மறுபடியும் தன் உண்மை முகத்தை கட்டிவிட்டார் திருவாளர் நடிகன் ரஜினி... அதில் ஆச்சிரியம் ஒன்றும் இல்லை..
"நக்கி பொழைக்கிற நாய்க்கு செகென்ன சிவலிங்கம் என்ன?.."
அன்று உண்ணாவிரதத்தில் தமிழன் சத்தியராஜ் முன் பேசி தன்னை தாறுமாறாக கிழித்து ஏற்படுத்திய நிர்பந்தத்தின் காரணமாக ஏதோ உளறிவிட்டு, கர்நாடகதுக்குள்ளே போனால் உதைப்பானே என்று பயந்து எப்போது மன்னிப்பு கேட்டு மண்டி இடலாம் என காத்திருந்தவர்க்கு கிடைத்த சாக்கு 'குசேலன்'. கேட்டுவிட்டார்... அதை விடுத்து அந்தபடத்தின் வியாபர லாபத்திற்காக, தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக மன்னிப்பு கேட்டார் என செய்தி வெளியாவதை பார்த்தால் சிரிப்பு தான் வருது...
ரஜினி நடிச்ச சிவாஜி உலகம் பூராம் பிச்சுகிட்டு ஓடுது, இங்கிலாந்துல முதல் பத்து எடத்துல இருக்கு, அமெரிக்காவில் ஆங்கிலபடத்துக்கு மேல வசூல் ஆகுது,(மொழியே இல்லாத தென் ஆப்பிரிக்க காட்டுக்குள்ள ௧00 நாள் ஓடுது), தமிழனுக்கு இதனால ரெம்ப பெருமைன்னு பல ஊடகம் கொஞ்ச நாளைக்கு படம் ஒட்டியதே... அப்புறம் எதுக்கு திருவாளர் ரஜினி இந்தியாவில் இருக்க ஒரு மாநிலத்திடம் (மாநிலத்தில் இருக்கும் கன்னட வெறியர்களிடம்) மன்னிப்புகேட்டு படம் ஒட்டி தயாரிப்பாளரை காப்பாத்தனும்னு நினைக்கிறார்.. உலகம் பூராம் வராத வசூலா கர்நாடகத்தில் இருந்து வந்து விட போகிறது.. ஆக அவர் மன்னிப்பு கேட்டது தயாரிப்பாளரை காப்பாத்தும்(?) பணத்திற்காகவோ, படம் ஓட்டுவதற்காகவோ மட்டும் அல்ல...
இனி நான் அப்படி பேசமாட்டேன் என்று குழந்தைகள் கதறுவதுபோல் கதறி இருக்கிறார் அவரை பொய் அவர் மன்னிப்பு கேட்கவில்லை வருத்தம் தான் தெரிவித்திருக்கிறார் என்கிறார்கள் சில மேதாவிகள். இவர்களை என்ன சொல்வது???????
"நான் பாடம் கற்றுக்கொண்டுவிட்டேன்" என வேறு சொல்லி இருக்கிறார். கர்நாடககாரர்களிடம் என்ன பாடம் கற்று கொண்டார் என்று கடவுளேக்கே வெளிச்சம்... ஆனால் தமிழனை அடித்து ஒடுக்கும் கன்னடனிடம் மன்னிப்பு கேட்டு ஒட்டுமொத்த தமிழினத்தையும் அவமானபடுதிவிட்டார் என்பது திண்ணம்...
தமிழன் ஏமாளி, மானம்கேட்டவன் என நன்றாக தெரிந்ததால் தான் தைரியமாக செய்திருக்கிறார்...
நாம் அவ்வாறு இல்லை... நமக்கும் தமிழ் இன உணர்வு இருக்கிறது, மானம் என்று ஒன்று இருக்கிறது.... சுயமரியாதை என்று ஒன்று இருக்கிறது.. உப்பு போட்டு தான் சாப்பிடுகிறோம் என்பதை நிரூபிக்கும் விதமாக திருவாளர் நடிகன் ரஜினி நடித்த படத்தை புறக்கணிப்போம்.
தமிழனுக்கும், தமிழச்சிக்கும் பிறந்த யாவரேனும் அந்த படத்தை போய் பார்த்தால் அவர்களின் பிறப்பை சந்தேகபடுவதை தவிர வேறு வழி இல்லை.....
Saturday, August 02, 2008
குசேலனை புறக்கணிப்போம்...
Subscribe to:
Posts (Atom)