Saturday, September 27, 2008

இட ஒதிக்கீடு... ஒரு விவாதம்...

இன்றைய பல இளைஞர்கள் மத்தியில் இட ஒதிக்கீடி பற்றிய மிக தவறான எண்ணம் மேலோங்கி இருக்கிறது... இட ஒதிக்கீடால் தான் அவர்கள் படித்திருந்தாலும் திட்டமிட்டு மேல்சாதியினரால் பரப்பப்படும் வஞ்சக வார்த்தைகளால் இட ஒதிக்கீட்டை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்கிறார்கள்...

அதை பற்றி எனக்கும் என் நண்பனுக்கும் மின்னஞ்சலில் நடந்த விவாதமே இது...

----------------------------------------------------------------------

அன்பு நண்பன் சூரிக்கு,

நீ தவறென்று கூறவில்லை நண்பா... உன் கருத்தாக்கம் தான் தவறென்று எதிர்த்தேன்... உன்னை பற்றி அறியாதவன் இல்லை நான்... ஆதரிக்க வேண்டிய நீயே மறுபரிசீலனைக்கு ஆட்படுத்துகிறேயே என்ற ஆற்றாமையில் தான் கடுமையாக பதில் தொடுத்தேன். கடுஞ்ச்சொற்க்கள் கூறி விவாதத்தை திசை திருப்புவதோ உனக்கு பாடம் கற்பிப்பதோ என் நோக்கமல்ல... இருப்பினும் நண்பன் மனம் நோகும்படி பதில் இருந்தமைக்கு மன்னித்தருள்க...

மீண்டும் ஒருமுறை உனக்கு நியாபக படுத்துகிறேன் நண்பா... சமூக நீதி என்பது பொருளாதார முன்னேற்றம் அல்ல.. பல நூறு ஆண்டுகளாக உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டு அடிமையாகவே வாழ்த்த கூட்டத்தை முன்னேற்றி தமக்கான உரிமைகள் என்ன என்று அறியவைத்து, அதை பெற வழிவகுக்கவும் செய்வது தான் சமூக நீதி தத்துவம்...இடஒதுக்கீடு என்பது, வேலை வாய்ப்புகளில் மட்டும் இடம் கோருகின்ற கோரிக்கை மட்டும் அல்ல . கல்வி, வேலை, அரசியல் என மூன்று தளங்களிலும், அனைத்துச் சாதியினருக்கும் சம உரிமை கோருகின்ற சமூக நீதிப் போராட்டத்தின் தொடக்கமே அது...

இந்தியாவின் முன்னாள் தலைமை அமைச்சர் வி.பி.சிங் கூறியதைப்போல, ''இட ஒதுக்கீடு என்பது, அதிகாரக் கட்டமைப்பில், சமூகத்திலும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட அனைத்துச் சாதியினருக்கும் பங்கு அளிப்பதுதான்.'' (It is a question of power sharing and not jobs alone)

முதன் முதலில் இட ஒதீகிட்டை கொண்டுவந்த பெருமை தமிழ் நாட்டிற்க்கு தான் உண்டு..

1920ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்ற நீதிக்கட்சி, 17.12.1920இல், சென்னை மாகாண அமைச்சரவையை அமைத்தது. பதவியேற்றவுடனேயே, அரசு வேலை வாய்ப்புகளில் அனைத்து மதத்தினர், சாதியினருக்கம் இடஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது. 1921ஆம் ஆண்டு வெளியான அந்த ஆணைப்படி, பின்வருமாறு அரசு வேலைகளில் இடங்கள் ஒதுக்கப்பட்டன.

1. பார்ப்பனர் அல்லாத இந்துக்கள் 44%
2. பார்ப்பனர்கள் 16%
3. முசுலீம்கள் 16%
4. ஆங்கிலோ இந்தியர் மற்றும் கிறித்துவர்கள் 16%
5. தாழ்த்தப்பட்டோர் 8%
____
100
____

அன்றில் இருந்து இன்று வரை மேல்சாதி மக்களிடம் இருந்து இதற்க்கு எதர்ப்பு வந்த வண்ணம் உள்ளது... 2006 ஆம் ஆண்டு வெளிவந்துள்ள, ''Falling over Backwards'' என்னும் தன் நூலில், முன்னாள் அமைச்சர் அருண்சௌரி, இட ஒதுக்கீடுடுக் கொள்கையை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். இடஒதுக்கீட்டின் பேரில், இந்துக்களிடம் பிரிவினை எண்ணத்தை வெள்ளையர்கள் திட்டமிட்டு உருவாக்கினர் என்றும், 'பிரித்தாளும் சூழ்ச்சியே இடஒதுக்கீடு' என்றும் கோபக் கணைகளை அவர் வீசுகின்றார், அருண்சௌரி ஒரு குறியீடு மட்டுமே. உயர்சாதியினர் என்று தம்மைக் கருதிக் கொண்டிருக்கும் அனைவரின் எண்ணமும் அதுதான்.

என் கேள்வி இது தான், கோயில்களில் அர்ச்சகர்களாக இருப்பவர்கள் இன்று வரை ஒரே சாதியினர்தானே.. . அதேபோல, பிணம் எரிப்பவர்களும், செருப்புத் தைப்பவர்களும், சாக்கடை சுத்தம் செய்பவர்களும் ஒரே ஒரு குறிப்பிட்ட சாதியினர்தானே... தொழிலையும், சாதியயையும் முடிச்சு போட்டு பிரிவினையை கொண்டுவந்தது யார்?...இவற்றை வெள்ளையர்களா உருவாக்கினார்கள் ???

ரிக் வேதத்தின் 10ஆவது அத்தியாயமான 'புருஷசூக்தம்' என்னும் இயலில்தான், பிரம்மத்தின் தலையிலிருந்து தோன்றியவர்கள் பிராம்மணர்கள் என்றும், தோளில் பிறந்தவர்கள் சத்திரியர்கள் என்றும், இடையில் தோன்றியவர்கள் வைசியர்கள் என்றும், பாதத்தில் பிறந்தவர்கள் சூத்திரர்கள் என்றும் கூறப்பட்டது... இதை உருவாகியவர்கள் யார் என்பதை உங்களுக்கு சொல்ல தேவை இல்லை...

இப்படி திட்டமிட்டு அடிமை அடிமையாகவே இருக்க வழி செய்தனர் என்றால் மிகை இல்லை.. இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பும் அறிவிக்கப்படாத வர்ணாசிரம ஆட்சி தான் நடந்து வந்தது, இந்தியாவில் மேல்சாதியினரின் ஆதிகார ஆளுமைக்கு ஒரு சிறிய எடுத்துகாட்டு...(ஆண்டு ௧௯௫௧)

இந்தியா முழுவதும் இருந்த அரசுச் செயலர், துணைச் செயலர் பதவிகள் 506. அவற்றுள் 351 பேர் பார்ப்பனர்கள். உச்ச நீதி மன்றத்தில், 16 நீதிபதிகளில் ஒன்பது பேர் பார்ப்பனர். 140 வெளிநாட்டுத் தூதுவர்களில் 68 பேர் பார்ப்பனர். இந்தியாவின் மொத்தம் 3500 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் 2376 பேர் பார்ப்பனர். ஆளுநர்களாக இருந்த 27 பேரில் 13 பேர் பார்ப்பனர்.

இப்படி 'உயர் சாதியினர்' எனப்படுவோரிடம் மட்டுமே தேங்கிக் கிடக்கும் அதிகாரங்களை, அனைத்துச் சாதியினருக்கும் பகிர்ந்தளிக்கும் ஜனநாயகப் பாத்திரத்தைத்தான் இடஒதுக்கீடு செய்கிறது. ஏற்றத்தாழ்வே, ஒரு சமூகத்தின் அடிப்படை வடிவமாக இருக்குமெனில், அதனை உடைத்தெறியும் ஜனநாயகச் சமத்துவக் கடமையை தான் இடஒதுக்கீட்டுக் செய்கிறது.

இந்த இட ஒதிகீட்டால் பாதிக்கப்பட்ட பல தலைமுறையாக படித்த குடும்பத்தில் இருந்து வந்த சிலரை பற்றி நீ பேசுகிறாய்.. இன்னும் பயனடைய போகும் விவசாய, கூலி, மீனவ மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் இருந்து முதல் தலைமுறையாக படிக்க வரும் லட்சக்கானக்கானவர்களை பற்றி நான் பேசுகிறேன்...

சரி உன் கதைக்கே வருகிறேன், அந்த கதை தமிழ்நாட்டில் நடப்பதாய் வைத்து கொள்வோம். தண்ணீரில் மூழ்க போவோரில் 46.14% பிற்படுத்தபட்ட மக்கள் இருக்கிறார்கள், 20.87% மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் இருக்கிறார்கள், 19% தாழ்த்தப்பட்ட மக்கள் இருகிறார்கள், 1.04% பழங்குடியினர் இருக்கிறார்கள், இதர 12.95% முற்பட்டசாதி மக்கள் இருக்கிறார்கள்.. ஆக மொத்தம் 100% (இது 2001 ஜனத்தொகை கணக்குப்படி).. அதில் நீ சொன்னபடியே பிற்படுத்தபட்டோரில் 10% நீந்த தெரியும் (ஒரு தலைமுறையாவது படித்தவர்கள்)... முற்பட்டசாதி மக்கள் அனைவருக்கும் அரைகுரையாவது நீந்த தெரியும்(பல தலைமுறையாக படித்தவர்கள்)...

இதில் 12.95% அனைத்து சாதி மக்கள் ஒருபுறமும், 87.05% மேல்சாதி மறுபுறமும் இருகிறார்கள்..
நம்மிடம் ஒரு படகு இருக்கிறது... 2 முறை போய் அவர்களை அழைத்துவரலாம்... முதல்முறை 70% மக்களை காப்பாற்றி கூட்டிவரலாம்.. இரண்டாம் முறை 30% மக்களை கைப்பற்றி கூடிவரலாம் என்ற நிலைமை.. இந்த நிலைமையில் அனைவரையும் காப்ற்றவேண்டும் என்பதே நம் கொள்கை.

முதலில் பிற்படுத்தபட்டோரில் 10% நீந்த தெரிந்தவர்களைகளையும், அரைகுறையாய் நீந்த தெரிந்த 12.95% முற்பட்ட சாதியினரையும் விட்டுவிட்டு.... மீதி 77.05% நீந்தவே தெரியாதவர்களை முதல் படகில் ஏற்றலாம்... ஆனால் படகில் 70% தான் ஏற்றமுடியும்.. சரி அப்போ காப்பாற்றபடுபவர்களில் அதிக சதவீதம் உள்ள பிற்படுத்தபட்டோர்க்ளில் 7.05% மக்களை நீந்த தெரியாவிடினும் அடுத்தமுறை வரும் பொது உயிரோடு இருந்தால் காப்பாற்றிக்கொள்ளலாம் இல்லை என்றால் சாகட்டும் என்று மீண்டும் தண்ணீரில் விட்டுவிட்டு. மற்றவர்களை ஏற்றி கொண்டு போய் கரையில் விட்டுவிடலாம்...

இரண்டாம் முறை வந்து மீதி 30% மக்களில் யார் யார் நீந்தி உயிரோடு இருகிறார்களோ அவர்களை கூடிக்கொண்டு கரையில் விட்டுவிடலாம். நீந்த தெரியாத பிற்படுத்தப்பட்ட 7.05% மக்கள் படகு திரும்பி வரும்வரை உயிரோடு இருப்பதற்கு உத்தரவாதம் இல்லை.. ஆனால் 12.95% மக்கள் உயிரோடு இருப்பதற்கு உத்தரவாதம் இருக்கிறது..

இதில் முதல் படகுதான் 69% இட ஒதிக்கீடு, இரண்டாம் படகுதான் 31% இட ஒதீக்கிடு அற்ற ஓபன் கோட்டா...

இவ்வளவு இட ஒதீக்கீடு இருந்தும் 7.05% பிற்படுத்தப்பட்ட மக்கள் பாதிக்க தான் படுகிறார்கள்..

தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கும் இட ஒதிகீட்டை கீழே பார்க்கவும்...



நிலைமை இப்படி இருக்க இந்த இட ஒதிகீட்டையும் நீ மறுபரிசீலனை செய்ய சொன்னால் உணர்ச்சிவசப்படாமல் என்ன செய்வது... உணர்ச்சிவசப்படாமல் இருந்தால் தான் அது என் பிறப்பின் பெருங்குற்றம்...



இந்த இட ஒதிக்கீடை பற்றி தமிழகத்தின் தென் மூலையில் இருந்து இட ஒதிக்கீட்டால் படித்து வந்த நானும், நீயும் அமெரிக்காவில் அமர்ந்து இணையத்தில் மின்னஞ்சல் மூலமாக விவாதிக்க காரணமாய் இருந்த தந்தை பெரியாரை நன்றியுடன் நினைத்து... என்றும் இட ஒதிக்கீடு இல்லா தோழமையுடன்,

பாக்கியராசன் சேதுராமலிங்கம்,
குலமங்கலம் கிராமம்,
மதுரை மேற்கு தாலுகா,
மதுரை மாவட்டம்.


----- Original Message ----
From: Sooria Jeyaraman
To: ellistopp@yahoogroups.com
Sent: Thursday, 25 September, 2008 5:40:44 PM
Subject: Re: [ellistopp] FW: The Ant And The Grasshopper [Old Story - New Version] Really nice one go through it

Maapla Packia .. konjam unarchivasapattutan nu ninaikiren.. ivlo sharpa personala insult pannaama irunthu irukalam, felt bad but its ok.. it’s my bad, that I took the liberty that people who know me won’t need an explanation that I’m not trying to brag or boast or trying to bring out an opinion just for the sake of opinion or trying to say I was right.. I was just trying to make an opinion and a healthy discussion on one issue among the millions of other issues, my bad about being informal too, learnt the lesson in the hard way..





Athukaaga naanga karutha sollama poga mudiyaathu, Again you are misunderstanding what I was trying to say, I don’t say what was written in that story was right or I don’t say we don’t need reservation now or I don’t say the dalits are doing great and I don’t have another ant story to shove it up ..but I do said that we should also keep “people” in mind rather than just lower class people and I do said that everybody will need help EVENTUALLY and I do said that don’t use ‘Treat People as People’ only when needed.. 80 peru thannila moolgrappo naan 60 pera mattumthan kaapathuven (eventhough when they have 10 good swimmers among those 60 who can rescue themselves) just because they are lower class and will leave the other 20 people drownedngratha yennala othukka mudiyalai.. all I said was we should put all our efforts in rescuing the struggling 50 but also keep an eye on the other upper class 20 who might need the help sooner or later.. as I told you in my earlier email I don’t need you to point out a real life example, even though I might not be doing anything but do learn about the issues and do get affected by it, so again you don’t have to point it to me.. I hatehate proving to people, not just my social responsibility about anything so if you think I don’t have a social responsibility and shouldn’t give an opinion then it’s your problem, I don’t give a damn.. but do keep in mind that everyone is one way or another a NERMAIYAANA KOMBAN !!!



Soori



--- On Wed, 9/24/08, Packiarajan S wrote:

From: Packiarajan S
Subject: Re: [ellistopp] FW: The Ant And The Grasshopper [Old Story - New Version] Really nice one go through it
To: ellistopp@yahoogrou ps.com
Date: Wednesday, September 24, 2008, 11:45 PM



நண்பா உன்னிடம் சமூக அக்கறை இருப்பதை கண்டு மகிழ்ச்சி...

ஆனால் ஒரு வருத்தம்...

இதுவரைக்கும் 305 தமிழ் மீனவர்கள் அண்டை நாட்டு ராணுவத்தால் சுட்டு கொல்லப்படும், ஆயிரகணக்கான தடவை தாக்கப்பட்டும் அது இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கும் பொழுது வராத சமூக அக்கறை...

81 தமிழ் விவசாயிகள் எலிகறி சாப்பிட்டு, பின்பு அது கூட கிடைக்காமல் விஷம் அருந்தி இறந்த பொழுது வராத அக்கறை...

லட்சகணக்கான ஈழத்தமிழர் உயிரிழந்து, வீடிழந்து, உடமை இழந்தபோது வராத அக்கறை... அவர்கள் அகதியாய் வந்து தஞ்சமடைத்த பின்பும் திறந்த வெளி சிறைசாலையில் நாயினும் கேவலமாய் நடத்தப்படும் பொழுது வராத அக்கறை...

தமிழக வளத்தை பெருக்க ஒரு திட்டம் வருகையில் மதத்தின் பெயரால் அதை தடுக்கப்படும் பொழுது அதை முறியடிக்க வேண்டும் என வராத அக்கறை...

உச்சநீதி மன்றமே ஆணை இட்டபின்பும் ஒரே இந்தியாவில் இருக்கும் அண்டை மாநிலங்கள் தண்ணீர் தர மறுத்து அட்டுழியம் செய்யும் பொழுது அதை எதிர்த்து வராத அக்கறை...

நம் பக்கம் விழும் தண்ணீரை குடிநீராக்கி மக்கள் தாகம் தீர்க்க திட்டம் தொடங்கும் முன்னரே அண்டை மாநிலம் எதிர்ப்பு தெரிவித்து தடுக்க முனைகையில் வராத அக்கறை...
இப்பிரச்சனையால் அப்பாவி தமிழர் மூவர் பேருந்தோடு கர்நாடகாவில் எரிக்கப்பட்ட பொது வராத அக்கறை..

மேல்சாதி மிருகங்களால் கடந்த மாதம் முன்பு தாழ்த்தப்பட்ட என் சகோதரி வாயில் மலம் திணித்து தன் ஆதிக்க சாதி வெறியை காட்டிய காட்டுமிராண்டிகளை எதிர்த்து வராத அக்கறை...

சேலத்தில் இன்னும் பல உறவுகள், எல்லோருக்கும் பொதுவான கடவுளை கூட கோயிலினுள் சென்று
தரிசக்கமுடியாத கேடுகெட்ட நிலையை கண்டு அதை போக்க வராத அக்கறை...

மனித மலத்தை மனிதன் அல்லும் கொடுமையை காலம் காலமாக நம் பல சொந்தங்கள் செய்கையில், அது புனித தொழில் அதை தொடர்ந்து செய்யுங்கள் என மேல் சாதி நாய்கள் சொல்லி மேலும் பல காலம் நம்மை அடிமையாக்க துடிக்கையில் அக்கொடுமை போக்க, அதை எதிர்த்து குரல் கொடுக்க வராத அக்கறை..

குஜராத்தில் மதவெறி அரசியலால் பல ஆயிரம் சிறுபான்மையினர் உயிரோடு கொளுத்தபட்டார்களே அவர்கள் உடைமைகள் சூரையாடபட்டனவே.. அப்பொழுது வராத அக்கறை..

ஒரிசாவில் மதம் தலைவிரித்தாடி பல லட்சம் பேர் வீடிழந்து, உடமை இழந்து நடுத்தெருவில் நின்றுகொண்டிருக்கும் நிலையில் வராத அக்கறை...

கடைசியாக, உயரினும் மேலாம் தாய்மொழி அம்மொழி கொஞ்சம் கொஞ்சமாய் தன்னுயிரை விட்டுகொண்டிருக்கையில் தன்னாலான அளவு அதை காப்பாற்ற வேண்டும் என்று வராத அக்கறை...

இட ஒதிக்கீடில் மட்டும் வருவது ஏன்?..

நீ மேற்சொன்ன விஷயத்துக்கெல்லாம் அக்கறை கொள்ளமாட்டாய், வருத்தபடமட்டாய் என்றோ வருத்த படவில்லை என்றோ குற்றம் சொல்லவில்லை நண்பா.. ஆனால் இதுக்கெல்லாம் நீ இதே போல் ஒரு எறும்பு கதை சொல்லவில்லையே நண்பா.. அது தான் என் கவலை..

இல்லை இது தான் உன் சமூக அக்கறை என்றால் அந்த ________ (Sorry, I am not unformal us u, so please fill what ever u want) அக்கறை எங்களுக்கு வேண்டாம்... அப்படி அக்கறைகொண்டவன் தான் எங்களுக்கு முதல் எதிரி...

பல நூறு ஆண்டுகளாக இப்படி நூதன பிரச்சாரம் நடந்துகொண்டே தான் இருக்கிறது, இட ஒதிக்கீடு வேண்டாம் சொல்வது இபோதைய இளைஞகள் மத்தியில் ஒரு மோகம். இது தான் சமூக அக்கறையை என்பது போல் தோற்றம் உருவாக்கி விட்டார்கள்.. நீயும் அதை பின்பற்றுவது ஆச்சிரியம் இல்லை...

//but there are people from the so called “upper caste” who suffer due to the reservation and there are also some lower caste guys who remove their gold chain/rings and get into the principal’s room to accept the money sanctioned for them.. for both the cases you don’t have to look beyond our friends for examples..//

உன்னால் பாதிக்கப்பட்ட ஒரு சில ஆட்களை காட்ட முடியும்... என்னால் உண்மையிலேயே பயன் அடைந்த பல கோடி குடும்பங்களை காட்ட முடியும்... இன்னும் பல கோடி குடும்பங்கள் இதனால் பயனடைய போகிறது என்பதும் உண்மை... ஒரு சில ஆட்கள் முக்கியமா இல்லை ஒரு சமுதாய முனேற்றம் முக்கியமா என்பதை நீயே முடிவு செய்துகொள்...






----- Original Message ----
From: Sooria Jeyaraman
To: ellistopp@yahoogrou ps.com
Sent: Wednesday, 24 September, 2008 5:20:49 PM
Subject: Re: [ellistopp] FW: The Ant And The Grasshopper [Old Story - New Version] Really nice one go through it


All rite.. First of all I wasn’t trying to start a debate or hurt anyone.. secondly the one and only way that the way I am now(good or bad) was due to an engineering free seat that I got using the caste quota so I totally understand the value of reservation, you are kinda preaching to the choir and I don’t need a REALITY example.. that story was just a story and I wasn’t trying to compare/insult anyone, it needed to be taken with a grain of salt..




Now to the matter.. I think you guys misunderstood what I was trying to say, I wasn’t rooting for taking out the reservation, I was suggesting an ‘economy’ based reservation not immediately but in the future.. In my humble opinion, there are people on both the sides of the fence who gets affected by the reservation. . as for the reality, there are plenty of examples that you can bring to the table where the dalits are getting suppressed.. I accept admit, not a percent of doubt about that.. but there are people from the so called “upper caste” who suffer due to the reservation and there are also some lower caste guys who remove their gold chain/rings and get into the principal’s room to accept the money sanctioned for them.. for both the cases you don’t have to look beyond our friends for examples.. now I’m not saying the majority of the people are like that but it’s a growing minority of people who gets benefited/not benefited because of reservation, why do you have to turn a blind eye on that.. All I was saying was if we are asking for a level playing field, apply it to everyone.. we shouldn’t be taking away the benefits from someone just because their ancestors had a good life. Again calm down your nerves, I totally understand the pathetic situation that still majority of our fellow human beings suffer just because they are dalits even in this “modern day” India, c


Packia, I too reflect the same sentiment as your last line, Manithanai manithanaai paarkira manapaanmai (I know it’s not anywhere close to happening now) and although I was seeing from the other side of the coin, I was also strongly suggesting the same thing ‘treat people as people’, its sad that no one got that!! I thought if we start doing that then the caste based reservation will become an economy based reservation, again not now but eventually.. you could’ve just told me that ‘dei venna nee pesrathu thappuda, puriyaama pesra ippo irukra nilamailla innum 50 yrsavathu minimum aagum to get dalit people accepted in the society’nnu you could have, rather than insulting as though I don’t understand.. sorry I cannot be as formal as you, what the fuck do you mean by ‘மேல்தட்டு பிரச்சாரம் வேண்டாம் நண்பா...’.. and why the fuck you guys think that people like me won’t understand.. immediately don’t point me to an example of dalit suppression, I get it TOTALLY, Ok.. I’m just trying to understand me better and understand why the thing understood by you guys is perceived as not understood by us..Though selfish, I too have some social responsibility, at least that’s what I think and Though not as committed, we too want to be a part of a change that brings prosperity..




I know you guys would be thinking that I totally don’t know what’s happening in the actual field(which is most likely true) and talking as though we are in an ideal world but all I was saying was we totally understand the insults and in injustice done to a dalit individual which is atrocious and shouldn’t be happening at all but we should also try to understand the affected people from the other side which might be a minority now but might not be forever, if not we’ll be moving towards a wrong direction, again not now but eventually ..



