பெங்களூர்:ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரில் இன்று வன்முறை மூண்டது. தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்ட இரு தியேட்டர்கள் சூறையாடப்பட்டன.ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து
வரும் கன்னட அமைப்புகள், ஓகனேக்கல் கர்நாடக்ததிற்குச் சொந்தமானது என்றும் வீம்பாக பேசி வருகின்றனர்.மேலும் ஏப்ரல் 9ம் தேதிக்குள் ஓகனேக்கல் திட்டத்தைக் கைவிட வேண்டும். இல்லாவிட்டால் தமிழக பேருந்துகளை தடுத்து நிறுத்துவோம், தமிழ்ப் படங்களை திரையிட விட மாட்டோம். தமிழ் டிவி சானல்களும் இருட்டடிப்பு செய்யப்படும் என கன்னட ரக்சன வேதிகே என்கிற கன்னட வெறியர் அமைப்பு எச்சரித்துள்ளது.
இதற்கு நேற்று சென்னையில் நடந்த பாலம் திறப்பு விழாவில் முதல்வர் கருணாநிதி கண்டனம் தெரிவித்தார். மத்திய அரசு உடனடியாக தலையிட்டு இந்திய இறையாண்மையைக் காக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் ஓகனேக்கல் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதியாக தெரிவித்தார்.இதையடுத்து கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் இன்று பெங்களூரில் வன்முறையில் குதித்தனர். சேஷாத்ரிபுரம் பகுதியில் குவிந்த அவர்கள் அங்குள்ள நடராஜ் மற்றும் வினாயக் ஆகிய தியேட்டர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.இந்த தியேட்டர்களில் தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்ட தியேட்டர்களுக்குள் புகுந்த கும்பல் அங்கிருந்த கண்ணாடி ஷோ கேஸ்களை அடித்து உடைத்தனர்.
தியேட்டர் இருக்கைகளையும் கிழித்தெறிந்தனர்.பின்னர் அருகில் உள்ள கடைகளுக்குள் புகுந்த அக்கும்பல் அங்கு தமிழர்கள் வைத்துள்ள கடைகளையும் தாக்கி சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்றனர்.இந்த சம்பவத்தால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. சேஷாத்ரிபுரம் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்
நன்றி - தட்ஸ்தமிழ்.com
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று எவ்வளவு தவறான வார்த்தைகளை நம் முப்பாட்டன் கனியன் பூங்குன்றனார் கூறிவிட்டு சென்றிருக்கிறார். அதுவும் தமிழனிடம் சொல்லிருக்க கூடாத வார்தைகள். இந்தியா தேசியம் என்று கூறி திரியும் ஒட்டு பொறுக்கிகளின், ஏமாற்று பேர்வழிகளின் வார்தைகள் அது. இந்தியா தேசியத்துக்குள் இருந்து கொண்டே ஒருவன் தமிழகத்தில் இருந்து வரும் பேருந்துகளை உள்ள விட முடியாது என்று கூறி அவற்றை சிறை வைத்து, அடித்து நாசம் பண்ணுகிறான், குடிக்க தண்ணி எடுக்க கூடாதுன்னு சொல்லி பந்த் நடத்துறான்... அப்புறம் என்ன தேசியம், யாதும் ஊரே...மண்ணாங்கட்டி...
தமிழ் திரைப்படத்தை கூட திரை இட முடியாத நிலைமையில் மாற்ற மாநிலங்களில் இருக்கையில் தமிழ்நாட்டில் எந்த மாநிலத்து ஆட்கள் வேணாலும் முதலமைச்சர் கூட ஆகலாம் என்கிற நிலைமை அவன் இளிச்சவாய் தனத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு. அதை விட கொடுமை அதை பெருமையாய் வேற பேசி திரிவான் தமிழன் (அம்புட்டு நல்லவனா இருக்கான்...).
இறையாண்மை என்ற சொல்லை யாரவது பேசி கேட்டால் சமீபகாலமாக எனக்கு பயங்கர கோபம் வருகிறது. கடைசியா என் கோபத்திற்கு இலக்காகி இருப்பவர் நம்ம முதல்வர். சென்னையில் பாலம் திறப்பு விழா நிகழ்ச்சியில் அந்த வார்த்தையை சொல்லி கெஞ்சி கூத்தாடி இருக்காரு கன்னடத்து வெறியர்களிடம். தமிழனுக்கும் இறையாண்மைக்கும் ஏழாம் பொருத்தம் தான். இலங்கை இறையாண்மைகாக அங்க இருக்க தமிழன் அடிபடனும், இந்தியா இறையாண்மைகாக இங்க இருக்க தமிழன் அடிபடனும் என்று விதி இருக்கு போல. மும்பையில் அடிவாங்குனாலும், கர்நாடகாவில் அடிவாங்கினாலும் இந்தியா இறையாண்மைகாக வாயை போத்திகிட்டு இருக்கணும் தமிழன்.
முதல்வரே, திராவிடத்தின் கடைசி நம்பிக்கையே,
ராமேஸ்வரம் தமிழர்கள் இலங்கை கடற்படையால் சுட படும் போது எங்கே போனது இந்தியாவின் இறையாண்மை? காவேரி தண்ணீர் பிரச்சனையில் பேருந்தோடு தமிழர்கள் மூவர் எரிக்கப்பட்ட போது எங்க போனது இந்தியா இறையாண்மை?. எத்தனை நாள் தான் இந்த இறையாண்மையை காரணம் காட்டி தமிழர்களை காவு கொடுப்பதாய் உத்தேசம். போதும் நாம் கெஞ்சியது செயலில் இறங்கினால் ஒழிய கன்னடியர்கள் கொட்டம் அடங்காது...
3 comments:
உங்கள் ஆதங்கம் புரிகிறது, அது சரி இறையாண்மை என்றால் என்ன சத்தியமா எனக்கு தெரியல, நீங்க தெரிஞ்ச சொல்லுங்க பாக்யா
யார் அடிச்சாலும் பதில் பேசாம தமிழன் அடிவாங்கிகனும் அதுக்கு பேரு தான் இறையாண்மை.... தேசியம் என்பது எவ்வளவு போலியான வார்த்தையோ அதே அளவு வார்த்தை தான் இந்த இறையாண்மை...
என்ன தைரியம் உங்களுக்கு தமிழன் இப்படி பேசுவது கூட இறையான்மைக்கு எதிரானது நண்பரே
Post a Comment