தமிழ்நாட்டிலிருந்து மின்சாரத்தைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்த தமது தலைமையிலான குழு விரைவில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக சிறிலங்காவின் மின்துறை அமைச்சர் ஜோன் செனிவிரட்ன தெரிவித்துள்ளார்.
"கடலுக்கடியில் மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ளக் கூடியதான பல மில்லியன் ரூபாய் மதிப்பிலான பாரிய திட்டத்துக்கு சிறிலங்கா அரசு முன்னுரிமை கொடுத்திருக்கிறது. இத்திட்டத்துக்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலான முதல்நிலை அறிக்கை தயாரிக்கும் பணி முடிவடைந்துள்ளது. இது தொடர்பில் விவாதிக்க எனது தலைமையிலான குழு இந்தியாவுக்குச் செல்ல உள்ளது" என்றார் அவர்.
கடலுக்கடியிலான கேபிள் மூலம் 200 கிலோ மீற்றர் நீளத்துக்கு சிறிலங்காவின் அனுராதபுரம் மற்றும் தமிழர் பிரதேசங்களான மன்னார், தலைமன்னார் வழியாக தமிழ்நாட்டின் மதுரையை இணைத்து மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ள சிறிலங்கா அரசு திட்டமிட்டுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இத்திட்டமானது ரூ. 450 மில்லியன் டொலர் மதிப்பிலானது என்றும் கூறப்படுகிறது.
சிறிலங்காவின் நுரைச்சோலை மற்றும் திருகோணமலை அனல் மின் திட்டங்கள் முடிவடைய 2011 ஆம் ஆண்டு ஆகும் என்பதால் அதுவரையில் இந்தியாவிடமிருந்து மின்சாரத்தைப் பெற சிறிலங்கா முடிவு செய்துள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய தாயகப் பிரதேசமான திருகோணமலையில் தமிழ் மக்களை பலவந்தமாக வெளியேற்றிவிட்டு மக்கள் வாழ்விடங்களில் அனல் மின் திட்டத்தை இந்தியாவின் உதவியுடன் சிறிலங்கா செயற்படுத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி - புதினம்.காம்
"பிச்சை எடுத்தானாம் பெருமாளு அதை புடிங்கி திண்ணானாம் அனுமாரு" ன்னு ஒரு பழமொழி இருக்குல நம்ம ஊர்ல அது இந்த செய்திக்கு கரெக்டா பொருந்தும்...
போன வருசத்தை விட இந்த வருஷம் மண்ணெண்ணெய், விசிறி விற்பனை மின்சார பற்றாகுறையல கூடிருக்குனு தமிழ்நாட்டுல ஒரு கணக்கு சொல்லுது. முன்னாள் முதல்வரும், இந்நாள் முதல்வரும் நீதான் காரணம், நான் தான் காரணம்னு அறிக்கை சண்டை நடந்துகிட்டு இருக்கு, இதுக்கு நடுல எல்லா தொழிற்சாலைகளுக்கும் ஒரு நாள் லீவு விட்டு மின்சாரத சேமிக்க திட்டம் போற்றுகாங்க (ஒரே பிரோஜானம் அந்த ஒருநாள் எல்லா தொழிலாளர்களும் வீட்டில் உட்காந்து விசிறி குட்சியால் முதுகை சொரிந்து கொள்ளலாம்). இதெல்லாம் விட பெரிய விஷயம் மின்சார பற்றாகுறைய போக்க மேற்கு வங்காளத்தில் இருந்து மின்சாரம் கடன் (பிச்சை) வாங்க போறதா நம்ம 'டினோசர்' வீராசாமி மன்னிக்க 'ஆற்காடு' வீராசாமி சொல்லி இருக்கார். லட்சணம் இப்படி இருக்கைல மேல இருக்க செய்தியை படிச்சா உடனே சிரிப்பதா இல்லை அழுவதானு தெரியல... தமிழ்நாட்டுல இருக்கவனுகே கோமணத்தை காணோம் இதுல அவன் நம்மட்ட கோட் சூட் கேட்டு வர்றான்.
இத விட பெரிய கொடுமை தமிழனை அழிக்க தமிழ்நாட்டுல இருந்து மின்சாரம் மின்சாரம் கேக்குறது... தமிழ்நாட்டு தமிழனின் கையாலாகத தனத்தால இந்த மாறி பேச்செல்லாம் கேக்கவேண்டியது இருக்கு... தமிழ் உணர்வும் இன உணர்வும் இருந்திருந்தால் இந்நேரம் அவன் இப்படி தைரியமா வந்து கேட்ருக்க முடியமா?..
என்னைக்கு தமிழா உனக்கு இன உணர்வும், மொழி பற்றும் வர போகுது?...
0 comments:
Post a Comment