Friday, March 14, 2008

எவனுக்கோ தேள் கடிச்சா இவனுக்கு நெறி கட்டுது...



தாய்வானின் "விடுதலை"க்கான வாக்கெடுப்பு: சிறிலங்கா கவலை


தாய்வானின் "விடுதலை"க்கான வாக்கெடுப்பு நடவடிக்கைகள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் கவலை கொள்வதாக அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

"ஒரே சீனா" என்ற நிலைபபாட்டில் சிறிலங்கா உறுதியாக உள்ளது. தாய்வான் எந்த வகையிலும் சுதந்திரமடைவதையும் அனைத்துலக மற்றும் பிராந்திய அமைப்புக்களில் பங்கேற்பதையும் சிறிலங்கா எதிர்க்கிறது.
அத்தகைய நடவடிக்கையானது ஐ.நா. மற்றும் அனைத்துலக நடைமுறைகளுக்கு எதிரானது.

சீனா மற்றும் தாய்வான் முழுமைக்கான சட்டப்பூர்வ அரசாங்கமாக சீன மக்கள் குடியரசு உள்ளது. தாய்வான் சீனாவின் பிரிக்க முடியாத பிரதேசமாகும்.

தாய்வான் தொடர்பிலான 1971 ஆம் ஆண்டு நிலையை மாற்றியமைக்கும் முயற்சியானது ஆசியப் பிராந்தியம் முழுமைக்குமான உறவுகளில் விரிசல்களை உருவாக்கும்.


அனைத்துலக சமூகத்தின் கரிசனைகளை தாய்வான் மதிக்கும் என்று சிறிலங்கா உறுதியாக நம்புகிறது. ஆகையால் சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பு என்று அழைக்கப்படும் நடவடிக்கையை தாய்வான் கைவிட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் எவனாவது எங்கயாவது தனி நாடு, தனி மாநிலம், தனி ஊரு, தனி தெரு, தனி வீடுன்னு எத தனியா வேணும்னு கேட்டாலும் பாவம் இந்த இலங்கை அரசு ரெம்ப கவலை பட அரம்பிசிடுது , தனி தெலுங்கான கேட்டு போராடுற சந்திரசேகர் ராவ்க்கு எதிராவும் நாளைக்கு அறிக்கை விட்டாலும் விடும் இலங்கை அரசு ...

0 comments: