Tuesday, March 26, 2013

விளையாட்டும்... அரசியலும்...


"தைவானை ஒலிம்பிக்கில் ஒரு நாடாக அங்கீகரித்ததற்கு எதிராக மாவோ 1956யில் ஒலிம்பிக் வெறும் விளையாட்டு என்று விட்டுவிடாமல் சீனா புறக்கணிப்பதாக அறிவித்தார். அடுத்த 25 வருடம் அதே காரணத்திற்க்காக சீனா ஒலிம்பிக்கை புறக்கணித்தது.

அதே 1956ஆம் ஆண்டில் சோவியத் யூனியனின் ஹங்கேரி படையெடுப்பை கண்டித்து நெதர்லாந்து, ஸ்பெயின், ஸ்வீடன் போன்ற நாடுகள் புறக்கணித்தது.

1964 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடந்த ஒலிம்ப்பிக்கில் நிறவெறிக்காக தென்னாப்பிரிக்கா ஒலிப்பிக்கில் இருந்து தடைசெய்யப்பட்டது. அதன் பின்னர் 1992 ஆம் ஆண்டு தான் அனுமதிக்கப்பட்டது.

1976 ஆம் ஆண்டு மொண்ட்ரியலில் நடந்த ஒலிம்பிக்கில் இனவெறி கொண்ட தென்னாப்ரிக்காவோடு ரக்பி விளையாடிய நீயுசிலாந்து பங்கேற்றதற்காக 26 ஆப்பரிக்க நாடுகள் புறக்கணித்தது.

1980 ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக்கை ஆப்கானிஸ்தானை சோவியத் யூனியன் ஆக்கிரமித்ததை கண்டித்து அமெரிக்கா உள்ளிட்ட 62 நாடுகள் புறக்கணித்தது.

அதற்கு பழிக்கு பழியாக 1984 ஆம் ஆண்டு அமெரிக்கா நடத்திய ஒலிம்பிக்கை சோவியத் யூனியன் உள்ளிட்ட 16 நாடுகள் புறக்கணித்தது.

1988 ஆம் சியோலில் நடந்த ஒலிம்பிக்கை தென்கொரியாவோடு சேர்ந்து நடத்த அனுமதிக்காததை கண்டித்து வடகொரியா புறக்கணித்தது. அத்தோடு சேர்ந்து கியூபாவும் எதியோபியாவும் புறக்கணித்தது. 

உலக நாடுகளே இப்படி முடிவெடுக்கும் பொழுது ஆசிய தடகள போட்டியில் இலங்கை பங்கேற்ப்பதற்காக நிறுத்திய பொழுது விளையாட்டை விளையாட்டாக பாருங்கள் என்று சொல்பவர்களையும், கிரிக்கெட்டில் இலங்கையையும் அதன் வீரர்களையும் புறக்கணிக்ககோரும் பொழுது அரசியல் வேறு விளையாட்டு வேறு என்று வியாக்கியானம் பேசுபவர்களையும் என்ன செய்யலாம்..????

#வேறென்ன வெளு வெளுனு வெளுக்கணும்...

0 comments: