Tuesday, November 14, 2006

தண்ணீர் நான்..

தண்ணீர் நான் எனக்கு வடிவம் இல்லை..
நீ எதில் எந்தினாலும் உனகெற்ற வடிவமாய் நான்..
வெகு சீக்கிரமாய் கலப்பேன் உன்னோடு..
உன் தாகம் தீர்ப்பேன் என் கடைசி துளி வரை..
என்னை பருகுவதும் உமிழ்வதும் உன் விருப்பம்..
விருப்பமில்லாவிடில் முகம் ஆவது கழுவு..
உன் முகம் தொட்ட மகிழ்ச்சியில் மறித்துபோகிறேன்..

Friday, November 10, 2006

நான் எனப்படுவது..???





பல நேரங்களில் யோசித்தாதுண்டு..
நான் எனப்படுவது.. என் பெயரா?.. என் உடம்ப ?.. என் ஆத்மாவா?.. பாக்கியராஜன் என்ற என் பெயர் தான் நானா?.. ஆம் எனில் ஊமைகளின் ஊரில் நான் யார்?..
உடம்பு தான் நானா?...ஆம் எனில் மண்ணோடு மண்ணாய் போவேனா?.. வடிவமே இல்லாத ஆத்மா தான் நானா?.. ஆம் எனில், ஆத்மாவை எப்ப்டி கண்டறிவது?..