Sooria

--- On Wed, 9/24/08, Somu Kumar wrote:

From: Somu Kumar
Subject: Re: [ellistopp] FW: The Ant And The Grasshopper [Old Story - New Version] Really nice one go through it
To: ellistopp@yahoogrou ps.com
Date: Wednesday, September 24, 2008, 2:49 PM



I very strongly agree with Packia.

Its a sad joke from the author to compare SC/ST students to grasshoppers. They are working hard in their own level but it may not /should not be compared with the so-called "forward" caste students because the main thing to be asked is: Where is the "LEVEL PLAYING FIELD"?

When these folks can study in schools like SDA, TVS & VIKSAS, have 4 tuitions, special coaching & a two-wheeler to hop around to all these and finally get two year special coaching for IITs while the poor dalit student in village won't have a proper school to attend. He has not idea what entrance is and how to face competitive exams. We should understand that its not just because of poverty but mainly because of systematic oppression happened over centuries. His grandfathers were kicked out of schools and made to do menial jobs which is the reason for his illitirate family background.

The same government which is subsidizing those in towns with good power connection, good schools, good roads etc, are letting old govt schools degrade further in which the dalit students study. How is it justified?

So, to me, its actually asking Usain Bolt to run in special olympics competing against handicapped runners. So, it is Social Justice thats playing in to make the playing field even and hence reservation.

Unfortunately, all these Ant & Grasshoper story evolves in IITs by just seeing few folks who are wealthy for generations but still use SC quota. They are failing to understand that those creamy layer is less than 1% of all Dalits and not representative of majority who are still suffering.

Remember khairlanji??? this is still the story of Dalits in rural areas.

-- Somu


2008/9/23 Packiarajan S



Can you tell me one strong reason to check back the reality?...

I can list u the REALITY of backward people in India, If u need.

இட ஒதிக்கீடு பொருளாதார முன்னேற்றத்துக்கு மட்டுமல்ல நண்பா.... சமுக நீதிக்காகவும் தான்...

இன்னும் தாழ்த்தப்பட்ட என் உறவுகள் சாமி கும்பிட கூட கோயிலுக்குள்ள போகமுடியாத சமுக நீதி நிலவுகிற சூழ்நிலையில இந்தமாதிரி மேல்தட்டு பிரச்சாரம் வேண்டாம் நண்பா...

மனிதனை மனிதனாக மதிக்காத நாட்டுல இருக்கோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்...




----- Original Message ----
From: Sooria Jeyaraman
To: ellistopp@yahoogrou ps.com
Sent: Tuesday, 23 September, 2008 12:36:49 PM
Subject: [ellistopp] FW: The Ant And The Grasshopper [Old Story - New Version] Really nice one go through it



Samuthaaya aarvalar kovichukittalum, this is true.. being brought up by (some) reservation, I shouldn't be the one criticizing it but we need a check back on reality..

Soori


An Old Story:

The Ant works hard in the withering heat all summer building its house and laying up supplies for the winter.

The Grasshopper thinks the Ant is a fool and laughs dances plays the summer away.

Come winter, the Ant is warm and well fed. The Grasshopper has no food or shelter so he dies out in the cold.


New Indian Version:

The Ant works hard in the withering heat all summer building its house and laying up supplies for the winter.

The Grasshopper thinks the Ant's a fool and laughs dances plays the summer away.

Come winter, the shivering Grasshopper calls a press conference and demands to know why the Ant should be allowed to be warm and well fed while others are cold and starving.

NDTV, BBC, CNN show up to provide pictures of the shivering Grasshopper next to a video of the Ant in his comfortable home with a table filled with food.

The World is stunned by the sharp contrast. How can this be that this poor Grasshopper is allowed to suffer so?

Arundhati Roy stages a demonstration in front of the Ant's house.

Medha Patkar goes on a fast along with other Grasshoppers demanding that Grasshoppers be relocated to warmer climates during winter .

Mayawati states this as `injustice' done on Minorities.

Amnesty International and Koffi Annan criticize the Indian Government for not upholding the fundamental rights of the Grasshopper.

The Internet is flooded with online petitions seeking support to the Grasshopper (many promising Heaven and Everlasting Peace for prompt support as against the wrath of God for non-compliance) .

Opposition MPs stage a walkout. Left parties call for 'Bengal Bandh' in West Bengal and Kerala demanding a Judicial Enquiry.

CPM in Kerala immediately passes a law preventing Ants from working hard in the heat so as to bring about equality of poverty among Ants and Grasshoppers.

Lalu Prasad allocates one free coach to Grasshoppers on all Indian Railway Trains, aptly named as the 'Grasshopper Rath'.

Finally, the Judicial Committee drafts the ' Prevention of Terrorism Against Grasshoppers Act' [POTAGA], with effect from the beginning of the winter.

Arjun Singh makes 'Special Reservation ' for Grasshoppers in Educational Institutions in Government Services.

The Ant is fined for failing to comply with POTAGA and having nothing left to pay his retroactive taxes,it's home is confiscated by the Government and handed over to the Grasshopper in a ceremony covered by NDTV.

Arundhati Roy calls it ' A Triumph of Justice'.

Lalu calls it 'Socialistic Justice '.

CPM calls it the ' Revolutionary Resurgence of the Downtrodden '

Koffi Annan invites the Grasshopper to address the UN General Assembly.

Many years later...

The Ant has since migrated to the US and set up a multi-billion dollar company in Silicon Valley,

100s of Grasshoppers still die of starvation despite reservation somewhere in India ,

..AND

As a result of losing lot of hard working Ants and feeding the grasshoppers, India is still a developing country...!! ! :) :) :)

2 comments:

புருனோ Bruno said...

சூப்பர் ...

நெத்தியடி..

மேலும் விபரங்களுக்கு

http://www.payanangal.in/2008/09/caste-quota-reservation-india-obc-sc.html

-*-

யாராவது மின்னஞ்சல் அனுப்பினால் திருப்பு அனுப்ப வேறொரு எறும்பு கதை இங்குள்ளது

யாராவது எறும்பு கதை மின்னஞ்சல் அனுப்பினால் அவருக்கு திருப்பு அனுப்ப
http://sixth-finger.blogspot.com/2008/07/55-old-story-retold.html
கதையை பார்க்கவும்

Thamizhan said...

இட ஒதுக்கீட்டின் முழு விவரங்களையும் ஒழுங்காக எடுத்துச் சொல்லாத குறையை ஓரளவு நீக்கியிருக்கிறீர்கள்.நன்றி.
பயனடைந்தோர் தங்கள் குழந்தைகளுக்கே எடுத்துச் சொல்லாமல் விட்டிருப்பது தான் பெருங்குறை.
இன்றைய இந்தியாவின் புள்ளி விவரங்களைப் பார்ப்பவர்கட்கே புரியும்,இன்னும் எவ்வளவு கொடுமையாக ஆட்சியில் உள்ள அதிகாரிகள் இட ஒதுக்கீட்டை ஒழிக்க,குறைக்க எவ்வளவு மூடி மறைத்து வேலை செய்கிறார்கள் என்று.
சட்டத்தை நடை முறைப் படுத்த வேண்டிய அதிகாரிகளே இன்னும் எதிரிகளாக இருப்பதால் 60 ஆண்டுகளாக ஒழுங்காக இட் ஒதுக்கீடு செய்யாமல் உள்ளது.
இந்திய அரசிய்ல சட்டத்தையே வளைத்துப் பொருளாதார வரைமுறையை உச்ச நீதி மன்றம் மக்கள் மன்றத்திற்கு எதிராக உண்டாக்கியுள்ளது கொடுமை.
உச்ச நீதி மன்ற ஜாதிப் பட்டியலைப் பார்த்தால் புரியும் ஏனென்று.அவர்களுக்கு வேண்டியவர்களை அவர்களாகவே நியமித்துக் கொள்ளும் அநியாயத்தை அவர்களாகவே அபகரித்துக் கொண்டு நடித்து வருகின்றனர்.விளக்கமாகப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டிய கருத்து,
மண்டல் அறிக்கையைப் படித்தால் அநியாயமும் அக்கிரமும் விளங்கும்.