Monday, March 25, 2013

24ம் திராவிட புலிகேசி...


"வன்முறைக்கு எதிராக நடத்தப்படுகிற வன்முறையும் அகிம்சை தான்.. வன்முறையை சகித்துக்கொள் என்கிற அகிம்சையும் வன்முறைதான்." - நான் பெரிதும் நேசித்தநேசிக்கும் இந்த வரிக்கு சொந்தகாரர் பேராசிரியர் சுபவீஇந்த எழுத்தை போல சுபவீயையும் நான் எனது பள்ளிகல்லூரி காலங்களில் நேசித்ததற்கு நிறைய காரணங்கள் இருந்தது. மதுரையில் பள்ளி விடுமுறைகளில் பங்குபெறும் ஈழ ஆதரவு தமிழ்த்தேசிய கூட்டங்களிலும்மற்றவர்கள் அவரை பற்றி சொல்ல கேட்டும் அறிந்திருந்தேன். தனக்கு எதிரான கொள்கையுடைய அரசியல் பிரமுகர் வீட்டை தேடிகொண்டிருந்த ஒருவரை சிரமம் பார்க்காது அவர் வண்டியில் அப்பிரமுகர் வீட்டிற்கே கொண்டு வந்து விட்ட சம்பவத்தை அப்பிரமுகரே பெருமையுடன் சொல்ல கேட்டிருக்கிறேன். அப்பொழுதிலிருந்து சுபவீ என் ஆதர்சம். சுபவீ அமெரிக்கா வருகிறார் என்று கேள்விப்பட்டு பாஸ்டனில் இருந்து ப்ளோரிடா மாகாணத்திற்கு 2190 கிலோமீட்டர் தனியாக ஒரு பகல் ஒரு இரவு வண்டி ஒட்டி சென்றேன். அவ்வளவு பிடிக்கும். பெரும்பாலும் பேராசிரியர்கள் என்ற பொறுப்பு மிகுந்த சமூகம் மாணவர்களிடமும்இளைஞர்களிடமும் அந்நியப்பட்டு நின்று கொண்டிருந்த காலகட்டத்தில்சுபவீயின் எழுத்துகளை படித்து தமிழர் அரசியலையும்தமிழ்தேசிய அரசியலின் அவசியத்தையும் அறிந்துகொண்ட எனக்கு அவரது மீசையும்உரத்த குரலில் நேர்த்தியான தமிழ்மொழியும்ஒரு பேராசிரியர் என்ற பிம்பத்தை உடைத்து ஒரு போராளி என்று அடையாளம் காட்டியது. தமிழகத்தில் ராஜீவ் மரணத்திற்குபின் தமிழ் ஈழ விடுதலையை ஆதரித்துபுலிகளின் சமரசமற்ற அரசியலை அயராது பரப்புரை செய்த வெகு சிலரில் சுபவீயின் பங்கு அலாதியானது என்பதை மறுப்பதிற்கில்லை. அதுபோலஅந்த காலகட்டத்தில்இந்திய அரசின் தமிழர் விரோத துரோக முகத்தைஇளைய மாணவ சமூகத்திடம் கொண்டு சேர்த்த பெரும்பணி அவருடையது. அன்று வீரம்செறிந்த தமிழ்தேசிய இன விடுதலை உணர்வைஎன் போன்ற தமிழ்ப் பிள்ளைகளுக்கு ஊட்டிய போராளி சுபவீயும்அவரது உரைவீச்சின் கூர் ஏறி போராயுதமான மீசையும்இன்று புலிக்கேசியின் மீசையையும்வைகைப்புயல் வடிவேலுவையும் நியாபகப்படுத்துவது வேதனையளிக்கிறது. 
ஒன்றும் தெரியாதவரை ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் எல்லாம் தெரிந்துகொண்டு எல்லாம் அறிந்துகொண்டு சுயலாபத்திற்காக சுயமரியாதை இழந்து ஒரு தவறான நபரை தாங்கிப்பிடிக்கும் மனிதர்களை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை'. அப்படி ஏற்றுக்கொள்ளவே முடியாத நபராக என்னுள் மாறியிருக்கிறார் சுபவீ. "பேருருவம் கொள்ளும் தமிழ்த்தேசியம்" என்ற தலைப்புகளில் 2002யில் கூட்டங்கள் பேசி பரப்புரை செய்துவந்த சுபவீயை பொடாவிற்கும் பொடாவிற்கு பின் என்று இரண்டாக பிரிக்கலாம். பொடாவிற்கு முன் தமிழர் மனங்களில் பேருருவமாய் இருந்த சுபவீபொடாவிற்கு பின் கருணாவின் மறுவுருவமாய் மாறிதமிழர் அரசியலுக்கும் தமிழ் தேசிய முன்னெடுப்புகளுக்கும் முட்டுக்கட்டை போட்டுதான் போகுமிடமெல்லாம் திமுக தலைமைக்கு முட்டுக்கொடுத்து பிழைப்பு நடத்துவது வருத்தமளிக்கிறது. முன்னர் மேடையில் அவரின் உடல் மொழி மற்றும் கருத்துருவாக்க சொல்லாடல்கள் அவரை தேர்ந்த அறிவியலாளராய் என்போன்ற தமிழ் பிள்ளைகளுக்கு அடையாளம் காட்டியது. திமுக பாரதியஜனதாவோடு கூட்டணி வைத்த பொழுது அண்ணன் அறிவுமதி அவர்களின் கவிதை வரியான ‘சூரியனே உனக்கு சூடு இல்லையா’ என்பதை சுட்டிக்காட்டி மேடையில் கிழி கிழி என்று  கிழிப்பார் ஆனால் இப்பொழுது கருணாநிதியையும் ஸ்டாலினையும் புகழ்ந்து தலைவர், தலைவர் அவர் என்று துதிபாடுவதென்பது, "அம்மையார் ஜெயலலிதாவை அதிமுகவில் இருக்கும் பொழுது அம்மா, புரட்சித்தலைவி, இதய தெய்வம் இன்று கூறிவிட்டு இன்று கருணாநிதியை முத்தமிழ் அறிஞர் தமிழ் இன தலைவர்" என்று புகழ் பாடும் கடா மீசை செல்வகணபதியை தான் நியாபகப்படுத்துகிறது.


