு உருவாகிய காதல் கவிதை படித்த திருப்தி வருகிறது இப்படம் பார்த்த பின்.

இரு அழகான காதலியல் படம் முழுக்க வியாபதிருக்கும், ஒன்று அர்ச்சனா கொண்டது மற்றொன்று வித்யாசாகர் கொண்டது.. தன் காதலன் தவறானவன் என தெரிந்தும் மாசு மறுவற்ற அன்பை அளிக்கும் அர்ச்சனா... கொலை செய்து தலைமறைவில் இருக்கும் காதலனிடம் "இன்னும் எவ்ளோ நேரம் உங்களிடம் பேச போறேன், தயவுசெய்து பேசுங்கள்" என கெஞ்சும் காதல் அவளுடையது. சரி, தவறு என்பதற்க்கேல்லாம் அப்பாற்பட்டு தன் காதலனை அப்படியே ஏற்றுக்கொள்ளும் காதல் அது. காதலின் துரோகத்தை தாளாமல் தன் காதலியை கொலை செய்யும் வித்யாசாகர். தான் நேசிக்கும் தொழிலை காட்டியும், பணதாசையலும் மனம் மாறும் காதலிக்கு அதே காதலின் தீவிரத்தால் மரணத்தை பரிசாக்குகிறான். காதலின் வலி அவனை கொலைகாரன் ஆக்குகிறது.

இதனூடே, ஜானி தலைமறைவாய் இருக்கும் இடத்தில் அந்த மலைவாழ் பெண்ணுக்கு அவன் மேல் உண்டாகும் திடீர் நேசம். ஜானியின் தாய்,தந்தைக்குமிடையே உள்ள உலகம் அறியா காதல். ஜெயமாலினி மேல் அந்த தெலுங்கர் கொண்டிருக்கும் காம காதல் என மாறுபட்ட பல காதல்களால் பின்னபட்டிருக்கும் படம்.

முக்கியமாக குறிப்பிட வேண்டிய இன்னொன்று படம் முழுக்க ஆக்கிரமித்திருக்கும் இளையராஜாவின் இசை. படம் பார்பவர்களை கதைக்குள் முழுமையாக இழுக்க துணை நிர்ப்பதுதான் பின்னணி இசை. அதை இந்தப்படத்தின் பின்னணி இசை செவ்வனே செய்கிறது. இளையராஜாவின் உச்சம் இந்த படத்தின் இசைதான் என நான் சொல்வேன்.

படத்தின் இழையோடும் கவிதை தன்மையை அறிந்துகொள்வதற்கு அர்ச்சனா தன் காதலை சொல்லும் காட்சியே உதாரணம். நான் மிகவும் ரசித்த காட்சி..

0 comments: