Tuesday, October 21, 2008

புரட்சி என்றும் வெல்லும் அதை நாளை தமிழீழம் சொல்லும்...

தமிழின உணர்வாளர் குழு சார்பாக திரையுலகத்தினர் ராமேஸ்வரத்தில் நடத்திய பொதுக்கூட்டத்தில் தமிழின போராளி அண்ணன் சீமான் ஆற்றிய உரை... தமிழன் ஒவ்வொருவரும் கேட்கவேண்டிய பேச்சு..

Monday, October 06, 2008

தமிழ் ராப் - ஒரு புதிய பாதை..

இசை ஒரு அடையாளத்தின் குறியிடு...அவை சந்தோஷ சிரிப்பாகவும், வேதனையின் வெளிப்பாடகவும் , கோபத்தின் கொக்கரிப்பாகவும் இருக்கலாம்.. சாக்ரடிஸ் சொன்னது போல் இசையின் மிக சிறந்த உன்னத வடிவம் தத்துவமாக கூட இருக்கலாம்... இசையின் வலிமை அளவிடமுடியாதது, சொன்னால் நம்ப கடினமாக இருக்கும் ஒரு நாட்டின் விடுதலையை கூட வாங்கி கொடுக்கும் வலிமை கொண்டது இசை...

ரஷ்யாவின் எல்லையில் இருக்கும் ஒரு சிறிய நாடு 'எஸ்டோனியா'. பல காலம் ஸ்வீடன் நாட்டலும், பின்பு ரஷ்யாவாலும் ஆக்கிரமிக்கப்பட்ட பாவப்பட்ட நாடு... 194௦ களில் இருந்து ரஷ்யாவின் கட்டுப்பாடில் இருந்துவந்தது.. ஆனால் மக்களின் ஆழ்மனதில் விடுதலை வேட்கை கனன்றுகொண்டேதான் இருந்தது... அவ்வேட்கை ஒரு பாடல் மூலமாக பரவி அந்த நாட்டின் விடுதலை வாங்கிகொடுத்து என்பது வரலாறு... வரலாறை அறிய கீழயே சொடுக்கவும்...

http://www.freemuse.org/sw22342.asp

உலக வரலாற்றில் பல புரட்சிகள் வலுவிழக்காமல் நீடித்ததற்கு காரணமும் இசைதான்...

அப்படி பட்ட வகையை சார்ந்த இசைதான் ராப் இசை. தான் நினைத்ததை தனக்கு தோன்றியபடி வெளிப்படுத்துவதே ராப் இசை. அமெரிக்காவில் இருந்த நிற வேறுபாட்டை எதிர்த்து வந்த பாமரனின் இசை... 


அந்த இசையின் மூலம் தமிழ் பற்று பாடல்களையும் விடுதலை வேட்கைகுரிய பாடல்களையும் நமக்கு அளித்துள்ளார் சுஜீத் என்ற ஈழத்தமிழ் இளைஞர்......

மிகவும் ரசிக்கத்தக்க, கேட்டவுடன் உணர்வுகளை தூண்டும் விதமாக உள்ளது பாடல்கள்... முக்கியமாக தமிழனிடம் இல்லாத இன பற்றும், மொழிபற்றும் கொண்டு பாடல் இசைதுள்ளார்.. மிக மிக பாராட்டப்பட வேண்டிய முயற்சி..


இசையை ஆன்மீகத்தொடும், பொழுதுபொக்கொடும் முடிச்சுபோட்டு பாமரனிடத்தில் இருந்து வெகு தூரம் கடத்தி சென்றுவிட்ட தமிழ்நாட்டில் இப்பாடல்கள் ஒலிக்கவேண்டும்...


Thamilar Kudi - SujeethG


"தமிழை மறுத்து மறைத்து வாழும் வாழ்வில் பயனே இல்லை - உன்
சொந்த இனத்தை மறைக்கப்போனா மனுசன் நீயும் இல்லை
கண்டதுக்கும் வளைஞ்சு கொடுக்க தமிழன் தண்ணி இல்லை - என்றும்
குப்பை வாழ்க்கை வாழ நீயும் சேத்துப் பண்ணி இல்லை
செந்தமிழா எழுந்து வா செந்தமிழைக் காக்க வா
தமிழர் குடி மறவரடி மறவர் குடி தமிழரடி"