போர் நடைபெற்ற பொழுது முதல்வராக இருந்த கருணாநிதி தன்னால் இயன்றதை செய்தார் இயன்றதை செய்தார் என்று கீறல் விழுந்த ரெகார்ட் போல எல்லா இடத்திலும் மறக்காமல் சொல்கிறார். அவர் சொல்கிறபடியே கருணாநிதியால் இயன்றதை செய்தும் பல்லாயிரம் தமிழ் மக்கள் இறந்துவிட்டனர். முதல்வராக இருக்கும் பொழுதே அவ்வளவு தான் செய்ய முடியும் என்றால் எதிர்கட்சி அந்தஸ்து கூட இல்லாமல் இருக்கும் இப்பொழுது டெசோ என்று ஆரம்பித்து கருணாநிதியால் தான் ஈழம் அடைய முடியும் என்கிறார். தனி ஈழமே தீர்வு என்று சொல்லாத டெசோவினால் ஈழம் அடையலாம் என்று சுபவீ சொல்வதற்கு பின்னால் தனது அன்றாட பிழைப்புவாததிற்காய் கருணாநிதியின் அரசியலை நியாயப்படுத்தும் கீழான எண்ணத்தை தவிர வேறென்ன இருக்க முடியும்வல்லாதிக்கங்கள் சேர்ந்து நடத்திய போரை ஒரு மாநில முதல்வரால் எப்படி தடுத்திருக்க முடியும் என்று சப்பைக்கட்டு கட்டும் சுபவீஅந்த வல்லாதிக்கத்தில் இந்திய அரசும் அடங்கும் என்று சொல்லாமல் மறைப்பதற்கு காரணம் இந்திய அரசு என்று சொன்னால் அது காங்கிரஸ் திமுக கூட்டணி அரசு தான் என்ற குட்டு வெளிப்பட்டு, இறுதி போரில் தமிழருக்கு எதிரான இனப்படுகொலையில் தான் தூக்கி சுமக்கும் திமுகவும் அதன் தலீவரும் பங்குதாரர்கள் என்று அம்பலபட்டுவிடும் என்பதால் தான். இப்படி எப்பாடுபட்டாவது திமுகவை காப்பாற்றவேண்டும் என்று எண்ணி மட்டும் உண்மையை மறைக்கும் சுபவீஇதனூடாக திமுகவை மட்டுமன்றி இன எதிரி காங்கிரசையும் காப்பாற்ற துணைபோவது காலத்தின் கொடுமை.
ஈழ பிரச்சனையை விட கருணாநிதியை வீழ்த்துவது தான் உங்கள் குறிக்கோள் என்று மற்றவர்களை சொல்லிக்கொண்டே ஈழ விடியலை விட திமுக ஆட்சிக்கு வருவதை குறிக்கோளாக கொண்டு கேவலமாக செயல்படுவது வருத்தமளிக்கிறது. திமுக செயற்குழுவில் பங்கேற்று திராவிட அரசியல் பாடம் எடுப்பது அதற்கு உதாரணம். அடுத்தவர்களை கருணாநிதி எதிர்ப்பாளர் என்று உருவகப்படுத்த ஜெயலலிதா அதரவு முத்திரை குத்த கருணாநிதி அடிமையான சுபவீக்கு அருகதை உள்ளதா என்பதை யோசித்து பார்க்க வேண்டும். 1990யில் சென்னையில் தமிழர் தன்னுரிமை மாநாட்டில் கலந்துகொண்டதற்காக அவரை கைது செய்த கருணாநிதியை அவர் மறக்கலாம் ஆனால் ஈழ பிரச்சனையை மக்களிடம் கொண்டு செல்லவேண்டும் என்ற முனைப்போடு அங்கு நடக்கும் அவலங்களை குறுவெட்டாக மாற்றி வீடு வீடுக்கு கொண்டு சென்ற தமிழ்ப்பிள்ளைகளை தேடி தேடி கருணாநிதி அரசு கைது செய்ததை எப்படி மறக்க முடியும்?.. பார்வதி அம்மையாரை திருப்பி அனுப்பியது தனக்கு தெரியாது என்று கருணாநிதி சொன்னதை நம்புபவன் ஒன்று மனநிலை சரி இல்லாதவனாக இருக்கவேண்டும் இல்லை கருணாநிதியிடம் வாங்கி தின்னும் உலகமகா திருடனாக இருக்கவேண்டும். இன்றளவும் கருணாநிதிக்கு தெரியாமல் தான் பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பினார்கள் என்று சொல்லும் சுபவீ யார் என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். 

கடைசி நேரத்தில் சமரசதிட்டம் தயாரானது அதை ஜகத்கஸ்பர் என்னிடம் கூறினார்நான் நடேசனிடம் கூறினேன். அவர் மீண்டும் தொடர்பு கொள்வதாக கூறினார் ஆனால் தொடர்புகொள்ளவில்லை காரணம் வைகோவும் நெடுமாறனும் அதை நம்பவேண்டாம் என்று சொல்லி கெடுத்துவிட்டனர் என்று சொல்லும் சுபவீ ஜகத்கஸ்பரிடம் யார் அந்த சமரசதிட்டதை சொன்னதுஅவருக்கு பின்னால் யார் இருந்தது என்று சொல்ல தைரியம் உள்ளவராசரி நடேசன் மீண்டும் தொடர்பு கொள்ளாத பொழுது எப்படி அண்ணன் வைகோவும் அய்யா நெடுமாறனும் அதை தடுத்தார்கள் என்று இவருக்கு தெரிந்ததுஅண்ணன் வைகோஅய்யா நெடுமாறன் பேச்சை எல்லாம் கேட்டு அரசியல் செய்தவர்களா புலிகள்இதை விட அவர்களை சிறுமைபடுத்த முடியுமாசரி அவர் சொல்கிறபடியே இந்தியாவில் இருக்கும் ஒரு பாதிரி ஜகத்கஸ்பரே சமரசம் செய்து போரை நிறுத்தும் வேலை செய்ய முடியும் என்றால் முதல்வராய் இருந்த கருணாநிதியால் செய்திருக்க முடியாதாகருணாநிதிக்கு இந்த சமரச திட்டம் தெரியாதாஅவரே வெளிப்படையாக சமாதானத்திற்கு இறங்கி இருக்கலாமேஏன் கருணாநிதி அமைதி காத்தார் என்று சுபவீ சொல்ல துணிவிருக்கிறதா? 

உலகை சுரண்டி கொழுக்கும் எல்லா கார்பரேட் நிறுவனங்களும் தங்கள் கோர முகத்தை மறைக்க ஒரு துணை அமைப்பு NGO போல் வைத்துக்கொள்வார்கள். தங்கள் நிறுவனம் சார்பாக முன்னெடுக்கும் நற்செயல்களை விளம்பரப்படுத்தி தங்கள் நிறுவனத்தின் மேல் நன்மதிப்பை பெருக்க முயல்வார்கள். பல சமூக பணியார்களை அதில் ஊதியத்துடன் நியமித்து தங்கள் நிறுவனதிற்கான சேத கட்டுப்பாட்டு அமைப்பாக அதை கட்டமைதிருப்பார்கள். பில்கேட்ஸ் தொடங்கி ரிலையன்ஸ் வரை தாங்கள் கறைபடியாதவர்கள் என காட்ட இதை பின்பற்றுகிறார்கள் அந்த வரிசையில் சில காலத்திற்கு முன் கார்பரேட் நிறுவனமாக மாறிப்போன திமுக ஈழ பிரச்சனையில் தங்கள் கட்சிக்கு வந்த சேதத்தை கட்டுப்படுத்த சுபவீஎன்பவரை நியமித்திருக்கிறது என்றே நாம் எண்ண வேண்டியிருக்கிறது. அழகரி கூட புறக்கணிக்கும் அக்கட்சியின்  செயற்குழுவில் பங்கேற்கிறார்கட்சியின் அறிக்கையில் பட்டியலிடும் பேச்சாளர்களுள் அவர் பெயரும் வருகிறது ஆனால் திமுக வேறு தான் வேறு என்றும் வெளியே சொல்லிக் கொள்கிறார் ஆக சுபவீயும் அவர் அமைப்பான திராவிட இயக்கத் தமிழர் பேரவையும் கார்பரேட் திமுகவிற்கு ஒருவகையான ஊதியதுடனான நியமனமும் துணை அமைப்புமாகும்.


ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் மாணவர்களின் கோரிக்கை நடைமுறைக்கு சாத்தியமற்றது நமக்கு இருப்பது அமெரிக்கா தீர்மானம் மட்டும் தான் அதை எதிர்ப்பதா?  டெசோ அமெரிக்கா தீர்மானத்தை ஆதரிக்கும். முதலில் போய் இணையத்தில் தீர்மானத்தை படியுங்கள் என்றார் எகத்தாளமாக. ஒரு நேர்க்காணலில் டெல்லியில் நடக்கும் டெசோ கருத்தரங்கத்திற்கு கல்லம் மாக்ரே கலந்துகொள்கிறார் அது பொறுக்காமல் இவர்கள் எல்லாம் எதிர்க்கிறார்கள் என்றார் ஆனால் அந்த கருத்தரங்கில் காங்கிரசை தவிர வெளியில் இருந்து யாரும் கலந்துகொள்ளவில்லை அதே போல் கருணாநிதி நாங்கள் அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்கபோகிறோம் என்று சொல்லவில்லை என்றும் பல்டி அடித்துவிட்டார். அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்கவில்லை என்ற நிலைப்பாடு மகிழ்ச்சி தான் ஆனால் திமுகவை காப்பாற்ற எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்று இறங்கி இருக்கும் சுபவீயை நினைத்தால் தான் என் போன்ற அவரை நேசித்த தமிழ்ப்பிள்ளைகளுக்கு வேதனையும் வருத்தமும். லயோலா கல்லூரி மாணவர் போராட்டத்திற்கு அவர் வந்த பொழுது எழுந்த எதிர்ப்பு அவர் நினைப்பது படி மாற்று கட்சியினரின் தூண்டுததில் இல்லை முப்பது வருடமாக பல சிறை சென்று போராடி கடைசியில் கருணாநிதியிடம் சரணடைந்த முன்னாள் உணர்வாளரின் துரோகத்திற்கு எதிரான தன்னெழுச்சியான எதிர்ப்பு என்பதை சுபவீ புரிந்துகொள்ள வேண்டும்.    

கடைசியாக...2009க்கு முன்னர் எங்கே இருந்தீர்கள் என்று எங்களை நோக்கி கேள்வி கேட்கும் பேராசிரியரே, 2009க்கு முன் உங்கள் பின்னால் இருந்தோம் அதனால் உங்களுக்கு தெரியவில்லை இப்பொழுது எதிர்த்து நிற்பதால் உங்கள் கண்களுக்கு தெரிகிறோம். டெசோ கூட்டம்ஸ்டாலினோடு ஊர் ஊருக்கு செயற்குழு கூட்டம்ஏதேனும் ஒரு ஊரில் மொழிப்போர் நாள் கூட்டம் என்று வரும்படியோடு கூட்டங்களுக்கு செல்லும் பிழைப்பு எங்களால் தான் வந்திருக்கிறது என்ற நன்றி உங்கள் மனதில் ஓரத்தில் இருந்தால் இனி எங்கே இருந்தீர்கள் என்று கேட்காதீர்கள்.

குலத்துக்கு ஈனம் கோடாலிக்காம்பு என்பார்கள் கருணாநிதி என்னும் தமிழ்குலம் அறுத்த கோடாலிக்கு காம்பு சுபவீ..

3 comments:

ஆயிரத்தில் ஒருவன் said...

\\ திமுக ஈழ பிரச்சனையில் தங்கள் கட்சிக்கு வந்த சேதத்தை கட்டுப்படுத்த சுபவீஎன்பவரை நியமித்திருக்கிறது என்றே நாம் எண்ண வேண்டியிருக்கிறது// அது என்ன ...? நினைக்க வேண்டியிருக்கு அதான் உண்மை. ஊதியம் வாங்கி கொண்டு திராவகம் என்னும் திராவிட ஊது குழல் ஊதும் உண்மை ஊழியன் சுப வீ

தமிழன் said...

கடைசியாக...2009க்கு முன்னர் எங்கே இருந்தீர்கள் என்று எங்களை நோக்கி கேள்வி கேட்கும் பேராசிரியரே, 2009க்கு முன் உங்கள் பின்னால் இருந்தோம் அதனால் உங்களுக்கு தெரியவில்லை இப்பொழுது எதிர்த்து நிற்பதால் உங்கள் கண்களுக்கு தெரிகிறோம்.//

அற்புதம் (Y)

Unknown said...

சிறப்பான பதிவு இளையவரே..கருஞ்சட்டை இப்போது வெறுஞ்சட்டை ஆனது.ஸ்டாலினின் தேநீர் கறையை கழுவிவிட வைகோ முந்திக்கொண்டதால், இவர் கழுவிவிட இடம்தேடிக்கொண்டிருக்கிறார்.துரோகத்தின் ஆணிவேர்கள் தொடர்ந்து துளிர்விட்டுக்கொண்டுதான் இருக்கும். காத்திருந்து பகைமுடிப்போம்.